அமெரிக்கா: 4 வயது மகளின் தொலைந்த டெடி பியர் பொம்மையை தேடும் தந்தை - நெகிழவைக்கும் காரணம்! ஃபேஸ்புக்
உலகம்

அமெரிக்கா: 4 வயது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடும் தந்தை - நெகிழ வைக்கும் காரணம்!

இங்கும் ஒரு தந்தை தனது மகளின் தொலைந்து போன பொம்மையை தேடி அலைகிறார். எப்படியாவது அதனை மகளுக்கு கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என தன்னால் இயன்ற வரை தேடி வருகிறார்.

Keerthanaa R

தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர். ஊரையே அலசி அந்த பொம்மையை ஏன் தேடி வருகிறார் என அவர் பகிர்ந்த காரணம் கேட்பவர்களை மனம் நெகிழ செய்துள்ளது

தந்தை மகள் உறவு எப்போதும் ஸ்பெஷல். டாடீஸ் லிட்டில் ப்ரின்சஸ் என்று நாம் கேலிக்காக சொன்னாலும், மகள்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் அப்பா தான்.

இங்கும் ஒரு தந்தை தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி அலைகிறார். எப்படியாவது அதனை மகளுக்கு கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என தன்னால் இயன்ற வரை தேடி வருகிறார்.

அமெரிக்காவின் டெனெஸ்ஸி பகுதியை சேர்ந்தவர் டைலர் கென்னடி. இவருக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். சில காலம் முன்னர் கென்னடியின் மனைவி இறந்துவிட்டார். இதனால், அந்த குழந்தையின் பாட்டி, கென்னடியின் மனைவியுடைய இதயத்துடிப்பு அடங்கிய டெடி பியர் பொம்மை ஒன்றினை பேத்திக்கு வழங்கினார்.

பொம்மையின் கையை அழுத்தினால், தாயின் இதயத்துடிப்பு சத்தம் கேட்கும் வகையில் அந்த பொம்மை செய்யப்பட்டிருந்தது. வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பொருட்களை உள்ளூர் ஸ்டோர் ஒன்றிற்கு தானமாக வழங்கும்போது தவறுதலாக இந்த டெடி பியர் பொம்மையும் சென்றுவிட்டது.

இதனை அறிந்த குழந்தையின் தந்தை கென்னடி, நடந்தவற்றை கூறி பொம்மை யாரிடமாவது இருந்தால் திருப்பித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது தாயின் ஞாபகமாக மகளிடம் இருக்கும் ஒரு பொருள் அந்த பொம்மை என்றும், இதனை தயவு செய்து கண்டுபிடித்து திருப்பித் தரவேண்டும் எனவும் அந்த ஸ்டோர் உரிமையாளருக்கும், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் செய்தி அனுப்பியிருக்கிறார் கென்னடி. இதற்கான பணத்தையும் அவர் தந்துவிடுவதாக தெரிவித்துள்ளார்

கடையின் உரிமையாளர், நிச்சயம் அந்த பொம்மை சுற்றுவட்டாரத்தில் யாரிடமாவது தான் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பொம்மையை பற்றிய தகவல்கள் அடங்கிய போஸ்டர்களையும் அச்சடித்து, கென்னடியின் முகவரியுடன் அங்கங்கு ஓடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளின் தொலைந்துபோன பொம்மையை கண்டுபிடிக்க தந்தை எடுத்துவரும் முயற்சிகளும், அதன் பின்னால் இருக்கும் காரணமும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?