Heatwave Twitter
உலகம்

பற்றி எரியும் ஐரோப்பியா : என்ன நடக்கிறது அங்கே? - அதிர வைக்கும் கள தகவல்

Gautham

பிரிட்டனில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் இந்த ஜூலை மாதம், வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், கிரீஸ்... எனப் பல ஐரோப்பிய நாடுகளில் காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுத் தீயில் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுடைய சொந்த வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் காட்டுத் தீ பிரச்சனையால் ரயிலை ஓட்ட முடியாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டில் வயதான தம்பதியினர் காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முடியாமல் இறந்துள்ளனர்.

Climate Change

மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது உலகம் முழுக்க அடிக்கடி வெப்ப அலை ஏற்படுகிறது. இந்த வெப்ப அலைகள் முன்பைவிட மிக தீவிரமாகவும் நீண்ட நாட்கள் நீடிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. மனிதன் உருவாக்கிய காலநிலை மாற்றத்தை தற்போது மனித இனத்தாலேயே தாங்க முடியவில்லை.

மிகக் கடுமையான வெப்பநிலை, வறட்சி வெள்ளம் போன்ற சூழல்களைச் சமாளிக்க ஜெர்மனி வைத்திருக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது காலநிலை மாற்றம் என ஜெர்மனி நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஸ்டெபி லெம்கே பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டு தீ பிரச்சனையால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர். பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராண்டே (Gironde) என்கிற பிரபல சுற்றுலாத்தலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு படையினர் மிகக் கடுமையாகப் போராடி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 47 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பைக் காட்டுத்தீ நாசம் செய்து உள்ளதாக பிபிசியில் செய்தி வெளியானது.

wildfire

பிரான்ஸ் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு திசையில் உள்ள பிரிட்டனி (Brittany) என்கிற நகரத்தை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 1,400 ஹெட் செடி கொடிகள் கொண்ட நிலப்பரப்பைக் காட்டுத்தீ அழித்துள்ளது.

லா டெஸ்டெ டி புச் (La Teste-de-Buch) விலங்கியல் பூங்காவில் சுமார் 12 விலங்குகள் காட்டுத் தீயின் கடும் வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. கால்நடை மருத்துவர்கள், பூங்காவை நிர்வகிக்கும் ஊழியர்கள் உட்படப் பல தரப்பினர் ஒன்று சேர்ந்து, இதுவரை 363 விலங்குகளை சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போர்டெக்ஸ் பீசக் (Bordeaux-Pessac) விலங்கியல் பூங்காவில் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்துள்ளனர்.

பிரிட்டன் நாட்டின் வானிலை ஆய்வு மைய அலுவலகம், நேற்று (செவ்வாய்கிழமை) ஹீத்ரூ விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகக் கூறியுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரிட்டன் மக்களை எச்சரித்துள்ளது.

மத்திய, வடக்கு, தென்கிழக்கு இங்கிலாந்து பகுதியில் மிகக் கடுமையான வெப்பநிலை நிலவலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் தெற்கு பகுதியில் வெப்பநிலை சுமார் 40 டிகிரியை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெல்ஜியத்தின் டன்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

மேற்கு மற்றும் தென்மேற்கு ஜெர்மனியிலும் இதே அளவுக்கு வெப்பநிலை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜெர்மனியின் டூயிஸ்பர்க் (Duisburg) பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல அதிகப்படியான வெப்பநிலை ரெயின் நதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் பதிவாகலாம் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Heatwave

நெதர்லாந்தில் நேற்று ஜூலை 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாஸ்ட்ரீச்ட் (Maastricht) நகரத்தில் 38.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அந்நாட்டிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, கடந்த சில நாட்களில் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லுசாய்கோ (Losaico) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

போர்ச்சுகல் நாட்டில் இந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்ரா (Mucra) நகரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர். 70 வயது தம்பதியினர் ஒருவர் காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயன்று உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

போச்சுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க நாட்டின் தீயணைப்புத் துறை மூன்று முனைகளிலிருந்தும் மும்முரமாகத் தீயணைப்புப் படையினர் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 3000 ஹெக்டேர் நிலம் எரிந்து சாம்பலாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இதேபோல ஒரு கொடூர காட்டுத் தீ சம்பவத்தில் 66 பேர் பலியாயினர். அப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என போர்ச்சுகல் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

wildfire

ஸ்பெயினில் சுமார் 20 இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கிறது. இத்தாலி நாட்டில் இந்த வாரப் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டின் வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் தொடலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உலகின் வெப்பநிலை, தொழில் புரட்சி காலத்திலிருந்து 1.1 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது. உலக நாடுகள் தங்களது நச்சு மற்றும் வளிமண்டலத்தில் வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய வாயுக்கள் உமிழ்வை நிறுத்திக் கொள்ளவில்லை எனில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். வெப்ப அலைகள் இன்னும் மோசமாகவும் தீவிரமாகவும் வரும். அப்படி வரும் வெப்ப அலைகளை மனித இனத்தால் எதிர்கொள்ள முடியுமா..? நிலத்தில் விவசாயம் செய்ய முடியுமா? என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?