2022 - நகைச்சுவையான புகைப்படங்கள் - விருதை தட்டி சென்ற இந்தியர்! ஒரு க்யூட் தொகுப்பு ட்விட்டர்
உலகம்

2022 -ன் நகைச்சுவையான புகைப்படங்கள் - விருதை தட்டி சென்ற இந்தியர்! ஒரு க்யூட் தொகுப்பு

ஒவ்வொரு முறை அந்த புகைப்படத்தை பார்க்கும்போதும், அந்த தருணமும், அன்று நடந்த விஷயங்களும் நம் மனதில் ஒரு டிரெய்லராக வந்து செல்லும்.

Keerthanaa R

புகைப்படம் எடுப்பது ஒரு கலை. ஒரு புகைப்படம் மூலம் காலத்திற்கும் அந்த நொடியை நாம் பூட்டிவைத்துகொள்கிறோம். ஒரு விதத்தில் காலத்தை வெல்லும் ஒரு செயலாக கூட இதை பார்க்கலாம்.

ஒவ்வொரு முறை அந்த புகைப்படத்தை பார்க்கும்போதும், அந்த தருணமும், அன்று நடந்த விஷயங்களும் நம் மனதில் ஒரு டிரெய்லராக வந்து செல்லும்.

2022ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர்கள் சிலர் எடுத்திருந்த நகைச்சுவையான புகைப்படங்களின் தொகுப்பு தான் இது. இந்த புகைப்படங்கள், 2022ஆம் ஆண்டுக்கான Comedy Wildlife Photography விருதுகளை வென்றவையாகும்.

இதில் இந்திய புகைப்பட கலைஞர் அர்ஷதீப் சிங் எடுத்த ஒரு புகைப்படமும் அடங்கும். அந்த புகைப்படத்திற்கு ஜூனியர் அவார்ட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

வெற்றியாளர்:

இந்த Comedy Wildlife Photography awards 2022ன் வெற்றியாளர் ஜெனிஃபர் ஹட்லீ. இவர் எடுத்திருந்த Not So cat like reflexes என்ற புகைப்படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

முதன்முதலாக மரம் ஏற முயற்சி செய்த ஒரு சிங்கக்குட்டி ஏற முடியாமல் தடுமாறி கீழே விழுந்துள்ளது. அந்த தருணத்தை புகைப்படமாக எடுத்திருந்தார் ஜெனிஃபர்.

Spectrum Photo Creatures in the Air விருது:

இந்த விருதினை பிரஞ்சு புகைப்பட கலைஞர் ஜீன் ஜேக்கஸ் அல்கலே என்பவர் வென்றார். Misleading African viewpoints 2 என்ற தலைப்பில் இருந்த இந்த புகைப்படத்தில் நீர்யானை ஒன்றின் மீது ஹெரான் பறவை நின்றுக்கொண்டிருக்கிறது. அந்த பறவைக்கு பின்னால் இருக்கும் மற்றொரு நீர்யானை கொட்டாவி விடுகிறது. இதை தான் புகைப்படமாக எடுத்திருக்கிறார் ஜீன். இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அந்த நீர்யானை பறவையை சாப்பிடப்போவது போல தோன்றுகிறது.

Creatures Under the Sea விருது:

ட்ரிக்கர் ஃபிஷ் என்ற வகை மீன்கள் இரண்டை இந்த புகைப்படத்தில் பார்க்கலாம். இந்த இரண்டும் க்யூட்டாக ஃபோட்டொவிற்கு போஸ் கொடுக்கின்றன. 'Say cheeeese' என தலைப்பிடப்பட்ட இந்த புகைப்படத்தை ஸ்பெயின் புகைப்படக் கலைஞர் ஆர்டுரோ டெல்லே தீம்மான் என்பவர் எடுத்துள்ளார்

People's Choice விருது:

கடற்கரையில் நின்றுக்கொண்டிருக்கும் ஒரு பென்குயின் மற்றொரு பென்குயினை பார்த்து “என்னிடம் பேசாதே” என்பது போல சைகை காட்டுகிறது. இந்த ஃபோட்டொவையும் ஜெனிஃபர் ஹட்லீ தான் எடுத்திருக்கிறார்

ஜூனியர் விருது:

ஆந்தை ஒன்று கண்ணடிப்பது போன்ற புகைப்படம் இது. இந்த புகைப்படத்தை இந்திய புகைப்படக் கலைஞர் அர்ஷதீப் சிங் எடுத்திருக்கிறார். "I See You, Boy!" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ஜூனியர் விருது கிடைத்துள்ளது.

Amazing Internet Portfolio விருது:

பைன் மரத்தில் இருந்து விழுந்த ஒரு pine coneஐ எடுத்து ஃபுட்பால் ஆடுகிறது cooper's hawk பறவை. இதனை ஜியா சென் என்ற புகைப்பட கலைஞர் எடுத்திருந்தார்.

இவற்றை தவிர நடுவர்களின் சிறப்பு பாராட்டுகளை பெற்ற சில புகைப்படங்களும் உள்ளன.

Hello everyone' by Miroslav Srb. (Czech Republic)

'Monkey Wellness Centre' by Federica Vinci (Italian)

Pegasus, the flying horse' by Jagdeep Rajput (Indian)

I'm gonna strangle you!' by Emmanuel Do Linh San (South African)

Fight Back' by John Chaney (USA)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?