முன்னாள் ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி Twitter
உலகம்

ஹிண்டர்பெர்க் அட்டாக் : தப்பிப்பாரா முன்னாள் ட்விட்டர் CEO Jack Patrick Dorsey? Explained

அதோடு, அதானி நிறுவனத்துக்கு எதிராகவும் முதலீடு செய்தது. அதாவது ஷார்ட் பொசிஷன் எடுத்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது. சில மாதங்களுக்கு முன் ஹிண்டன்பெர்க் பற்ற வைத்த நெருப்பு, இன்று வரை இந்திய அரசியல் வட்டாரத்திலோ, கார்ப்பரேட் வட்டத்திலோ அணைந்ததாகத் தெரியவில்லை.

NewsSense Editorial Team

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற பெயரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியர்கள் பலருக்கும் தெரிய வந்திருக்கும். உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக இருந்த கெளதம் அதானியின் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதில் பலதும் சட்ட விரோதமானது, பங்குச் சந்தை விதிமுறைகளுக்கு எதிரானது என குற்றம்சாட்டியது ஹிண்டன்பெர்க்.

அதோடு, அதானி நிறுவனத்துக்கு எதிராகவும் முதலீடு செய்தது. அதாவது ஷார்ட் பொசிஷன் எடுத்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது. சில மாதங்களுக்கு முன் ஹிண்டன்பெர்க் பற்ற வைத்த நெருப்பு, இன்று வரை இந்திய அரசியல் வட்டாரத்திலோ, கார்ப்பரேட் வட்டத்திலோ அணைந்ததாகத் தெரியவில்லை. அதற்குள் ஹிண்டன்பெர்க் அடுத்த வேட்டைக்கு தயாராகிவிட்டது.

இந்த முறை, ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டார்ஸியின் நிறுவனத்தை குறிவைத்திருக்கிறது.

பிரச்சனை என்ன?

ஜாக் டார்ஸி ட்விட்டர் நிறுவனத்தை நிறுவி நடத்திக் கொண்டிருந்த போதே, ஸ்கொயர் என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கினார். ஸ்கொயர் நிறுவனத்தை ஜாக் டார்ஸி உடன் ஜிம் மெக்கெல்வெ என்பவரும் இணைந்து தொடங்கினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நியூ யார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டு இன்று வரை வர்த்தகமாகி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கொயர் என்கிற பெயரை பிளாக் என மாற்றிக் கொண்டது.

சமீபத்தில், ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், பிளாக் இன்க் நிறுவனம் எதையும் புதிதாகச் செய்யவில்லை, மாறாக பிளாக் நிறுவனம் மோசடிகள் அரங்கேறுவதற்கும், அரசின் நெறிமுறைகளில் சிக்காமல் வளைந்து நெலிந்து வியாபாரம் செய்யவும், வாடிக்கையாளர்களின் கழுத்தை நெறிக்கும் வகையிலான கடன்களை ஊக்குவிக்கும் வேலைகளைச் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளதாக பிசினஸ் டுடே வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பிளாக் நிறுவனம் தன் பயனர்களின் எண்ணிக்கையை மிகவும் அதிகப்படுத்திக் கூறி இருப்பதாகவும், ஒரு வாடிக்கையாளரை பிடிக்க செய்யும் செலவீனங்களைக் (Customer Acquisition Cost) குறைத்துச் சொல்லி இருப்பதாகவும் கூறியுள்ளது ராய்டர்ஸ் செய்தி முகமை.

பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் அமைப்புகளுக்கு மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் மிகவும் முக்கியமானவை. இது போன்ற விஷயங்களை மறைப்பது அல்லது திரித்துச் சொல்வது கிட்டத்தட்ட சட்ட விரோதமான செயல் என்றும் கூறலாம்.

அதே போல, பிளாக் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கும் கேஷ் ஆப் (Cash App)

செயலியில் எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப், ஜாக் டார்ஸி போன்ற பெயர்களில் எல்லாம் பல பயனர்கள் இருப்பதாகவும், பயனர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்கு குழப்பம் தரக்கூடியதாக இருப்பதாகவும் ஹிண்டர்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம். இது தான் முதல் மற்றும் பெரிய குற்றச்சாட்டு.

வித்து அள்ளிய நிறுவனர்கள்:

எந்த ஒரு தொழிலையும் நடத்தும் நபருடைய முதல் பணம் இருந்தால், அந்த தொழிலில் பல முதலீட்டாளர்கள் நம்பி பணம் போடுவர். ஒருவேளை தொழிலை நடத்தும் முதலாளி பணத்தையே போடவில்லை அல்லது போட்ட பணத்தை சில ஆண்டுகளிலேயே வெளியே எடுத்துவிட்டார் என்றால், அது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 18 மாத காலத்துக்குள் பிளாக் நிறுவன பங்கின் விலை சுமார் 639 சதவீதம் அதிகரித்தது. இப்படி விலை அதிகரித்த காலகட்டத்தில், பிளாக் இன்க் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டார்ஸி மற்றும் ஜேம்ஸ் மெக்கெல்வெ சேர்ந்து சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பங்குகளை விற்று அள்ளியதாகவும் ஹிண்டன்பெர்க் குற்றம்சாட்டியுள்ளது. சொல்லப்போனால் ஜாக் டார்ஸி பங்குகளை விற்றதாகக் கூடச் சொல்லாமல், டம்ப் செய்ததாகச் சொல்கிறது ஹிண்டன்பெர்க்.

நிறுவனர்களோடு, அந்த நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலர் அம்ருதா ஆஹுஜாவும், கேஷ் ஆப் செயலியின் முதன்மை மேலாளர் பிரியன் கிராசாடொனியாவும் பங்குகளை டம்ப் செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம்.

தடாலடி வீழ்ச்சியில் பங்கு விலை:

கடந்த மார்ச் 22ஆம் தேதி சுமார் 72.9 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பிளாக் இன்க் நிறுவன பங்கின் விலை, ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி அதிகபட்சமாக 56 அமெரிக்க டாலர் வரை சரிந்தது.

இந்திய நேரப்படி மார்ச் 23ஆம் தேதி இரவு 9 மணி வாக்கில் சற்றே வீழ்ச்சி கட்டுக்குள் வந்து சுமார் 62 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

இதுவரை ஜாக் டார்ஸி தரப்பிலிருந்தோ, பிளாக் இன்க் நிறுவன தரப்பிலிருந்தோ ஹிண்டன்பெர்க் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளதித்ததாகத் தெரியவில்லை. விரைவில் நிறுவன தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை ஹிண்டன்பெர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனில், பிளாக் இன்க் நிறுவன பங்குகளின் விலை மேலும் தரைதட்டலாம் என எதிர்பார்க்கலாம். எது எப்படியோ, மக்கள் பணம் பாதுகாக்கப்பட்டால் சரி.

தொடர்ந்து அமெரிக்க வங்கிகள் திவாலாவதைத் தொடர்ந்து, தற்போது ஜாக் டார்ஸி போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான் இருக்கும் நிறுவனத்திலேயே முய்தலீட்டாளர்களுக்கு தெரிய வேண்டிய விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளது அமெரிக்க வல்லரசின் நிதி & பங்குச் சந்தை நிர்வாகம் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?