அதானி நிறுவனத்தின் நிதி மோசடியை Hindenburg Research என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அது என்ன Hindenburg?
இதன் பெயர் காரணத்தை தெரிந்து கொள்ள இன்னும் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரைட் சகோதரர்கள் 1903ஆம் ஆண்டே விமானத்தை இயக்கிவிட்டார்கள் என்றாலும், அது பொதுமக்கள் பயணிக்க உதவும் அளவுக்கு ஒரு எளிதான சாதனமாக உருவெடுக்க சில பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.
எனவே அப்போது, வான்வழிப் பயணம் தொடர்பாக, பலரும் பல தொழில்நுட்பங்களை முன்வைத்தனர், சில தொழில்நுட்பங்கள் புழக்கத்திலும் இருந்தன.
அப்படி 1930களில் வான்வழிப் பயணத்துக்கு விமானத்தைத் தாண்டி, ஹைட்ரஜன் வாயுவைக் கொண்டு இயங்கும் ஏர் ஷிப்கள் புழக்கத்தில் இருந்தன. ஜெர்மனியில் Luftschiffbau Zeppelin GmbH என்கிற நிறுவனம் ஏர் ஷிப்களை தயாரித்துக் கொண்டிருந்தது. Deutsche Zeppelin Reederei என்கிற ஜெர்மானிய நிறுவனம் அந்த ஏர்ஷிப்களை நிர்வகித்து மக்களுக்கு வான்வழிப் பயணத்தைச் சாத்தியமாக்கிக் கொண்டிருந்தது.
பால் ஒன் ஹிண்டன்பெர்க் (Paul von Hindenburg) என்கிற ஜெர்மானிய ராணுவத் தளபதி முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனியை வழிநடத்தினார். இவர் ஜெர்மனியின் முன்னாள் அதிபரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை கௌரவிக்கும் விதமாகத்தான் 1936ஆம் ஆண்டு, இந்த ஏர் ஷிப் ரகத்துக்கு LZ - 129 ஹிண்டன்பெர்க் என பெயர் வைக்கப்பட்டு தன் சேவையைத் தொடங்கியது.
துரதிர்ஷ்டவசமாக 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி, அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி மாகாணத்தில் மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் தரை இறங்கும் போது கோர விபத்துக்கு உள்ளாகி 35 பேர் பலியாயினர்.
சுமார் 237 மீட்டர் நீளமும், கிட்டத்தட்ட 1.4 லட்சம் கியூபிக் மீட்டர் ஹைட்ரஜன் வாயுவையும் கொண்டு இயங்கிய அந்த ராட்சத ஏர் ஷிப் விபத்துக்குப் பின் உலக நாடுகள் பலதும் ஹைட்ரஜனைக் கொண்டு இயங்கும் ஏர் ஷிப் தொழில்நுட்பத்தைக் கைவிட்டனர் என்றால் மிகை இல்லை.
இன்று வரை அதை ஹிண்டன்பெர்க் கிளாஸ் ஏர் ஷிப் என்றே வரலாற்றில் பதிவான இந்த ஏர்ஷிப்கள், “ஹிண்டர்பெர்க் ஏர் கிராஷ்" என்கிற சொற்களால் நினைவுகோரப்படுகின்றன.
இந்த ராட்சத ஏர்ஷிப் பயணிகளுக்கான அடுக்கு, கட்டுப்பாட்டு அறை, ஏர் ஷிப் ஊழியர்களுக்கான பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.
பயணிகளுக்கான அடுக்கில், பயணிகள் சாப்பிடுவதற்கும், ஓய்வு எடுப்பதற்குமான இடங்கள் இருந்தன. 25 டபுள் பெர்த் கேபின்கள் இருந்ததாக ஏர்ஷிப்ஸ்.நெட் என்கிற வலைதளம் சொல்கிறது.
தொடக்கத்தில் ஹிண்டர்பெர்க் ஏர்ஷிப்பில் ஒரு பியானோ இசைக்கருவி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனுடைய கடைசி பயணத்தின் போது, அக்கருவி நீக்கப்பட்டதாகவும் அவ்வலைதளம் சொல்கிறது.
இப்போது மீண்டும் பல நிறுவனங்கள், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தி ஆட்டோமொபைல் துறையில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டு வர பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த முறை ஹிண்டர்பெர்க் போல எந்த விபத்தும் ஏற்படாது என நம்புவோமாக.
சரி தலைப்பு வருவோம்.
Hindenburg வான்கப்பல் போல் "நிகழக் காத்திருக்கும் விபரீதங்களைக்" கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்பது தான் தங்கள் ஆய்வு நிறுவனத்தின் நோக்கம் என்று Hindenburg Research கூறுகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust