Cyprus Railway  Twitter
உலகம்

Railways : யாரும் அறியாத சைப்ரஸ் தீவின் ரயில்வே - போருக்கு பிறகு நிறுத்தப்பட்டது ஏன்?

சைப்ரஸில் அழகான பழைய கிராமங்கள், கண்கவர் மலைகள், உலகின் பழமையான நீர் கிணறுகள் என பல விஷயங்கள் இருந்தாலும் அங்கு ரயில்வே இணைப்பு தற்போது இல்லை என்பது நாம் அறிந்ததே.

Priyadharshini R

சைப்ரஸ் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு.

நீண்ட கடற்கரைகள், தொல்பொருள் இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரண்மனைகள் ஆகியவை இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

சைப்ரஸில் அழகான பழைய கிராமங்கள், கண்கவர் மலைகள், உலகின் பழமையான நீர் கிணறுகள் என பல விஷயங்கள் இருந்தாலும் அங்கு ரயில்வே இணைப்பு தற்போது இல்லை.

1905ல் தொடங்கிய ரயில் சேவை, அதன் பின்ன என்ன காரணங்களுக்காக துண்டிக்கப்பட்டது என்ற சைப்ரஸ் நாட்டின் ரயில்வே கதை குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

1878 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் முதன்முதலில் சைப்ரஸ் தீவுக்கு வந்தபோது, ​​​​நிகோசியா-லார்னாகா சாலைக்கு வெளியே சில பாதைகள் இருந்ததை பார்த்தனர்.

அந்த பாதை விலங்குகள் மற்றும் ஒட்டகங்கள் இழுக்கும் வண்டிகள் மட்டுமே பயணிக்க ஏற்றதாக இருந்தது.

அந்த காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உச்சத்தை எட்டியதால் ரயில் போக்குவரத்தை நிறுவ பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டது.

ஆனால் தீவு முழுவதும் ஒட்டகங்களுடன் போக்குவரத்தை மேற்கொள்ளும் ஒட்டக ஓட்டுநர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள் என்று இந்த திட்டம் லார்னாகாவிலிருந்து ஃபமகுஸ்டாவுக்கு மாற்றப்படுகிறது.

அக்டோபர் 1905 ஆண்டு ரயில் சேவை செயல்பாட்டிற்கு வந்தது. சைப்ரஸ் அரசாங்க இரயில்வே (CGR) மூலம் தொடங்கப்பட்ட இந்த இணைப்பு கிழக்கில் ஃபமகுஸ்டாவிலிருந்து மேற்கில் எவ்ரிச்சௌ வரையிலான 37 மைல் பாதையில் மொத்தம் 39 நிலையங்களுடன் அமைக்கப்பட்டது.

இந்த ரயில்வே இணைப்பு 4 பிரிவுகளாக கட்டப்பட்டது, முதல் பகுதி ஃபமகுஸ்டா துறைமுகத்தில் இருந்து நிக்கோசியா வரை ஓடியது, இரண்டாம் பகுதி நிக்கோசியாவிலிருந்து குசெலியுர்ட் (மார்ஃபு) வரை 1907 இல் தொடங்கப்பட்டது.

மூன்று மற்றும் நான்காவது பகுதிகள் Guzelyurt இலிருந்து Evrychou வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1915 இல் திறக்கப்பட்டுள்ளது.

அதன் செயல்பாட்டு ஆண்டுகளில் 12 நீராவி ரயில்கள் இருந்தன. அவை அனைத்தும் இங்கிலாந்தில் ஹன்ஸ்லெட் என்ஜின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன.

ரயில்கள் மணிக்கு 20 முதல் 30 மைல்கள் வரை பயணிக்க, ஃபமகுஸ்டா துறைமுகம் வழியாக இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரியில் இயங்கின.

ரயில் பாதையில் ஒவ்வொரு இரண்டு மைலுக்கும் ரயில் நிலையங்கள், துருக்கியம், கிரேக்கம் மற்றும் ஆங்கிலத்தில் அடையாளங்கள் இருந்தன.

பயணிகள் பயன்பாட்டிற்காக ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலையில் இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

தபால்களை கொண்டு செல்வதற்கும், ட்ரூடோஸ் மலைகளிலிருந்து மரங்களை எடுத்துச் செல்வதற்கும், ஃபமகுஸ்டா துறைமுகத்திலிருந்து சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் அரசாங்கம் ரயில் சேவையை பயன்படுத்தியது.

அரசின் சுரங்க நிறுவனம் சைப்ரஸ் முழுவதும் சரக்கு, தாது மற்றும் கனிமங்களைக் கொண்டு செல்வதற்கு ரயில்வேயைப் பயன்படுத்தியது.

இரண்டு உலகப் போர்களின் போதும், ஃபமகுஸ்டா, டெனிஸ்லி (சீரோஸ்) மற்றும் விமான நிலையத்திலிருந்து துருப்புக்களைக் கொண்டு செல்லவும் இரயில்வே பயன்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் ரயில்வே சேவையின் விலை உயர்ந்தது. லாபம் ஈட்ட முடியவில்லை. மேலும் சைப்ரஸில் பெய்த கனமழை காரணமாக, பாலத்தின் பகுதிகள் அடிக்கடி சேதமடைந்தன.

அதே சமயத்தில் மோட்டார் கார்கள் மிகவும் பிரபலமாகி வந்தன. சைப்ரஸ் அரசாங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாதையை மூடுவதற்கு முடிவெடுத்தது, 31 டிசம்பர் 1951 அன்று ஃபமகுஸ்டாவுக்கு நிக்கோசியா நிலையத்திலிருந்து கடைசி ரயிலை இயக்கியது.

அதன் 46 ஆண்டுகளில், சைப்ரஸ் ரயில் பாதை 7 மில்லியன் பயணிகளையும் 3 மில்லியன் டன் பொருட்கள் மற்றும் கனிமங்களையும் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே இணைப்பு மூடப்பட்ட பிறகு, ரயில் பாதைகளை அகற்ற ஒரு வருடத்திற்கு மேல் ஆனது.

12 இன்ஜின்களில் 10 ஏலம் விடப்பட்டு மேயர் நியூமன் & கோ நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

மற்ற இரண்டு இன்ஜின்கள் பாதுகாக்கப்பட்டன, ஒன்று நினைவுச்சின்னமாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?