எந்த துறைமுகத்திலும் நாம் அதிகப்படியான கண்டைனர்கள் இருப்பதைப் பார்த்துள்ளோம். உலக அளவில் நாம் பல நூற்றாண்டுகளாக வணிகம் செய்து வருகிறோம்.
நீண்ட தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு இடையில் பொருட்களை ஏற்றிச் செல்வது மிகவும் சவாலான பணி. குறிப்பாக 1956க்கு முன்னர். ஒரு பெரிய கப்பலில் பொருட்களை ஏற்றுவதற்கு மட்டுமே 3 முதல் 4 வாரங்கள் ஆகும்.
ஆனால் 1956க்கும் பிறகு அந்த நிலைமாறியது. ஏனெனில் அந்த ஆண்டு தான் கண்டைனர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 24 மணிநேரத்தில் ஒரு முழு கப்பலையும் பொருட்களால் நிரப்பும் வசதியை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தது கண்டைனர்கள்.
உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள் என்றொரு பட்டியலை எடுத்தால் நிச்சயமாக கண்டைனர்களுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் ஆகும் செலவு கண்டைனர்கள் வந்த பிறகு 90% குறைந்துள்ளதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகமயமாக்கலின் போது கண்டைனர்கள் இல்லாமல் இருந்திருந்தால் எத்தனையோ நாடுகள் அவதிப்பட வேண்டியதிருந்திருக்கும்.
கண்டைனர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஒரு கப்பலில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக பேக் செய்து ஒவ்வொரு அளவில் அனுப்பி வந்தனர். ஆனால் இப்போது எல்லாமே 20 அடி நீளம், 8 அடி அகலம் மற்றும் 8 அடி உயரமுடைய செவ்வக வடிவ பெட்டியில் இருப்பதால் கப்பலில் அடுக்குவதும் கிரேன் மூலம் இறக்குவதும் எளிது.
அமெரிக்க தொழிலதிபர் மால்கம் மெக்லீன் தான் முதன்முதலாக கண்டைனரை உருவாக்கியது. இவருக்கு கீத் டான்ட்லிங்கர் என்ற பொறியாளர் உதவினார்.
இன்று இது உலகை மாற்றும் கண்டிபிடிப்பாக மாறியுள்ளது. இன்று ஒரு சரக்கு கப்பல் 20,000 கண்டைனர்களை ஏற்றிச் செல்ல முடிகிறது.
உலகம் முழுவதும் 200 லட்சத்துக்கும் அதிகமான கண்டைனர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இப்போது காலத்துக்கு ஏற்ப கண்டைனர்களும் மாற்றம் கண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் மென்பொருளகளைப் பயன்படுத்தி கண்டைனர்களைக் கண்காணிக்கின்றன. உலகின் அபரிவிதமான வளர்ச்சியில் அமைதியாக தனது கடமையைச் செய்துள்ளது கண்டைனர்கள்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust