லிஸ் ட்ராஸ் Twitter
உலகம்

லிஸ் ட்ரஸ்: பிரதமராக இருந்தது 45 நாட்கள் தான்; ஆனால் வாய்பிளக்க வைக்கும் வாழ்நாள் வருமானம்

அக்டோபர் 20ம் தேதி ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸ் தனது 45 நாட்கள் பிரதமர் சேவைக்காக தொடர்ந்து ஓய்வுஊதியம் பெறுவார். குறிப்பாக பிரதமராக இருந்த பின்னரும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பப்ளிக் டூட்டி காஸ்ட் அலவன்ஸ் (பி.டி.சி.ஏ) வழங்கப்படும்.

Antony Ajay R

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

அதன் பின்னர் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சியில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையே பலமான போட்டிக்கு பிறகு லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார்.

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக்

பதவியேற்ற போது இங்கிலாந்தின் பொருளாதார நிலையை சீராக்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ரிஷிசுனக் கையாண்ட பொருளாதார கொள்கைகளிலிருந்து மாறுபட்ட கொள்கையை கையாளப் போவதாக கூறியிருந்தார். இதற்காக குவாசி குவார்டெங்கால் என்பவரை அமர்த்தினார். இவர்கள் கூட்டணி மினி பட்ஜெட் என்ற பெயரில் வரிகளை குறைத்தனர், மின்சார கட்டணத்தை குறைத்தனர். இதனால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது. பணமதிப்பிழப்பு ஏற்பட்டது.

45 நாட்கள் மட்டுமே பதவிலிருந்த லிஸ்ட்ரஸ் இறுதியில் குவாசி குவார்டெங்கால்க்கு பதிலாக ஜெர்மி ஹன்ட் என்பவரை அமர்த்தினார்.

இங்கிலாந்து வரலாற்றில் எலிசபெத் ராணியால் அமர்த்தப்பட்டு சார்லசிடம் ராஜினாமா செய்யும் ஒரே பிரதமர் லிஸ் ட்ரஸ் தான்.

அக்டோபர் 20ம் தேதி ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸ் தனது 45 நாட்கள் பிரதமர் சேவைக்காக தொடர்ந்து ஓய்வுஊதியம் பெறுவார். குறிப்பாக பிரதமராக இருந்த பின்னரும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பப்ளிக் டூட்டி காஸ்ட் அலவன்ஸ் (பி.டி.சி.ஏ) வழங்கப்படும்.

கோர்ட்டன் பிரவுன், டேவிட்மேக்ரூன், தெரசா மே உள்ளிட்ட முன்னாள் பிரதமர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.

லிஸ் ட்ராஸுக்கு ஓய்வு ஊதியமாக ஆண்டுக்கு 1,15,000 பவுண்ட்கள் கொடுக்கப்படுகின்றன. இதன் இந்திய மதிப்பு 1,07,30,529 ரூபாய்.

இந்த மிகப் பெரிய தொகை வெறும் 45 நாட்கள் பிரதமராக இருந்தவருக்கு கிடைப்பதனால் இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?