வெளிநாடு செல்கிறீர்களா? இந்தியர்கள் எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்? Twitter
உலகம்

வெளிநாடு செல்கிறீர்களா? இந்தியர்கள் எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்?

இந்தியர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு பணம் எடுத்துசெல்லவேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

Keerthanaa R

சுற்றுலா செல்கிறோம் என்றாலும், அல்லது பணி அல்லது வேறு காரணங்களுக்காக வெளிநாட்ருகளுக்கு செல்கிறோம் என்றாலும், நம் கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம் என்கிற குழப்பம் நம்மில் பலருக்கு இருக்கும்.

இந்தியர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு பணம் எடுத்துசெல்லவேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

ரிசர்வ் வங்கியின் கணக்கு என்ன?

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி வெளிநாட்டிற்கு ரூ.25,000 வரை எடுத்து செல்ல அனுமதி உள்ளது. இந்த வரம்பு இந்திய ரூபாய்க்கானதே.

ஒருவேளை உங்களிடம் மற்ற நாட்டு பணம் இருக்கிறது என்றால், கிரெடிட், டெபிட் கார்டுகள் இருக்கிறது என்றால், அதை நீங்கள் தாராளமாக பயணத்திற்கு எடுத்துசெல்லலாம்

பிரான்ஸ்

காதல் நகரமான பிரான்ஸுக்கு செல்லும்போது 10,000 அல்லது அதற்கும் குறைவான யூரோக்கள் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதியுள்ளது. இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய்

10,000 யூரோக்களுக்கு மேல் எடுத்துச்செல்வதாய் இருந்தால் பிரஞ்சு நாட்டுக்குள் சென்றதும் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து விடவேண்டும்.

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் அல்லது வெளியேறும் நாட்டில் உள்ள கஸ்டம்ஸ் துறையிடம் கையில் இருக்கும் பணத்தை குறித்து தகவல் அளிக்கவேண்டும்.

நீங்கள் நெதர்லாந்து வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் அல்லது நுழைந்தால், தொகையை Douane (டச்சு சுங்கம்) மூலம் அறிவிக்க வேண்டும்.

ஸ்பெயின்

பிரான்ஸுக்கு பக்கத்து நாடான ஸ்பெயினில் லா சக்ராடா ஃபமிலியா, அல்ஹம்பிரா உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா தலங்களாக இருக்கின்றன.

ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும்போது 10,000 யூரோக்களுக்கும் (9 லட்சத்துக்கும் குறைவாக) குறைவாகவே எடுத்துசெல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

இத்தாலி

ஐரோப்பாவில் அருகருகே இருக்கும் நாடுகளில் ஒன்று இத்தாலி. இங்கும் சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு 10,000த்துக்கும் குறைவான யூரோக்கள் (9 லட்சத்துக்கும் குறைவாக) எடுத்துச்செல்லவே அனுமதி வழங்கப்படும்.

அமெரிக்கா

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும்போது, ஒருவர் 3000 அமெரிக்க டாலர் எடுத்துசெல்லவே அனுமதியுள்ளது. இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய்

கனடா

கனடாவுக்கு ஒரு இந்தியர் பயணிக்கும்போது 10,000 கனடிய டாலர்கள் அதாவது 6 லட்சம் ரூபாய் வரை பணமாக எடுத்து செல்லலாம். இதைவிட அதிகமாகவோ, அல்லது வெளிநாட்டு பணம் எடுத்து செல்வதாக இருந்தாலோ கஸ்டம்ஸிடம் தெரிவிக்கவேண்டும்.

தாய்லாந்து

இங்கு ஒருவருக்கு 10,000 பாட் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் 20,000 பாட் எடுத்து செல்லலாம். 50,000 பாட் வரை மொத்தமாக எடுத்து செல்லலாம்.

இங்கிலாந்து

இங்கிலாந்து செல்லும்போது ஒரு இந்தியர் தன் கையில் 10,000 பவுண்டுகள் எடுத்து செல்லலாம். இந்திய மதிப்பில் பத்து லட்சம் ரூபாய்.

இதை தவிர, ஜெர்மனி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லும்போது 10000 யூரோக்கள், ஆஸ்திரேலியாவுக்கு 10,000 ஆஸ்திரேலிய டாலர்கள் எடுத்து செல்லலாம்.

இதே போல நேபாளம் செல்லும்போது 25,000 ரூபாய் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. துபாய்க்கு 1 லட்சம் திர்ஹாம்கள் எடுத்துச்செல்லலாம்.

சிங்கப்பூர்

சராசரியாக ஒரு இந்தியர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும்போது 20,000 சிங்கப்பூர் டாலர் எடுத்துசெல்ல அனுமதி உள்ளது

பூடான்

இந்திய ரூபாய் பூடானில் அனுமதிக்கப்பட்டாலும், 500 ரூபாய்க்கு மேலான கரன்சிகள் அனுமதியில்லை

மாலத்தீவு

10,000த்துக்கும் குறைவான அமெரிக்க டாலர்கள் எடுத்துச்செல்ல மாலத்தீவில் அனுமதியுள்ளது

மொரிஷியஸ்

இந்த நாட்டில் மொரிஷிய ரூபாய் 500,000 வரை எடுத்துச்செல்லலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?