நான்சி கிராம்ப்டன் ப்ரோபி Twitter
உலகம்

உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி? : கட்டுரை எழுதிய நாவலாசிரியர் கைது - இதுதான் காரணம்

NewsSense Editorial Team

"உங்கள் கணவரைக் கொல்வது எப்படி?" என்ற கட்டுரையை எழுதி வெளியிட்ட நாவலாசிரியர் ஒருவருக்கு, தனது கணவரைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

71 வயதான நான்சி கிராம்ப்டன் ப்ரோபி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர்ட்லேண்டில் உள்ள அவரது பணியிடத்தில் தனது கணவரைக் கொலை செய்ததாக விசாரணை நடைபெற்று வந்தது.

KGW-TV தகவலின் படி, அவரது தண்டனையில் 25 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு தான் பரோல் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

தனது கணவரான 63 வயது டான் ப்ரோபியை, 2018 இல் பணிபுரிந்த ஓரிகான் சமையல் நிறுவனத்திற்குள் வைத்து கிராம்ப்டன் ப்ரோபி சுட்டுக் கொன்றதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.


தனது கணவரைக் கொல்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம்ப்டன் ப்ரோபி எழுதிய கட்டுரையின் காரணமாக இந்த வழக்கு பலருடைய கவனத்தை ஈர்த்தது. ஆனால் அந்த கட்டுரை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், கிராம்ப்டன் ப்ரோபியின் மினிவேன், அவர் பணிபுரிந்த நிறுவனத்திற்குப் பக்கத்திலிருந்து புறப்பட்டுச் செல்வது ட்ராஃபிக் கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த நேரமும், டான் ப்ரோபி சுடப்பட்ட நேரமும் ஏறக்குறைய பொருந்திப் போவது உறுதி செய்யப்பட்டது.

கணவருடன் நான்சி

கொலையின் போது தம்பதியினர் கடுமையான நிதிச் சிக்கலிலிருந்ததாகவும், க்ளோக் 17 கைத்துப்பாக்கியை வாங்குவதற்கு முன்பு அவர் ஆன்லைனில் ”Ghost Gun" குறித்துத் தேடியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

கிராம்ப்டன் ப்ரோபியின் வழக்கறிஞர் தனது வாதத்தில், அரசின் சான்றுகள் பலவீனமாக இருப்பதாகவும், அந்நேரத்தில் தம்பதியருக்குள் நிதிப் பிரச்சனை ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவர், தம்பதியரின் அன்பான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பற்றி சாட்சியமளிக்க நண்பர்களையும், உறவினர்களையும் கூட சாட்சியாக அழைத்து வந்தார்.

கிராம்ப்டன் ப்ரோபியும் தனது தரப்பை நீதி மன்றத்தில் எடுத்துரைத்தார். தனக்கும், கணவர்க்கும் இடையில் எந்த நிதிப்பிரச்சனையும் இல்லை என்று கூறினார். இருவரும் சேர்ந்து தான் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் எல்லாம் வாங்கி வைத்திருப்பதாகவும் கூறினார். “Ghost Gun” குறித்த தன்னுடைய வலைத்தேடல் தற்செயலானது என்று தெரிவித்தார்.

ஏழு வாரங்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் கிராம்ப்டன் ப்ரோபி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?