இடி அமீன்: 3 லட்சம் மக்களை கொன்ற சர்வாதிகாரியின் 5 மனைவிகளுக்கு என்ன ஆனது தெரியுமா?
இடி அமீன்: 3 லட்சம் மக்களை கொன்ற சர்வாதிகாரியின் 5 மனைவிகளுக்கு என்ன ஆனது தெரியுமா? Twitter
உலகம்

இடி அமீன்: 3 லட்சம் மக்களை கொன்ற சர்வாதிகாரியின் 5 மனைவிகளுக்கு என்ன ஆனது தெரியுமா?

Antony Ajay R

இடி அமீன் ஒரு சர்வாதிகாரி என்பதை நாம் அறிவோம். 1971 முதல் 1979 வரை அவரது ஆட்சிக்காலத்தில் உகாண்டா மக்கள் எப்போதும் அச்ச உணர்வுடனேயே இருந்தனர்.

யாரும் எப்போது கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம். அதிபரை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாது. உகாண்டாவில் இருந்து வலுக்கட்டாயமாக ஆசிய மக்களை வெளியில் துரத்தினார்.

அண்டை நாடுகளுடன் பகையாளியாக இருந்தார். 3,00,000 உகாண்டா மக்களின் கொலைக்கு காரணமாக அறியப்படுகிறார். இந்த கொடூரமான தலைவருக்கு சில காதல் கதைகள் இருந்தன.

அந்த காதல் கதைகள் எவ்வளவு கொடூரமானதாக இருந்தது எனப் பார்க்கலாம்.

இடி அமீனுக்கு மல்யாமு அமீன், நோரா அமீன் மற்றும் கே அமீன் என மூன்று மனைவிகள் இருந்தனர்.

முதல் மனைவியான மல்யாமு ஒரு பாக்ஸிங் சாம்பியன். இவரது சகோதரருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கியிருந்தார் அமீன்.

மல்யாமுவுக்கு 1953 முதல் அமீனுடன் தொடர்பு இருந்துள்ளது. 1966ல் தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அமீனைத் திருமணம் செய்துகொண்டார் இவர்.

மல்யாமுவுக்கும் இடி அமீனுக்கும் 1974ல் விவாகரத்து நடந்தது.

மல்யாமு

மல்யாமுவைத் திருமணம் செய்த 1966ம் ஆண்டிலேயே பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த கே அடோரா என்ற பெண்ணைைத் திருமணம் செய்தார் அமீன்.

கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த கேவின் திருமணம் அமீனுடன் ஒரு பத்திரபதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. இவரையும் அமீன் 1974ல் விவாகரத்து செய்தார்.

நோராவை 1967ம் ஆண்டு திருமணம் செய்தார் அமீன். இவருடனும் 1974ல் விவாகரத்து செய்தார்.

Idi Amin with His wife Kay

அதிபராக கோலோச்சிய பிறகு 1972ம் ஆண்டு ஹார்ட்-பீட் ஆஃப் ஆப்ரிக்கா என்ற நடனக் குழுவில் இருந்த அழகிய மங்கை மதினாவை திருமணம் செய்தார் இடி அமீன்.

இவர்களைத் தவிர அமீனுக்கு இருந்த காதலிகள், நண்பர்கள் ஏராளம் என்கின்றனர்.

1974ல் என்ன நடந்தது?

வீட்டில் மனைவிகள் எப்போதும் போல பணிகளைச் செய்துகொண்டிருக்க, ரேடியோவில் பேசிய அமீன் தனது முதல் மூன்று மனைவிகளை விவகரத்து செய்வதாக அறிவித்தார்.

மூவரும் உடனடியாக வீட்டைவிட்டுத் தப்பிச்செல்ல முயன்றனர். மல்யாமு அமீன் அவருக்குத் தெரியாமல் பார்டிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இவர் கென்யா எல்லையில் பிடிபட்டு, கைது செய்யப்பட்டார். கென்யாவில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்வதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விவாகரத்து அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு கே அடோராவின் உடல் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கே அடோரா அமீன் வேறொரு நபருடன் உறவில் இருந்ததை அமீன் கண்டுபிடித்ததே விவாகரத்துக்கும் மரணத்துக்கும் காரணம் என சில தரப்புகள் கூறுகின்றன. கே திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும் அவர் அபார்ஷன் செய்ய இரண்டு மனைவிகளும் உதவியதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

Idi Amin and Midina Amin

கே மரணிக்கும் போது 3,4 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் அவருக்கு கருக்கலைப்பு செய்த ஈதர் ம்பரு என்ற மறுத்துவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் நியூ யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.

மற்றொரு மனைவியான நோரா அமீன் புற்றுநோய் தாக்கி மரணித்தார்.

காதலுக்காக கொலை செய்தாரா?

மதினா அமீன் மட்டும் இடி அமீனுடன் வாழ்ந்து வந்த நேரத்தில் 1975ம் ஆண்டு  Revolutionary Suicide Mechanised Regiment Band என்ற இசைக் குழுவில் நடனமாடிய சாரா என்ற பெண் இடி அமீனை ஈர்த்தார்.

சாராவை திருமணம் செய்ய எண்ணினார் அதிபர் அமீன். ஆனால் சாராவுக்கு ஜெஸ்ஸி கிட்டா கசிரிவு என்ற காதலன் இருந்தார். இடி அமீனின் ஆசைக்கு காதலன் தடையாக இல்லை அவர் தானாக மறைந்துபோனார்.

Idi Amin and Sarah

ஜெஸ்ஸி கிட்டா கொலை செய்யப்பட்டாரா அல்லது அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. சாராவுக்கு அமீனுக்கும் 4 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

1979ம் ஆண்டு இடி அமீன் மறைவுக்கு பிறகு மதினா அமீன் நாடுகடத்தப்பட்டார். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் உகாண்டா திரும்பியிருக்கிறார்.

சாரா அமீன் இடி அமீனுடன் சௌதி அரேபியா சென்றார் அங்கிருந்து ஜெர்மனிக்கு மாற்றப்பட்டு, 2015ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வாழ்ந்து மறைந்தார்.

சௌதி அரேபியாவில் மாமா சார்மன் என்ற மனைவியுடன் வாழ்ந்தார் இடி அமீன். இறப்பதற்கு சில காலம் முன்பு மற்றொரு மனைவியை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது.

3 லட்சம் மக்களின் மரணத்துக்கு காரணமாக இருந்த கொடூரனாகினும் மரணம் வரை சௌகரியமாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் இடி அமீன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?