Foot Ball ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலால் 129 பேர் பலி- நடந்தது என்ன? Twitter
உலகம்

Foot Ball ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலால் 129 பேர் பலி- நடந்தது என்ன?

Antony Ajay R

கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் ரசிகர்களிடையே கலவரம் மூண்டதனால் 129 பேர் வரை மரணித்திருக்கலாம் எனத் தகவல்கள் வந்துள்ளன. இதில் குழந்தைகளும் அடக்கம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த மிகப் பெரிய கலவரமாக இது பார்க்கப்படுகிறது.

நேற்று இந்தோனேசியாவின் கஞ்சுருக்கான் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அரிமா ஃபுட்பால் க்ளப் மற்றும் பெர்சபையா செரிபெயா அணிகள் மோதின.

இதில் அரிமா அணி தோல்வியுற்றது. இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு அரிமா அணி பெர்சபையா பணியிடம் தோல்வியுற்றதனால் ரசிகர்கள் உணர்சசிவசப்பட்டு மைதானத்துக்குள் ஓடி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது. அப்போது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுக்களை உபயோகித்து ரசிகர்களைக் கலைத்தனர். இது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது.

போலீஸாரின் புகைக்குண்டிலிருந்து தப்பிக்க அனைவரும் வெளியேறும் பாதைக்கு ஓட்டமெடுத்தனர்.

இதனால் வெளியேறும் பாதையில் நெரிசல் அதிகரித்தது. அத்துடன் கண்ணீர் குண்டுகளால் ஆக்சிஜனும் குறைந்தது. 34 பேர் நெரிசலினால் மைதானத்திலேயே மரணித்தனர். பலர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டும் உயிரிழந்தனர்.

ரசிகர்களுக்கு இடையிலான கலவரம் மற்றும் கண்ணீர் குண்டுகளால் ஏற்பட்ட நெரிசலினால் அப்பாவி மக்களும் குழந்தைகளும் உட்பட 129 பேர் மரணித்திருப்பதாக காவலர்கள் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?