பற்றி எரியும் அக்னிபத் சர்ச்சை : வெளிநாடுகளில் இது போன்ற தேர்வு முறைகள் உள்ளதா? Twitter
உலகம்

பற்றி எரியும் அக்னிபத் சர்ச்சை : வெளிநாடுகளில் இது போன்ற தேர்வு முறைகள் உள்ளதா?

இந்திய பாதுகாப்பு படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து வரும்வேளையில், ஏதேனும் நாடுகளில் இது போன்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறதா?

Gautham

பொதுவாகவே உலகம் முழுக்க ஒரு நாட்டின் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதைப் பலரும் ஒரு தேசத்துக்கான சேவையாகவும், தங்களின் பெருமித உணர்வாகவும் கருதுகிறார்கள்.

அதோடு, ராணுவ வீரர்களுக்கு சம்பளம் உட்பட பல்வேறு வசதிகளும், சலுகைகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரை ராணுவத்தினருக்கு இப்போதும் ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு தன் ஓய்வூதிய நிதிச்சுமையைக் குறைக்க அக்னிபத் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் படி 17.5 - 21 வயதுக்குள்ளிருக்கும் இளைஞர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இப்படி அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோரை 'அக்னிவீர்' என்றழைப்பர்.

Indian Army

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் தவிர மற்ற பணியாளர்கள் அனைவரும் அக்னிபத் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படுவர் என ஸூம் நியூஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படி தேர்வு செய்யப்படுவோர், 4 ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியாற்றுவர். ஒட்டுமொத்தமாகத் தேர்வு செய்யப்பட்ட அக்னிவீர்களில், 25% பேர் மட்டும் தங்களின் திறமை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் வழக்கமான ராணுவ பொறுப்புகளில் பணியமர்த்தப்படுவர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழுநேரப் பணியில் சேராதவர்களுக்கு 11.71 லட்சம் ரூபாய் பணத்தை சன்மானமாகப் பெற்றுக் கொள்ளலாம். அந்த தொகைக்கு எந்த ஒரு வருமான வரியும் செலுத்தத் தேவை இல்லை. இத்திட்டத்தால் இந்திய அரசுக்கு ஓய்வூதியத் திட்டத்தினால் ஏற்படும் நிதிச் சுமை கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது.

Indian Army

ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களிலும், இத்திட்டத்தை இளைஞர்கள் கடுமையாக விமர்சித்தும், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தும் வருகிறார்கள்.

17.5 - 21 வயது என்பது கல்லூரி படிப்பு, மேற்படிப்பு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டிய முக்கியமான காலகட்டம். அப்படி ஒரு சூழலில் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் இளைஞர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படாமல், ஓய்வூதியம், கிராஜுவிட்டி என எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாமல் வெறும் 4 ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்பப்படுவது வேலைவாய்ப்பு அல்ல என தங்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள்.

சரி, இது போன்ற திட்டங்கள் வேறு ஏதேனும் நாடுகளில் நடைமுறையில் இருக்கிறதா? அவர்கள் இது போன்ற திட்டத்தை எப்படிக் கையாள்கிறார்கள்? வாருங்கள் பார்ப்போம்.

America

அமெரிக்கா

அமெரிக்க ராணுவத்தில் மொத்தம் 14 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். தன்னார்வலர்கள் தான் ராணுவத்தில் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பாலான ராணுவ வீரர்கள் 4 ஆண்டுகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மேலும் 4 ஆண்டுகளுக்கு அவர்களின் பணி நீட்டிக்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் முழு நேர பணிக்கு விண்ணப்பிக்கலாம். 20 ஆண்டுக் காலம் ராணுவப் பணியிலிருந்தவர்கள் வழக்கமான ராணுவ வீரர்களுக்கான சலுகைகளுக்கு விண்ணப்பிக்கலாம். முன்கூட்டி ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

China

சீனா

சீனாவில் 18 வயதை நிறைவு செய்த ஆண்களுக்குக் கட்டாய ராணுவ சேவை உண்டு. ஆண்டுக்கு 4.5 லட்சம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்படித் தேர்வு செய்யப்படுவோர் இரு ஆண்டுகளுக்கு பணியாற்ற வேண்டும்.

இப்படி தேர்வு செய்யப்படுவோரில் பலரும் முழு நேர ராணுவ சேவைக்கு அழைத்துக் கொள்ளப்படுவர். இரு ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்திலிருந்து வெளியே செல்வோர் தொழில் தொடங்கி தங்கள் வாழ்கையை நடத்திக் கொள்ள, குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்படும். அதுபோக சில வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

France

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் ராணுவத்தினர் ஒப்பந்த அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஓராண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படும் ஒப்பந்தங்கள் முதல் ஐந்து ஆண்டு கால ஒப்பந்தங்கள் வரை பல முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 19 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தோருக்கு ஓய்வூதியம் உட்பட பல ராணுவ சலுகைகள் வழங்கப்படுகிறது.

Russia

ரஷ்யா

ரஷ்யாவிலும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஓராண்டு கால பயிற்சி, அதன்பின் ஓராண்டுக் கால பணிக்குப் பிறகு அவர்கள் ரிசர்வ் படைகளில் வைக்கப்படுவர்.

அப்படையிலிருந்து நிரந்தர பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ராணுவ அமைப்புகள் உட்பட பல பல்கலைக்கழகங்களில் இந்த இளைஞர்கள் சேர்ந்து படிக்கப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

isrel

இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டில் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 32 மாதங்களும் பெண்கள் குறைந்தது 24 மாதங்களும் பணியாற்ற வேண்டும். இந்த கட்டாயப் பயிற்சிக்குப் பிறகு அனைவரும் ரிசர்வ் படைகளில் வைக்கப்படுவர்.

யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பணியில் சேர அழைப்பு வரும். 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்தோருக்கு ஓய்வூதியம் போன்ற அனைத்து வழக்கமான ராணுவ சலுகைகளையும் வழங்கப்படுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?