இந்தோனேசியாவைச் சேர்ந்த 61 வயது முதியவர் 88வது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அவரது புதிய மணமகள் அவரது முன்னாள் மனைவிகளில் ஒருவர் என்பது ஆச்சரியத்தகவல்.
கானுக்கு அவர் வசிக்கும் ஊரில் "பிளேபாய் கிங்" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவர் தற்போது திருமணம் செய்துக் கொள்ளவுள்ள பெண் அவரின் முன்னாள் மனைவி என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு ஜாவாவில் உள்ள மஜலெங்காவைச் சேர்ந்த விவசாயியான கான், தனது முன்னாள் மனைவி தன்னிடம் மீண்டும் திரும்புவதை மறுக்க முடியாது என்று நெகிழ்ந்துள்ளார்.
"நாங்கள் பிரிந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும், எங்களுக்கு இடையேயான காதல் இன்னும் வலுவாக உள்ளது," என்று அவர் கூறியிருந்தார்.
61 வயதான அவர் தனது 86 வது திருமணம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தாலும், அந்த பெண் இன்னும் தன்னை காதலிப்பதாக கூறியிருந்தார்.
கான் தனது 14 வயதில் முதல் முறையாக திருமணம் செய்ததாக கூறியிருந்தார். அவரது முதல் மனைவி அவரை விட இரண்டு வயது மூத்தவர்.
"அப்போது எனது மோசமான அணுகுமுறை காரணமாக, திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் மனைவி விவாகரத்து கேட்டார்," என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது முன்னாள் மனைவியை 88வது திருமணம் செய்து கொள்ளவுள்ளார் கான். கானுக்கு 87 திருமணங்களில் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கானின் செயலுக்கு இணையவாசிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust