கிம்  NewsSense
உலகம்

வட கொரியா : கொரோனாவுக்கு அடுத்த ஆபத்து, பரவும் புதிய தொற்று - என்ன நடக்கிறது அங்கே?

NewsSense Editorial Team

உலகில் கோவிட் 19 சற்றே தணிந்த நிலையில் குரங்கம்மை எனும் தொற்று பரவி வருகிறது. தற்போது இவ்விரண்டையும் தாண்டி வடகொரியாவில் புதிய தொற்று நோய் ஒன்று உருவாகியிருக்கிறது.

தென்மேற்கு ஹெஜு நகரில் ஒரு கடுமையான குடல் தொற்று நோய் பரவத் துவங்கியிருப்பதாக வட கொரியாவின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதில் எத்தனை பேர் பாதித்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இந்நோய்க்கு வட கொரிய செய்தி நிறுவனம் பெயர் எதையும் கூறவில்லை.


பொதுவில் குடல் தொற்று நோய்கள் என டைஃபாய்டு, வயிற்றுப் போக்கு மற்றும் காலரா ஆகியவை அறியப்படுகிறது. இவை அசுத்தமான உணவு அல்லது தண்ணீரில் உள்ள கிருமிகளால் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மலத்துடன் தொடர்பு கொள்வதால் ஏற்படுகின்றன.

Disease Spread in North Korea

இத்தகைய குடல் தொற்று நோய்கள் வட கொரியாவில் வழக்கமாக ஏற்படுகின்றன. அங்கு தண்ணீர் சுத்திகரிப்பு வசதிகள் முறையாக செயல்படுவதில்லை. மேலும் பல பத்தாண்டுகளாக வட கொரியாவில் பொது சுகாதார அமைப்பு முறையாக இயங்குவதில்லை.

சில பார்வையாளர்களின் கருத்துப்படி வட கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் நோக்கம் புதிய நோய்த் தொற்று குறித்து தெரிவிப்பதல்ல. மாறாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனிப்பட்ட முறையில் இந்நோய்த் தொற்றுக்காக மருந்துகளை நாட்டு மக்களுக்கு நன்கொடையாக அளித்தார் என்ற செய்தியை வெளியிடுவதுதான் நோக்கம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் நாடு இருக்கும் கஷ்டமான நிலையில் அதிபர் கிம் தனது பழுதுபட்ட இமேஜை உயர்த்திக் கொள்வதே நோக்கம்.

Kom Jong checking on medicines

அதன்படி வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், கிம் தனது குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுப்புகளிலிருந்து மருந்துகளை நன்கொடையாக அளித்தார் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

வடகொரியாவின் முதன்மை செய்தித்தாளான ரோடாங் சின்முன் இன் முதல் பக்கத்தில் அதிபர் கிம்மும் அவரது மனைவியும் தாங்கள் நன்கொடை அளித்த உப்புக் கரைசல் மற்றும் ஏனைய மருந்துகளை பார்க்கும் படியான புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

நாட்டின் அதிகாரம் ஒரு சிறு குழுவிடம் குவிந்திருக்கும் போது, பொது மக்களுக்கு அடிப்படை மருந்துகள் கூட பற்றாக்குறையாக இருப்பதும், மூத்த அதிகாரிகள் மற்றும் ஆளும் குழுவினருக்கு போதுமான மருந்துகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் வழக்கமான ஒன்று என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த நன்கொடையானது அரசின் மாகாண மருந்து சேமிப்பு இடங்களிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவற்றை விநியோகிக்கும் போது அதிபர் கிம் பெயரில் விநியோகப்பட்டிருக்கிறது என பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தட்டம்மை அல்லது டைஃபாய்டு பரவுவது வட கொரியாவில் அசாதாரணமானது அல்ல. அங்கு ஒரு தொற்று நோய் பரவத் துவங்கியிருப்பதும் உண்மைதான். ஆனால் அதிபர் கிம் தனது மக்களை கவனித்துக் கொள்கிறார் என்பதை வலியுறுத்த வட கொரிய அரசு அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறது என DPRKHEALTH.ORG இணைய தளத்தின் தலைவர் அஹ்ன் கியுங் சு கூறினார்.

Disinfection

எனவே இந்த செய்தியில் மருத்துவத்தை விட அரசியலே அதிகம் இருக்கிறது. கடந்த மாதம் வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென் கொரிய உளவு நிறுவனத்தின் அறிக்கைப் படி அங்கே கணிசமான எண்ணிக்கையில் தட்டம்மை, டைஃபாய்டு, கடுமையான வூஃப்பிங் இருமல் போன்றவற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் தென் கொரிய உளவு நிறுவனத்தின் படி வட கொரியாவில் உள்ள 2 கோடியே 60 இலட்சம் மக்கள் தொகையில் 45 இலட்சம் மக்கள் அடையாளம் தெரியாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் 73 பேர் இறந்திருக்கின்றனர்.

Medical team North Korea

வடகொரியாவில் கொரோனா தடுப்பு முறைகளோ, இல்லை போதுமான சோதனைக் கருவிகளோ கிடையாது. கோவிட் 19 தொற்றுகளில் கூட ஒரு பகுதி மக்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

பல வெளிநாட்டு வல்லுநர்களின் கருத்துப்படி வட கொரியாவில் கோவிட் 19 மரணங்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் அதிபர் கிம்மின் பெருமைக்கு பங்கம் வராத படிக்கு உயிரிழப்பு குறைவாக தெரிவிக்கப்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களிடம் கோவிட் 19 தொற்று நோய் மெதுவாகவே பரவுவதாக வட கொரியா கூறிக் கொள்கிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளோ வட கொரியாவில் இந்த மாதம் கோவிட் 19 தொற்று நிலைமையை மோசமாக்கி வருவதாக கூறுகின்றனர்.

சமீபத்தில் ஆளும் கட்சி மாநாடு ஒன்றில் பேசிய அதிபர் கிம் கொரோனா பெருந்தொற்றின் தீவிர நிலையை நாடு கடந்து விட்டதாக தெரிவித்தார்.

ஆனாலும் அந்நாடு கடுமையான கட்டுப்பாடுகளை இன்னும் பின்பற்றி வருகிறது, தளர்த்தவில்லை.

இந்தக் கட்டுப்பாடுகளால் ஏற்கனவே ஐநா வின் பொருளாதார தடையால் தத்தளிக்கும் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியா தனது கோவிட் 19 தொற்று நோய் பரவுவதை தெரிவித்த உடனேயே தென் கொரியாவும் அமெரிக்காவும் கப்பலில் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் அனுப்புவதாக தெரிவித்தன. ஆனால் வட கொரியா அதற்கு பதில் ஏதும் அளிக்கவில்லை.


இப்படியாக ஒரு சர்வாதிகார நாட்டில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்கள் தொற்று நோய்களினாலும் கஷ்டப்படுகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?