டிக்கெட் எடுக்க மறுப்பு: குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற தம்பதி - எங்கே? Twitter
உலகம்

டிக்கெட் எடுக்க மறுப்பு: குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற தம்பதி - எங்கே?

Antony Ajay R

இஸ்ரேல் நாட்டில் உள்ள தெள் அவி நகர விமான நிலையத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதியால் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரியானேர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இஸ்ரேலின் பென் குரியோனில் இருந்து பல்கேரியா நாட்டின் ருசெல்ஸ் நகருக்கு அவர்கள் பயணித்தனர்.

குழந்தையை வண்டியில் தள்ளிக்கொண்டு வந்தவர்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்காமலேயே செக்-இன் செய்ய வந்துள்ளனர். ஆனால் குழந்தைக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலையத்தில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைக்கு டிக்கெட் இல்லாமல் அழைத்துச் செல்ல வாதிட்டு முடியாததால், அதனை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பறந்துள்ளது அந்த தம்பதி.

பின்னர் விமான நிலைய ஊழியர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரனணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

அந்த தம்பதி விமானநிலைத்துக்கு வந்தது முதலே பரபரப்பாகவே இருத்ததாக விமானநிலைய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். விமான நிலையத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதன்முறை அல்ல.

கடந்த அக்டோபர் மாதம் இதேப் போல குழந்தையை விட்டுச் சென்ற முதியவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

2019ம் ஆண்டு சௌதி அரேபியாவில் ஒரு தாய் குழந்தையை மறந்து விமானத்தில் ஏறியதால் விமானத்தையே திருப்பி மீண்டும் விமான நிலைத்துக்கு வந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?