நகரத்தில் இருந்து வெளியேறினால் 10 லட்சம்: ஜப்பான் அறிவித்த ஜாக்பாட் திட்டம்- பின்னணி என்ன? Twitter
உலகம்

நகரத்தில் இருந்து வெளியேறினால் 10 லட்சம்: ஜப்பான் அறிவித்த ஜாக்பாட் திட்டம்- பின்னணி என்ன?

ஜப்பானிய கிராமப்புறங்களையும் அதன் வரலாறு, கலாச்சாரங்களையும் அழிவில் இருந்து காப்பாற்றும் அரசின் இந்த செயல்பாடும் பயன்கொடுக்குமா? விரிவாக பார்ப்போம்.

Antony Ajay R

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக இருக்கிறது, இரவு முழுவது ஒளிரும் மின் விலக்குகளும் திரும்பிய பக்கமெல்லாம் தெரியும் தலைகளும் திசையெல்லாம் நடக்கும் கால்களும் தான் டோக்கியோவின் பிரதான அடையாளங்கள்.

இந்த நகரில் இருந்து குடிபெயர்ந்து ஜப்பானின் கிராமப்புறங்களுக்கு செல்ல விரும்பும் மக்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க முன்வந்துள்ளது ஜப்பான் அரசு.

வருகிற ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோவில் இருக்கும் குடும்பங்கள் வெளியேறினால் ஒரு குழந்தைக்கு ஒரு மில்லியன் யென் இந்திய மதிப்பில் 6.30 லட்சம் ரூபாய் வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

டோக்கியோவில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அதன் அருகில் உள்ள சைதமா, சிபா, கங்கவா போன்ற நகரங்களில் இருந்து தினசரி வேலைக்காக டோக்கியோ வருபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் டோக்கியோவில் வசிக்கும் மக்கள் அந்த நகரில் இருந்து வெளியேற ஆர்வம் காட்டுவதில்லை என்பதே உண்மை.

"டோக்கியோவில் இருந்து வெளியேறுவதற்கு அரசாங்கம் கொடுக்கும் பணம் நியாயம் சேர்க்காது" என வைஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர் மியா மற்றும் பால் கிளாசர் தம்பதி.

எங்கு பார்த்தாலும் நீண்ட வரிசை, போக்குவரத்து நெரிசல், இரைச்சல் என கூட்டமான டோக்கியோ நகரில் மக்கள் வசிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

"டோக்கியோவில் வசிப்பது மிகவும் செலவுபிடிப்பதாக இருந்தாலும், தூரமாக போகும் போதும் நாங்கள் அதே அளவு துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கும்" என அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவருமே டோக்கியோவை மையமாக கொண்ட பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவில் இருந்து தூரமாக இருக்கும் பகுதிகளுக்கும் புத்துயிர் அளிக்க வேண்டும் என ஜப்பான் அரசு விரும்புகிறது. இதற்காக 2019ம் ஆண்டே இந்த பணம் அளிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது. கடந்த ஆண்டு 300000 யென்கள் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 10,00,000 -மாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக ஜப்பானின் பிற பகுதிகளில் இருந்து டோக்கியோவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 16% உயர்ந்துள்ளது. ஆண்டு தோறும் பல்லாயிரணக்கணக்கானோர் டோக்கியோவுக்கு படையெடுத்தனர்.

ஆனால், முதன் முறையாக தொற்றுநோய் பரவலுக்கு பிறகு டோக்கியோவின் மக்கள் தொகை சரியத் தொடங்கியது.

டோக்கியோவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அதன் விளைவாக கிடைக்கும் வேலை வாய்ப்புகள், அதிக சம்பளம் போன்ற காரணிகள் தான் டோக்கியோவை நோக்கி மக்களை இழுக்கின்றது.

டோக்கியோவில் ஒருவரின் சராசரி சம்பளம் 373600 யென். இதுவே வட ஔமோரி மாகாணத்தில் உள்ள ஒருவரின் சராசரி சம்பளம் 2,40,500 யென்.

இந்த காரணிகளால் மக்கள் டோக்கியோவுக்கு இடம் பெயரும் போது, கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான வீடுகள் கண்காணிப்பின்றி விடப்படுகின்றன. இந்த வீடுகளை அகியா என அழைக்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளும் மருத்துவமனைகளும் கூட மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் பற்றாக்குறையும் இருந்து வருகிறது. இந்த நிலைத் தொடர்ந்தால் 2040ம் ஆண்டுக்குள் ஜப்பானில் 896 நகராட்சிகள் (ஏறக்குறைய ஜப்பானில் பாதி) மறைந்துவிடும்.

இந்த நகரங்கள் அழிவுக்கு மக்கள் தொகை பற்றாக்குறையும் ஒரு காரணம். ஜப்பானில் வயதானவர்கள் எண்ணிக்கை குழந்தைகளை விட அதிகமாக இருக்கிறது. இறப்புவிகிதம், பிறப்பை விட இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கிராமப்புற பகுதிகள் தொடர்ந்து கைவிடப்படுகின்றன.

ஜப்பானில் குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்புக்கு அதிக கவனம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதிக மக்கள் தொகை இருக்கும் தலை நகரில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

டோக்கியோவில் வாழ்வது அதீத செலவைக் கோரும். எனினும் இன்சூரன்ஸ், மருத்துவ வசதிகள் போன்ற காரணிகள் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இதனால் நகரிலிருந்து வெளியேறுபவர்களுக்கு அளிக்கப்படும் தொகையின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு கொடுக்கும் சலுகையை ஏற்று வெளி ஊர்களில் குடியேறுபவர்கள், குறைந்தது 5 ஆண்டுகள் அந்த நகரில் வசிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது அங்கு வேலை செய்யவோ அல்லது புதிய தொழிலில் ஈடுபடவோ வேண்டும்.

ஒரு சிறிய நிறுவன வேலையில் ஈடுபடவோ, புதிய தொழிலை மேற்கொள்ளவோ, பழைய வேலையை வீட்டில் இருந்த படி மேற்கொள்ளவோ புதிய இடத்துக்கு குடிபெயர்பவர்கள் கூடுதலாக 3 மில்லியன் யென்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டம் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது 71 பேர் வெளியூர்களுக்கு சென்றனர். இது அடுத்த ஆண்டில் 290-ஆக உயர்ந்தது. 2021ம் ஆண்டு 2,381 பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். இவர்களால் அந்த நகரங்கள் அழியாமல் காப்பாற்றப்படும்.

இந்தியாவில் இது மாதிரி எதாவது ஒரு நகரில் இருந்து பணம் கொடுத்தாவது மக்களை வெளியேற்ற வேண்டும் என்றால் எந்த நெரிசல் மிகுந்த நகரத்தை நீங்கள் கைக்காட்டுவீர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?