Japan To Russia, Countries That Pay Couples To Have Kids Twitter
உலகம்

ஜப்பான் முதல் ரஷ்யா வரை: குழந்தைகளைப் பெற தம்பதிகளுக்கு பணம் கொடுக்கும் நாடுகள் தெரியுமா?

சில நாடுகள் குழந்தை பிறக்கத் திட்டமிடும் தம்பதிகளுக்கு பணம் கொடுக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ரஷ்யாவில் ஒரு குழந்தை பிறந்தவுடன், சொந்த வீடு, ஒரு கார் என வழங்கப்படுகிறது. எந்ததெந்த நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது என்று இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

Priyadharshini R

பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு மத்தியில் குழந்தைகளை வளர்ப்பது சவாலாக உள்ளது.

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்த்துப் போராட, பல நாடுகளில் உள்ள அரசாங்கம் பெற்றோருக்கு குழந்தைகளைப் பெற நிதிச் சலுகைகளை வழங்கி வருகிறது.

மக்கள்தொகை வளர்ச்சி குறைவது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மக்கள்தொகையை அதிகரிக்க, சில நாடுகள் குழந்தை பிறக்கத் திட்டமிடும் தம்பதிகளுக்கு பணம் கொடுக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அப்படி குழந்தைகளைப் பெற தம்பதிகளுக்கு பணம் கொடுக்கும் நாடுகள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

ஜப்பான்

ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு அந்நாட்டு அதிகாரிகள் இளந்தாறிகளை அதிகரிக்க புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.

ஜப்பான் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஜப்பானில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் திருமணம், குடும்பம் போன்றவற்றின் மீது ஆர்வத்தை இழந்து வருகின்றனர். தனிமையாக இருக்கும் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளவும், மக்கள் தொகையை அதிகரிக்கவும் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.6 லட்சம் பரிசாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

ரஷ்யா

நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யாவும் இதேபோன்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது. குழந்தைகளைப் பெறத் திட்டமிடும் தம்பதிகளுக்கு செப்டம்பர் 12 பொது விடுமுறையாக அளிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் ஒரு குழந்தை பிறந்தவுடன், சொந்த வீடு, ஒரு கார் என வழங்கப்படுகிறது. இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பிறந்தால், தாய்மார்களுக்கு 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

ருமேனியா

ஐரோப்பாவின் ருமேனியா, தம்பதிகளுக்கு குழந்தைகள் இருந்தால் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மாறாக, குழந்தை பிறக்காத தம்பதிகள் 20 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.

பெலாரஸ்

இந்த ஐரோப்பிய நாட்டில் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பணம் வழங்கப்படுகிறது.

குழந்தை பிறந்தவுடன் பெற்றோருக்கு 1.28 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கூடுதலாக, மூன்று வருடங்கள் வரை ஒவ்வொரு மாதமும், பெற்றோருக்கு ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது.

பின்லாந்து

2013 ஆம் ஆண்டு முதல் பின்லாந்தில் உள்ள லெஸ்டிஜார்வி நகராட்சி தம்பதிகளுக்கு குழந்தை பெற பணம் வழங்கி வருகிறது.

குழந்தை பிறந்த அன்றே பெற்றோருக்கு ரூ.7.86 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுகிறது. ஏனெனில் பின்லாந்தில் மக்கள் தொகை விகிதம் மெதுவாகக் குறைந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?