வேலை நேரத்தில் பிரேக் எடுத்த ஊழியர்; ரூ. 9 லட்சம் அபராதம் விதித்த நிறுவனம் - ஏன்? canva
உலகம்

வேலை நேரத்தில் பிரேக் எடுத்த ஊழியர்; ரூ. 9 லட்சம் அபராதம் விதித்த நிறுவனம் - ஏன்?

Keerthanaa R

வேலை நேரத்தில் அதிகமாக பிரேக் எடுத்த காரணத்திற்காக ஒருவருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலை நேரத்தில் அலுப்பு தெரியாமல் இருக்க அவ்வப்போது சிறிய இடைவெளிகள் எடுத்துகொள்வது வழக்கம். அவசியமும் கூட. ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வேலை பார்ப்பதால் அது நம்மை மனதளவிலும் சரி, உடலள்விலும் சரி பாதிக்கும்.

இந்த இடைவெளிகளில் சிலர் தேநீர், காபி, அல்லது சிற்றுண்டி போன்றவற்றை எடுத்துகொள்வர். புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள், ஒரு குட்டி தம் அடிப்பது சகஜமே.

ஆனால், இங்கு ஒருவருக்கு சிகரெட் பிடிக்க சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'சிகரெட் பிடிக்கிறது குத்தமா?' என்று நீங்கள் கேட்டால், இவர் அளவுக்கு அதிகமாக "ஸ்மோக் பிரேக்" எடுத்ததாக கூறுகிறது அவர் பணியாற்றும் நிறுவனம்.

ஜப்பானின் தி மைனிசி என்ற பத்திரிகை அறிக்கையின்படி, 61 வயதாகும் அந்நபர், ஒசாகா என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 14 ஆண்டுகளில் 4500க்கும் அதிகமான முறை இவர் புகைப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவருக்கு கடந்த 6 மாதங்களாக அவரது ஊதியத்தில் இருந்து 10% குறைத்தே நிறுவனம் சம்பளம் வழங்கியுள்ளது.

தவிர, 3400 முறை unauthorized break எடுத்ததாகவும், ரகசியமாக புகையிலையை இவர் மறைத்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேலதிகாரிகள் அந்த நபரை எச்சரித்துள்ளனர்.

ஆனால் அவர் அப்போதும் அதிகமாக இடைவெளிகள் எடுத்து புகைப்பிடிக்கவே , அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிக இடைவெளி எடுத்த காரணத்திற்காக அவருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பலரும் இந்த அபராதம் நியாயமற்றது எனவும், வேலை நேரத்தில் சக ஊழியர்களுடன் பேசுவது, இடைவெளிகள் எடுத்துக்கொள்வது அவரவர் விருப்பம், இதற்கு நிறுவனம் தடை போடக்கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?