world's best cheese twitter
உலகம்

உலகின் சிறந்த சீஸ் இதுதான் - விஞ்ஞானிகள் கூறும் அடடே காரணம்!

4000த்துக்கும் மேற்பட்ட சீஸ் கட்டிகள் போட்டியில் இடம்பெற்றிருந்த நிலையில், சிறந்த சீஸை தேர்வு செய்வது சற்று கடினமானது தான்.

Keerthanaa R

2022ஆம் ஆண்டின், உலகின் சிறந்த சீஸ் ஐ அறிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். மேலும், சிறந்த சீஸ் இது தான் என்பதற்கான காரணத்தையும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

2022ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த சீஸ் என Le Gruyère AOP surchoix ஐ தேர்வு செய்து அறிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். இங்கிலாந்தில் உலக சீஸ் விருதுகள் நிகழ்வு நடைபெற்றது. இதில் 42 நாடுகள், 900 கம்பனிகளிலிருந்து 4434 சீஸ்கள் இடம்பெற்றிருந்தது.

இவற்றிலிருந்து Le Gruyère AOP surchoix என்ற சீஸ் சிறந்த பாலாடைக்கட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்த சீஸ் உங்கள் நாக்கில் வைத்தால் உருகும்" என காரணத்தை தெரிவித்துள்ளனர்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வோர்டர்ஃபுல்டிஜென் மற்றும் சுத்திகரிப்பாளர் கோர்மினோ நிறுவனத்தை சேர்ந்த இந்த சீஸ், பதனிடப்படாத (raw) மாட்டு பாலை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதன் மென்மையான மற்றும் சற்று மொறுமொறுப்பான( crumbly) பதம் நடுவர்கள் மனதை வென்றதாக கூறப்படுகிறது என்று லங்காஷயர் ஈவினிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

4000த்துக்கும் மேற்பட்ட சீஸ் கட்டிகள் போட்டியில் இடம்பெற்றிருந்த நிலையில், சிறந்த சீஸை தேர்வு செய்யும் காரியம் சற்று கடினமானது தான். ஆகையால் நடுவர்கள் குழுவில், சீஸ் தயாரிப்பாளர்கள், சமையல் கலை நிபுணர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவரும், தோற்றம், சுவை, நறுமணம் உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் சுமார் 50 பாலாடைக்கட்டிகள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவற்றிலிருந்து சூப்பர் கோல்ட் என்று பெயரிடப்பட்டு 98 பாலாடைக்கட்டிகள் தேர்வு செய்யப்பட்டன. அதிலிருந்து 16 பாலாடைக்கட்டிகள் இறுதி தகுதி தேர்வுக்கு தேர்வானது

அவை முன்னணி பாலாடைக்கட்டி சில்லறை விற்பனையாளர்களின் சர்வதேச சூப்பர் ஜூரியால் மதிப்பிடப்பட்டன.

அதில், Le Gruyère AOP surchoix இந்த ஆண்டின் உலக சாம்பியன் சீஸ் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை முதலில் உக்ரைனின் கீவ் தொகுத்து வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உலக சீஸ் விருதுகள் அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, வேல்ஸின் நியூபோர்ட் நகரத்திற்கு மாற்றப்பட்டன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?