நித்தியானந்தா Twitter
உலகம்

Kailasa : நித்தியானந்தாவின் நாடு எங்கு இருக்கிறது? ஐநா சபை அங்கீகாரம் கிடைத்ததா?

அவரது கைலாச நாடு ஐநாவில் பங்கேற்றுள்ள நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்க கூடும். ஏனெனில் அப்படி ஒரு நாடு எங்கே இருக்கிறது என யாருக்கும் தெரியாது.

Antony Ajay R

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா சாமியாராக வலம் வந்தவர். தலைமறைவாகி இப்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக பேசிவந்தார்.

அவரது கைலாச நாடு ஐநாவில் பங்கேற்றுள்ள நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்க கூடும். ஏனெனில் அப்படி ஒரு நாடு எங்கே இருக்கிறது என யாருக்கும் தெரியாது.

இது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர். பலர் கைலாசா எங்கே இருக்கிறது? என இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பலர் தாங்கள் கைலாசா நாட்டுக்கு போக விரும்புவதாக நகைச்சுவை செய்தும் மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.

உண்மையாக கைலாசா எங்கே இருக்கிறது? கூகுள் இந்த கேள்விக்கு அளிக்கும் பதில்கள் என்ன? பார்க்கலாம்.

Where Is Kailasa?

கைலாசா ஈக்குவேடார் கடற்கரையில் இருக்கிறது

கைலாசா ஈக்வடார் கடற்கரையில் அமைந்துள்ளதாகவும், அதன் சொந்த கடவுச்சீட்டு, கொடி மற்றும் "ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா" என்ற வங்கியும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என எக்கனாமிக் டைம்ஸ் தளம் கூறுவதை கூகுள் குறிப்பிடுகிறது.

ஈக்குவேடார் அருகில் உள்ள தீவு

ஈக்வடார் அருகே ஒரு தீவில் அமைந்துள்ள, 'நாடு' அதன் சொந்த கொடி மற்றும் அரசியல் அமைப்பு மற்றும் 'கைலாசா ரிசர்வ் வங்கி' கூட உள்ளது.

என லிவ்மின்ட் தளம் கூறுவதை கூகுள் குறிப்பிடுகிறது.

Owner Of Kailasa

டிசம்பர் மாதம் நித்தியானந்தா தான் சொந்தமாக கைலாசா என்ற இந்து நாட்டை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கான பாஸ்போட், நாணயங்கள் மற்றும் பிற ஆவணங்களும் இருப்பதாக கூறியுள்ளார்.

என விக்கிபீடியா தளம் கூறுவதை கூகுள் குறிப்பிடுகிறது.

What is the new Hindu country Kailasa?

கைலாசா முதல் இந்து இறையாண்மை கொண்ட நாடாக மதகுரு நித்தியானந்த பரமஹம்சாவால் அறிவிக்கப்பட்டது. இவர் இந்து நாகரீகத்தையும் அதன் 10,000 பூர்வீக இந்து மத மரபுகளையும் புதுப்பிக்கிறார்.

என மனிகண்ட்ரோல் தளம் கூறுவதை கூகுள் குறிப்பிடுகிறது.

Population of Kailasa

கைலாசா என்பது 100 மில்லியன் மக்கள்தொகை கொண்ட "இ-தேசம்" ஆகும் "ஆதி ஷைவர்கள் மற்றும் இரண்டு பில்லியன் இந்துக்கள்" இருப்பதாக இணையதளம் கூறுகிறது.

என இந்தியா டுடே தளம் கூறுவதை கூகுள் குறிப்பிடுகிறது.

Kailasa Exist?

கைலாச என்ற கற்பனை நாட்டை உருவாக்கிய நித்யானந்தா, தனது நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறுகிறார். சமீபத்தில் ஐ.நா கூட்டத்தில் கைலாசத்தின் பிரதிநிதிகளும் காணப்பட்டனர். ஆனால், கைலாசத்தை ஐ.நா அங்கீகரிப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

என இந்தியாஈஇன்ஃபோ என்ற தளம் கூறுவதை கூகுள் குறிப்பிடுகிறது.

Is Kailasa Member of United Nations?

"யுனிடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா" உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கைலாசா ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் ஒன்று அல்ல

என என்.டி.டி.வி தளம் கூறுவதை கூகுள் குறிப்பிடுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?