15000 ஜப்பானிய வீரர்களை வீழ்த்திய 1500 பிரிட்டிஷ்-இந்திய வீரர்கள் - கோஹிமா போரின் வீர கதை! Twitter
உலகம்

15000 ஜப்பானிய வீரர்களை வீழ்த்திய 1500 பிரிட்டிஷ்-இந்திய வீரர்கள் - கோஹிமா போரின் வீர கதை!

கேரிசன் ஹில் பகுதியில் நடந்த சண்டை கையில் இருப்பதை எடுத்து அடிக்கும் அளவு நெருக்கமாக நடைபெற்றது. சினிமாவை விட பலமடங்கு த்ரில்லான காட்சிகள் அந்த சண்டை முழுவதும் நிரம்பியிருந்ததாக அந்த காலத்தில் சண்டையிட்ட இளம் வீரர்கள் நினைவுகூறியிருக்கின்றனர்.

Antony Ajay R

இந்த புவியில் நடந்த மிகப் பெரிய போர் என்றால் இரண்டாம் உலகப் போரைத் தான் கூற முடியும். அதிகார சண்டை, சர்வாதிகாரம், அச்சம், பாதுகாப்பின்மை என இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொருவிதமான கதை இருக்கிறது.

இந்தியாவின் ஒரு கதையில் வெறும் 1500 பிரிட்டிஷ்-இந்திய வீரர்கள் 15000 ஜப்பானிய வீரர்களை எதிர்கொண்டனர்.

இந்தியா அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததனால் இந்திய இராணுவத்தின் வீரதீர கதைகள் எதுவும் இல்லை என நினைத்துக்கொள்கிறோம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியிலும் இந்திய இராணுவ வீரர்கள் இந்தியாவை அந்நிய படையெடுப்பில் இருந்து காத்துள்ளனர்.

இந்தியா கண்ட முதல் மற்றும் மிகப் பெரிய அந்நிய படையெடுப்பு என்றால் அது இம்பால் படையெடுப்பு தான். பர்மா வழியாக இந்தியாவை கைப்பற்றி இந்தியாவில் இராணுவத் தளங்கள் அமைக்கலாம் என்ற திட்டத்துடன் லட்சக்கணக்கில் ஜப்பானிய வீரர்கள் நுழைந்தனர்.

அவர்களை தடுத்து துரத்தியது பிரிட்டிஷ் இந்தியப்படை. இந்த இம்பால் படையெடுப்பை இந்தியாவுக்கு சாதகமானதாக மாற்றியது கோஹிமா சண்டை தான். கோஹிமாவில் 4 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 1,500 வீரர்கள் ஜப்பானின் பெரும்படையை எதிர்கொண்டனர்.

நாகாலாந்தின் கொசுக்கள் நிறைந்த ஆபத்தான காடுகளைக் கடந்து ஜப்பானிய படைகள் கோஹிமாவை நெருங்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை.

கோஹிமா நாகாலாந்தின் தலைநகரம் மற்றும் இம்பால் மணிப்பூரின் தலைநகரம். இந்த இரண்டு நகரங்களில் ஒன்று ஜப்பானியர்கள் கைகளுக்கு சென்றால் நிலைமை மோசமாகிவிடும். ஆனால் அதைத் தடுப்பதற்கு வெறும் 1,500 வீரர்கள் தான் இருந்தனர். அவர்களைத் தாக்க வந்ததோ 15,000 பேர்.

வெளிப்படையாக சொல்வதென்றால் தேவையான அளவு ஆட்களும் இல்லாமல் துப்பாக்கிகளும் இல்லாமல் அந்த போர் முடிந்து உயிருடன் வீடு திரும்புவோம் என நம்பிய பிரிட்டிஷ் இந்திய படையினர் குறைவே.

சண்டை நடைபெற்ற போது நிலைமை வேறுவிதமாக மாறியது. இராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே கொடூரமான சண்டையாக அது இருந்திருக்க கூடும்.

குறிப்பாக கேரிசன் ஹில் பகுதியில் நடந்த சண்டை கையில் இருப்பதை எடுத்து அடிக்கும் அளவு நெருக்கமாக நடைபெற்றது. சினிமாவை விட பலமடங்கு த்ரில்லான காட்சிகள் அந்த சண்டை முழுவதும் நிரம்பியிருந்ததாக அந்த காலத்தில் சண்டையிட்ட இளம் வீரர்கள் நினைவுகூறுவதைப் பார்க்க முடிகிறது.

கோஹிமாவைக் கைப்பற்றும் உந்துதலுடன் நெருங்கிய ஜப்பானியர்களை அடுக்கடுக்காக வீழ்த்தியது இந்தியர்களின் படை. இது எப்படி சாத்தியமானது என உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்!

நாகாலாந்து பழங்குடி மக்கள் இந்த போரில் பிரிட்டிஷ் படையினருக்கு உதவினர். காடுகள் குறித்த அவர்களின் ஆழமான அறிவு பிரிட்டிஷ் இந்திய படையை வழிநடத்தியது.

ஆனால் கடலலைப் போல ஒவ்வொரு இரவும் சண்டையிட ஜப்பானிய வீரர்கள் வந்துகொண்டே இருந்தனர். மிகமிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த இந்திய வீரர்கள் 16 நாட்களுக்கும் மேல் தாக்குபிடித்தனர்.

Kohima

மிகவும் சிரத்தையிட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்த இந்திய படைக்கு உதவ மற்ற படைப்பிரிவில் இருந்து வீரர்கள் வந்த பின்னர் போர் இந்தியா பக்கம் திரும்பியது.

நாகாலாந்து பழங்குடி மக்களே வியக்கும் அளவு ஜப்பானியர்களின் வீரமும் தியாகமும் இருந்ததாக கூறப்படுகிறது. தாங்கள் உயிரிழக்கப் போகிறோம் எனத் தெரிந்தால் தற்கொலை தாக்குதல் நடத்தவும் ஜப்பானிய வீரர்கள் அஞ்சவில்லை.

3 மாதம் கோஹிமாவில் போர் நடைபெற்றது. உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்ட ஜப்பானியர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

கோஹிமா போரில் 10-12 ஆயிரம் ஜப்பானிய வீரர்கள் உயிரிழந்தனர். 4-5 ஆயிரம் பிரிட்டிஷ் இந்திய வீரர்களும், 1-2 ஆயிரம் நாகாலாந்து குடிமக்களும் உயிரிழந்தனர்.

நீங்கள் கோஹிமாவில் தொடர்ந்து சண்டையிட வேண்டும் என்ற மேலிடத்து உத்தரவையும் மீறி ஜப்பானியர்கள் பர்மாவுக்குத் திரும்பினர். அப்படி திரும்பும் போது காலரா, டைபாய்டு மற்றும் மலேரியா காரணமாக வீரர்கள் இறக்க நேரிட்டது. வீரர்கள் கொத்துகொத்தாக சரிய பட்டினி மற்றொரு காரணமாக இருந்தது.

கோஹிமா போரின் வெற்றிதான் நேசநாடுகள் மீண்டும் பர்மாவை கைப்பற்ற வழிவகுத்தது. ஆசியாவில் இரண்டாம் உலகப்போரின் போக்கை மாற்றியது இந்த போர் தான்.

இந்த போரின் போது இந்திய தலைவர்கள் இந்தியப் பிரிவினை மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் பற்றி சிந்தனையில் இருந்தனர்.

இங்கிலாந்து மக்களுக்கு சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்து அச்சுறுத்தும் ஜெர்மானியப் படைகள் தான் தலைப்பு செய்தியாக இருந்தன. இதனால் இந்த நாயகர்கள் குறித்து பெரியதாக வெளியில் பேசிக்கொள்ளப்படவில்லை.

வரலாற்றாசிரியர்கள் இந்த போரை "மறக்கப்பட்ட போர்" என்றே குறிப்பிடுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?