4 அழகிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்; இணையத்தில் வைரல் - உண்மை என்ன? | Fact check Twitter
உலகம்

4 அழகிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த அரபி : இணையத்தில் வைரல் - உண்மை என்ன?

Antony Ajay R

குவைத் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் ஒரே மேடையில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பலரும் அந்த நபர் குறித்துப் பொறாமைப்படுவதாக கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

இணையவாசிகள், சிலர் அவர் முன்னாள் மனைவியின் முகத்தில் கரியைப் பூசுவதற்காக இப்படி ஒரே மேடையில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளதாக நம்புகின்றனர்.

திருமண ஆடை அணிந்திருக்கும் நபர் ஒருவரும் அவரை சுற்றி மணக்கோலத்தில் 4 பெண்களும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.

"பிரிந்து போன மனைவி
உன்னோடு ஒரு பெண் கூட வாழ மாட்டாள் என்று சொன்னார்.
எனவே அந்த இளைஞர் ஒரே மேடையில் நான்கு பெண்களைத் திருமணம் செய்தார்." என ஒருவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இது குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

அரபு நாடுகளில் பலதாரமணம் என்பது பரவலான ஒன்றாக இருப்பதனால் இதனை மக்கள் எளிதாக நம்புகின்றனர். ஆனால் இது உண்மையில் ஒரு திருமணத்தின் புகைப்படம் இல்லை.

உண்மை என்ன?

இந்த புகைப்படமானது ஒரு மாடலிங் போட்டோ ஷூட்காக எடுக்கப்பட்டதாக சில பதிவுகள் கிடைக்கிறது என ஸ்கூப் எம்பயர் தளம் கூறுகிறது.

ஆனால் இரண்டு விதமான பதிவுகளும் உண்மைத் தன்மையற்றதாக இருக்கிறது எனவும் ஸ்கூப் எம்பயர் கூறியுள்ளது. எனினும் நெட்டிசன்களுக்கு இது முக்கிய விவகாரமாக தெரிந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?