Road Trip Canva
உலகம்

3 கண்டங்கள், 30 நாடுகள், 30000 கி.மீ - உலகின் நீளமான இந்த பாதைகளில் பயணம் செய்ய தயாரா?

NewsSense Editorial Team

மனித இனத்தின் வளர்ச்சிக்கும், போர், வணிகம் போன்ற பொருளாதார வளர்ச்சிக்கும் பயணம் இன்றியமையாதது. 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்கிற தமிழ் சான்றோர்கள் வாக்கே இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

அப்படி மனிதனாய் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு சூழலில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருப்பர். இன்றைய பொருளாதார வசதி, போக்குவரத்து வசதி, முன்பின் தெரியாத ஓர் இடத்திற்கு செல்ல வேண்டுமானால் எங்கே சென்று யாரை சந்திக்க வேண்டும், எங்கு ஓய்வு எடுக்கலாம், என்ன மாதிரியான உணவு கிடைக்கும் என்பது வரை நமக்கு எல்லா அறிவுரைகளையும் வழங்கும் மேப்பின் தொழில்நுட்பம் & இணைய வசதி போன்றவைகளின் வளர்ச்சியால் பயணங்கள் அத்தனை எளிமையாகியுள்ளன.

அப்படி பயணிக்க காத்திருப்பவர்கள், பயண காதலர்கள், எங்கு பயணிக்கலாம், பயண தூரம் எவ்வளவு, எத்தனை மணி நேரத்துக்குள் உங்கள் பயணத்தை நிறைவு செய்யலாம் என்கிற விவரங்களை தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. பிரிட்டன் முதல் தென் அமெரிக்காவில் உள்ள கேப் ஹார்ன் வரை

ரஷ்யன் ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் என்கிற அமைப்பு 'தி டிரான்ஸ் யூரேஷியன் பெல்ட் டெவலப்மென்ட்' (The Trans Eurasian Belt Development) என்கிற திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்தது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பிரிட்டன் நாட்டிலிருந்து தென் அமெரிக்காவின் கேப் ஹார்ன் பகுதி வரை ஒரு லாங் டிரைவ் செல்லலாம். மொத்த தொலைவு 19,955 கிலோமீட்டர்.

எத்தனை மணி நேரம் ஆகும் என இதுவரை தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.

2. லண்டன் டு கேப் டவுன் (யூரோ ஆப்பிரிக்கன் ரோட் டிரிப்)

ஒரு நாள் திடீரென ஒரு லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் ஏழு அலல்து எட்டு நாட்களுக்குள் அந்த ட்ரிப்பை முடிக்க வேண்டுமானால்?

நீங்கள் யூரோ ஆப்ரிக்கன் ரோட் டிரிப்பை தொடங்கலாம்.

லண்டன் நகரத்தில் தொடங்கி 13,653 கிலோ மீட்டரை ஏழு முதல் எட்டு நாட்களுக்குள், குறைந்தபட்சமாக 8 - 10 நாட்களுக்குள் ஓட்டி முடித்து விடலாம்.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா, நைஜீரியா, கேமரூன் என பல நாடுகளைக் கடந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுனில் உங்கள் பயணத்தை முடிக்கும் போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி கலந்த சுவாரசியம் வருமே, அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

3. ஆசியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை - ஏ ஹெச்1

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரத்தில் பயணிக்க தொடங்கினால் கொரியா, சீனா, ஹாங்காங், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான் என பல நாடுகளைக் கடந்து துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புலில் உங்கள் பயணத்தை நிறைவு செய்யலாம்.

இந்த 20,557 கிலோமீட்டர் தொலைவை கடக்க சுமார் 10 - 12 நாட்கள் ஆகலாம். இப்படி ஒரு பிரமாண்ட ரோட் டிரிப்பை நிறைவு செய்வதென்பது எப்படிப்பட்ட பூரிப்பைக் கொடுக்கும் என்பதை வேண்டர்லஸ்ட்களிடம் தான் கேட்க வேண்டும்.

4. உலகின் மிக நீண்ட பயணம்

சாலை பயணங்கள் என்றாலே 10,000 அல்லது 20,000 கிலோ மீட்டர் எல்லாம் போதாது. குறைந்தபட்சம் 30,000 கிலோ மீட்டர் ஆவது பயணிக்க வேண்டும் என மிகப் பெரிய சவாலுக்காக காத்திருப்பவரா நீங்கள்?

இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் இந்தோனேசிய நாட்டில் சிராய் என்கிற பகுதியில் பயணிக்க தொடங்கினால் அவ்வப்போது கடல்வழி பயணங்கள் மூலம், மலேசியாவை கடந்து, சீனாவைச் சென்றடைவீர்கள்.

அதன் பின் ரஷ்யா, பெலாரஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளைக் கடந்து தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள கியூன் பாயிண்ட்டில் (Quoin Point) உங்கள் பயணம் நிறைவடையும். ஒட்டுமொத்தமாக 33,612 கிலோமீட்டர் தொலைவை நீங்கள் கடக்க சுமார் 530 மணி நேரம் ஆகலாம். வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டினால் கூட இந்தப் பயணத்தை நிறைவு செய்ய சுமார் 22 முதல் 23 நாட்கள் ஆகலாம்.

இந்தோனேசியாவில் தொடங்கும் பயணம், ஆசியா, ஐரோப்பாவைக் கடந்து ஆப்பிரிக்காவில் நிறைவடையுமாம். கேட்கவே குதூகலமாக இருக்கிறதே.

5. ஐஸ்லாந்தில் அருமையான ரோட் டிரிப்

ரோட் டிரிப் என்றாலே பைக்கை எடுத்துக்கொண்டு ‘பறக்கும் ராசாளியே’ என செல்வதோ, அல்லது வித விதமான உணவுகளை சாப்பிடுவது மட்டுமோ அல்ல.

சாலைகளை தாண்டி கண்ணுக்கினிய, அழகான இயற்கை காட்சிகள் இருக்க வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கே அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை இது.

ஐஸ்லாந்தில் ரூட் 1 என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை பயணத்தை வெறும் ஒரு நாளுக்குள் பயணித்து முடித்து விடலாம். இதன் ஒட்டுமொத்த தொலைவு சுமார் 1,340 கிலோமீட்டர்.

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜவிக் நகரத்தில் பயணிக்க தொடங்கி ரூட் ஒன் சாலையிலேயே பயணித்து மீண்டும் ரெய்க்ஜெவிக் நகரத்திற்கு வந்தடைந்தால் இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் நீங்கள் கரைந்து போய் ஒரு புதிய மனிதராக உருவெடுத்து இருப்பீர்கள்.

6. நெய்தல் ரோட் டிரிப்

வெறுமனே சாலையில் பயணித்துக் கொண்டிருப்பது இயற்கை அழகை பார்த்த ரசிப்பது மட்டுமே போதாது. இவற்றுக்கு அடுத்தபடியாக நம் டிரிப்பை அழகாக்குவது கடல்கள்.

அவ்வப்போது கடலில் கால்நனைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கே அமைந்திருக்கும் ஒரு பிரமாதமான ரோட் டிரிப் தான் "தி வைல்ட் அட்லாண்டிக் வே, அயர்லாந்து".

அயர்லாந்து நாட்டில் உள்ள கின்ஸலே (Kinsale) நகரத்தில் இருந்து இனிஷொவென் பெனின்சுலா (Inishowen Peninsula) பகுதி வரை அமைக்கப்பட்டிருக்கும் 2,750 கிலோமீட்டர் கடற்கரை சாலையை கடக்க 2 - 3 நாட்கள் ஆகலாம்.

கடலின் தாலாட்டும் அலையோசைக்கு மத்தியில் அந்த சில நாள் பயணத்தை நிறைவு செய்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்யவே அத்தனை கிளர்ச்சியாக இருக்கிறது.

7. ஆஸ்திரேலியாவின் ஹை வே ஒன் நெடுஞ்சாலை

13,563 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த ஒற்றை நெடுஞ்சாலையில் தொடர்ந்து பயணித்தால் கூட சுமார் 8 - 10 நாட்கள் ஆகலாம். ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள பெர்த் நகரத்தில் ஹைவே ஒன் நெடுஞ்சாலையில் தொடங்கி ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் பெர்த் நகரத்துக்கே வந்து உங்கள் வாகனத்தை நிறுத்தும்போது...

ஆஸ்திரேலியாவை குறித்து நாம் படித்து தெரிந்துக்கொள்வதை விட மிக சீக்கிரமாகவே இந்த பயணத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அதுதான் ஹைவே ஒன் !

8. உலகின் மிக நீண்ட சாலைப் பயணம் - போர்ச்சுகல் டூ ரஷ்யா

வெறும் சாலையில் மட்டுமே பயணிக்க வேண்டும், கடல் பயணம் எல்லாம் சரிப்பட்டு வராது என்பவருக்கான பயணம் இது. சுமார் 15,191 கிலோமீட்டர் தொலைவை கிட்டத்தட்ட 9 - 10 நாட்களுக்குள் தொடர்ந்து பயணித்து கடக்கலாம்.

போர்ச்சுகல் நாட்டிலுள்ள சாக்ரெஸ் நகரத்தில் தொடங்கும் இப்பயணத்தின் போது பல ஐரோப்பிய நாடுகளையும், உலகின் மிகப் பெரிய நிலபரப்பைக் கொண்ட ரஷ்யா நாட்டின் பல நகரங்களையும் கடந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

என்னங்க, ரோட் டிரிப்ப ஆரம்பிக்களாங்களா..?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?