அப்பளத்தின் விலை 510 ரூபாயா? 'Asian Nachos' என விற்பனை செய்யும் உணவகம் - எங்கே? Papadam
உலகம்

அப்பளத்தின் விலை 510 ரூபாயா? 'Asian Nachos' என விற்பனை செய்யும் உணவகம் - எங்கே?

Antony Ajay R

இந்திய விருந்துகளில் இன்றியமையாத உணவு அப்பளம். குறிப்பாக சாம்பார் முதல் மோர் வரை வழங்கப்படும் முழு மீல்ஸ் அப்பளம் இல்லாமல் முழுமையடையாது.

அப்பளத்தை இறுதிவரை சாப்பிடாமல் வைத்து பாயசத்துடன் உண்ணும் போது கிடைக்கும் சுவைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். அதற்காக இவ்வளவா? என வாய்பிளக்க வைக்கிறது மலேசிய உணவகம் ஒன்றின் விலை.

மதிய உணவுகள் உப்பு, காரத்துடன் எளிதாக நாக்கில் எச்சில் ஊற வைக்கும். இதனால் உலகின் பல இடங்களிலும் இந்திய உணவகங்கள் இருக்கின்றன.

ஆனால் இந்த உணவகங்கள் பெரும்பாலும் விலையுயர்ந்ததாக இருக்கும். அந்த நாடுகளில் வாழும் இந்தியர்களே சில சிறப்பு தினங்களில் மட்டும் தான் இந்திய உணவகத்துக்கு செல்ல முடியும்.

சரி விஷயத்துக்கு வருவோம், மலேசியாவில் ஒரு காஸ்ட்லி உணவகம் அப்பளத்தை 510 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக வெளிவந்துள்ள தகவல் இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த உணவகம் அப்பாளத்துக்கு ஆசிய நாச்சோஸ் என்று பெயர் வைத்துள்ளது.

ட்விட்டரில் சமந்தா என்ற பெண் மெனுவில் உள்ள அப்பளத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து அது 6.30 அமெரிக்க டாலர்கள் விலை எனக் கூறியுள்ளார்.இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 510 ரூபாய்.

பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களுக்கு செல்லும் இந்தியர்கள் விலை உயர்வு காரணமாக இந்திய உணவுகளை சாப்பிட முடியாது. "யாதும் உணவே" என்று அந்தந்த ஊர் உணவுகளையே சாப்பிட்டுக்கொள்ள வேண்டியது தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?