மாரடைப்பு ஏற்பட்டது போல் நடித்து 20 உணவகங்களை ஏமாற்றிய நபர் - சிக்கியது எப்படி? twitter
உலகம்

மாரடைப்பு ஏற்பட்டது போல் நடித்து 20 உணவகங்களை ஏமாற்றிய நபர் - சிக்கியது எப்படி?

Keerthanaa R

மாரடைப்பு ஏற்பட்டதாக நடித்து, பல உணவகங்களில் பில் கட்டாமல் ஏமாற்றியுள்ளார் 50 வயது நபர் ஒருவர்.

நமது நண்பர்களுடன் ரெஸ்டாரண்ட்களுக்கு சாப்பிட செல்லும்போது, ஒரு முறையாவது பில் கட்டணம் செலுத்தாமல் வந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும்.

இதை ஒரு விளையாட்டாக நாம் செய்திருப்போம். சிலர் மாட்டியிருப்போம், சிலர் தப்பித்திருப்போம். இங்கு ஒரு நபர் சுமார் 20 உணவகங்களை ஏமாற்றியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், பெரிய உணவகங்களை குறிவைத்து, அங்கு சென்று சாப்பிடுவார் இந்த 50 வயது நபர்.

உணவருந்திவிட்டு பில் கட்டவேண்டிய சமயம் வரும் போது மாரடைப்பு ஏற்பட்டது போல நெஞ்சில் கைவைத்து கொண்டு சரிந்து விடுவார், அல்லது மயங்கி கீழே விழுந்துவிடுவார்.

இவரது நிலையை பார்த்து பயந்து, உணவகத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து இவரை அனுப்பி வைப்பார்கள்.

இந்த கதை சுமார் 20 உணவகங்களில் நடந்துள்ளது.

இந்த நாடகம், சமீபத்தில் ஒரு உணவகத்தில் இருந்து அவர் தப்பி ஓட நினைத்த போது அம்பலமாகியுள்ளது.

அவர் சாப்பிட்ட உணவின் கட்டணம் 3000 ரூபாய். கட்டணம் செலுத்தாமல் வெளியேற முயற்சித்தவரை அந்த உணவக ஊழியர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

நீங்கள் இன்னும் பில் கட்டவில்லை என்றபோது, தனது விடுதி அறையில் பர்சை வைத்துவிட்டதாகவும், திரும்பி வந்து செலுத்துவதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஊழியர் அவரை அனுமதிக்கவில்லை.

உடனே மாரடைப்பு ஏற்பட்டது போல செய்கை செய்து மயங்கி சரிந்துள்ளார். ஆம்புலன்சை வரவழைக்கச் சொல்லி கேட்டுள்ளார்.

ஓட்டல் ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இவரது நாடகம் மொத்தமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இனிமேலும் உணவகங்கள் ஏமாறாமல் இருக்க, அவரது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளதாக அந்த உணவகத்தின் ஊழியர் ஸ்பெயின் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?