Boring Person Representational
உலகம்

சிடுமூஞ்சாக இருந்ததால் பறிபோன வேலை - நீதிமன்றத்தை நாடிய ஊழியருக்கு என்ன நடந்தது?

வேலை செய்யும் குழுவுடன் பிணைப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப்போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

Antony Ajay R

அலுவலகத்தில் கலகலப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உளவியல் ரீதியாக சிக்கலான ஒன்றே. பாஸ் அடிக்கும் மொக்கை ஜோக்குக்கு கூட சிரிக்க வேண்டியது போன்ற நிபந்தனைகள் நிறைந்தது தான் பல அலுவலக கெட்-டுகெதர்கள்.

இவற்றில் கலந்து கொள்ள விரும்பாத ஒருவர் அலுவல்-அரசியலுக்கு சிக்குவது கார்பரேட் வழக்கம். ஆனால் இதனால் வேலையயே இழந்துள்ளார் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர்.

வேலை செய்யும் குழுவுடன் பிணைப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப்போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

தொழில்துறை நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கில் வெற்றியும் பெற்று அலுவலகத்தில் போரிங்க் பர்சனாக இருப்பதற்கான உரிமையை நிலைநாட்டினார்.

வேலை செய்யும் குழுவுடன் பிணைப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் என்பது வேலை நேரத்தைத் தாண்டியும் அலுவலகத்தில் இருக்க வைப்பது முதல் வார இறுதியில் குடிக்க வைப்பது வரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது.

இது குறித்த விசாரித்த நீதிமன்றம், அதிக அளவு மது அருந்துதல், விபச்சாரம், தொல்லை செய்தல் (பகடி செய்தல்) போன்ற மோசமான விஷயங்கள் அலுவலக கெட்-டுகெதர்களில் திணிக்கப்படுவதாக கூறியுள்ளது.

குப்ரிக் பார்ட்னர்ஸ் என்ற அந்த நிறுவனத்தில் 2011ம் ஆண்டு சேர்ந்த அந்த நபர் 2014ல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் பொழுதுபோக்குகளில் ஈடுபாடு காட்டாததைக் காரணம் காட்டி அவரை பதவி நீக்கம் செய்திருக்கிறது நிறுவனம்.

அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக இருப்பதாக அவரது சக பணியாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

ஆனால் நீதிமன்றம் இந்த விஷயங்களுக்காக அவரை குற்றம் சொல்ல முடியாது எனக் கூறி, நிறுவனம் அவருக்கு 2.54 லட்சம் வழங்குமாறு கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?