தனக்கு பொழுதுபோகவில்லை என்ற காரணத்தால் உலகின் ஆபத்தான செடியை வீட்டில் வளர்த்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர்.
மாறி வரும் உலகில் வேடிக்கைகளுக்கும், சுவாரஸ்யங்களுக்கும் எப்போதும் குறை இருந்ததில்லை. அந்த வகையில் பிரிட்டனை சேர்ந்த டேனியல் எமிலின் ஜோன்ஸ் என்ற நபர் தனக்கு போர் அடிப்பதாக கூறி செடி ஒன்றை வீட்டில் வளர்த்துள்ளார். அவர் வளர்த்துள்ளது ஜிம்பி ஜிம்பி (Australian Stinging Tree) என்ற செடி.
இந்த செடியை வீட்டில் ஒரு தனி இடத்தில் "ஆபத்து" (Danger) என்று பெயரிட்டு கூண்டில் வைத்துள்ளார் என தி இண்டிபெண்டென்ட் பத்திரிக்கை கூறுகிறது.
ஜிம்பி ஜிம்பி உலகின் மிக பயங்கரமான, ஆபத்தான தாவரம் என்று அறியப்படுகிறது. இந்த செடி மனிதர்கள் மீது தாக்கினால், பல மாதங்களுக்கு உடலில் வலி ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் தற்கொலை எண்ணகளையும் தூண்டவல்லது இந்த செடி!
"இது உலகின் அதிக விஷத்தன்மை வாய்ந்த தாவரமாகும். இது மனிதர்களின் உடலில் பட்டால் சூடான அமிலத்தை நம் மீது ஊற்றும் அதே நேரத்தில் மின்சாரம் உடலில் தாக்குவது போன்ற உணர்வைக் கொடுக்கும்" எனவும் தி இண்டிபெண்டென்ட் பத்திரிக்கையின் அறிக்கை கூறுகிறது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கும் டேனியல், "இந்த செடியை என் தோட்டத்தில் வைத்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும்" என்று வேடிக்கையாக கூறுகிறார்.
இந்த தாவரத்தின் விதைகளை ஒரு ஆஸ்திரேலிய நிறுவனத்திடமிருந்து இணையத்தில் வாங்கியுள்ளார் டேனியல். "இது வளர்க்கப்படும் இடத்திலிருந்து கொஞ்சம் விலகி அது படர்ந்தாலும் ஆபத்து என்பதால் இதை என் கண்முன்னே, வீட்டின் முன் அறையில் வைத்து வளர்த்தேன்".
மேலும் தனக்கு செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருப்பதாலும், வழக்கமான செடிகளை வளர்த்து போர் அடித்ததால் இதை வாங்கியதாக அவர் சொன்னார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust