Jason Baird Instagram
உலகம்

அந்தரத்தில் தொங்கிய சிறுவனை காப்பாற்றிய Real Spiderman - குவியும் பாராட்டுகள்

கிட்ட தட்ட 50 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை காப்பாற்றியுள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த ஜேசன் என்பவர். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Keerthanaa R

சறுக்கலில் சிக்கிக்கொண்ட நான்கு வயது சிறுவனை காப்பாற்றி அசத்தியுள்ளார், தற்காப்பு கலை நிபுணரான ஜேசன் பைர்ட் என்ற நபர்.

சூப்பர் ஹீரோக்கள் மீது நமக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. கதைகளில் தோன்றுகின்றவர்கள் நிஜத்தில் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு நம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி, ஆபத்தான தருணம் ஒன்றில் நமக்கு பிடித்த சூப்பர் ஹீரோ வந்து நம்மை காப்பாற்றினால்?

இங்கும் ஒருவர், அப்படி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை மீட்டுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஸ்டாக்ஃபோர்ட் ஸ்பைடர் மேன் என்றழைக்கபடுபவர் தற்காப்பு கலை நிபுணரான ஜேசன் பைர்ட். இவர் ஒரு நாள் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்றுகொண்டிருந்தபோது, ஹெல்டர் ஸ்கெல்டர் ஸ்லைட் எனப்படும் சறுக்கலில் ஒரு குழந்தை மாட்டிக்கொண்டு இருப்பதை பார்த்துள்ளார்.

ஹெல்டர் ஸ்கெல்டர் ஸ்லைட் என்பது ஒரு வகையான சறுக்கல். இது, ஒரு கோபுரத்தை சுற்றி மேலிருந்து கீழே இறங்கும் வகையிலான, சறுக்கல். இவற்றை அம்யூஸ்மென்ட் பார்க்குகளில் அதிகம் காணலாம். இந்த ஸ்லைடில் தான் அந்த சிறுவன் சிக்கிகொண்டு, கிட்ட தட்ட 50 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான்.

பயந்திருந்த சிறுவனும் தப்பிக்க முயன்றுகொண்டு இருந்திருக்கிறான். சுமார் 50 அடி உயரத்தில் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்த சிறுவனை பார்த்த ஜேசன், ஸ்லைடின் மீதேறி சென்று சிறுவனை காப்பாற்றினார்.

பயத்தில் அழுதுகொண்டிருந்த சிறுவனை சமாதானப்படுத்தி, அவனது பெற்றோரிடமும் ஒப்படைத்தார். ஜேசனின் வீர செயலுக்கு பாராட்டுகள் குவிந்தது.

ஜேசனுக்கு அந்த ஊரில் மற்றொரு பெயரும் உண்டு. இவரை, ஸ்டாக்ஃபோர்ட்டின் ஸ்பைடர் மேன் என்று தான் மக்கள் அழைக்கின்றனர். இதற்கு காரணம், கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல் ஊரடங்கின் போது குழந்தைகளின் மனம் கவர்ந்த ஸ்பைடர் மேன் போல உடையணிந்து மக்களை என்டெர்டெய்ன் செய்து வந்தார். இவருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும் என்பதால், ஸ்பைடர்மேனை போல ஸ்டன்ட்டுகளை செய்து உற்சாகப்படுத்தினார்.

இவரது இந்த நல்லெண்ணத்தை பாராட்டி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், ஒரு முறை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விருந்து, ஜேசனின் தன்னலமற்ற செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?