தன்னை வேலை எதுவும் செய்யவிடாமல் ஒவ்வொரு மாதமும் சம்பளம் மட்டும் தருவதாக குற்றம்சாட்டி, தன் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார் ஒருவர்.
நாம் வேலை செய்யும் இடத்தில், சக ஊழியர்களால் அல்லது மேலதிகாரிகளால் ஏதாவது ஒரு விதத்தில் பணியில் தடங்கல்கள் ஏற்படும். சிலர் முறையாக இதை கையாண்டு அதை தாண்டி வந்துவிடுவர். ஆனால், சிலரை இது மனதளவில் பாதிப்பதோடு, வேலையையும் கெடுத்துவிடுகிறது.
அப்படி, நிறுவனத்தில் நடக்கும் ஒரு சிறு தவறை சுட்டிக்காட்டிய ஒருவரை நிறுவனமும் சக ஊழியர்களும் இணைந்து பணி செய்யவிடாமல் தடுத்துவருகின்றனர். இதனால் மனதளவில் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
டெர்மாட் ஆலிஸ்டர் மில்ஸ் என்பவர் ஐரிஷ் மெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராக பணியாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு 1.3 கோடி ரூபாய் இவரது சம்பளம். நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் குறை இருப்பதை ஒருமுறை மில்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதான் அவருக்கே பிரச்னையாக வந்து முடிந்துள்ளது. இவர் சுட்டிக்காட்டிய தவறை நிறுவனமோ, சக பணியாளர்களோ ஏற்றுக்கொண்டதா என்று தெரியவில்லை.
ஆனால், அதன் பிறகு மில்ஸிடம் ஊழியர்கள் யாரும் பேசவில்லை என கூறப்படுகிறது, அவருக்கு அலுவலக ரீதியாக தகவல்கள் பகிர்வது, மெயில்கள் அனுப்பவது என அனைத்தையும் நிறுத்தியுள்ளனர்.
வாரம் 5 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே மில்ஸ் அலுவலகம் செல்கிறார்.
அப்படி சென்றாலும், நாளிதழ் படிப்பது, சாண்ட்விச் சாப்பிடுவது, சிறிது நேரம் வாக்கிங் செல்வது தான் அவரின் ரொட்டினாக உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு இவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கு பின்னர் வலுக்கட்டாயமாக இவரை மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துகொள்ளும்படி நிறுவனம் நிர்பந்தித்துள்ளது. Workplace Bullying-ஐ காரணம் காட்டி நிறுவனமே இவருக்கு இந்த வலுக்கட்டாய விடுப்பை அளித்துள்ளது.
மீண்டும் வேலைக்கு வரும்போது, அவரை இதே பதவியில் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறியுள்ளது. ஆனால், தன்னுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், தன்னை வேலை செய்யவிடாமல் நிறுவனம் அவரை மனவுளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டி, Workplace Relations Commission இடம் புகார் அளித்துள்ளார் மில்ஸ். ஆனால் நிறுவனமோ அந்த புகாரை மறுத்துள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust