"தனிமையாக இருக்கிறது" - 60 வருடங்களாக உறங்காமல் உயிர் வாழும் நபர் - எங்கே? என்ன காரணம்? twitter
உலகம்

"தனிமையாக இருக்கிறது" - 60 வருடங்களாக உறங்காமல் உயிர் வாழும் நபர் - எங்கே? என்ன காரணம்?

அவ்வப்போது இயற்கையை விஞ்சும் ஆச்சரியமாக ஒரு சில நிகழ்வுகள் நடக்கின்றன. தாய் நகோக் என்ற 80 வயது மனிதர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கவே இல்லை.

Keerthanaa R

சுமார் 60 ஆண்டுகளாக ஒரு நிமிடம் கூட உறங்காமல் உயிர்வாழ்ந்து வருகிறார் வியட்நாமை சேர்ந்த 80 வயது முதியவர் தாய் நகோக்.

உறக்கம் மனித உடலுக்கு முக்கிய மூன்று தேவைகளுல் ஒன்று. சராசரியாக 6 முதல் 8 மணி நேர தூக்கம் மனிதன் உடல்நலத்தோடு வாழ அவசியம் என்கிறது அறிவியல்.

நம்மால் உறங்காமல் 264 மணி நேரம், அதாவது 11 நாட்கள் உயிர்வாழ முடியும் என்பது தான் இதுவரை பதிவு செய்யப்பட்ட தகவல்.

உறக்கம் இல்லாமல் ஒரு மனிதன் உயிரிழக்கக்கூடும். ஆனால், அது மிகவும் அரிதான நிகழ்வு தான் என ஹெல்த் லைன் டாட் காம் தளம் கூறுகிறது.

அவ்வப்போது இயற்கையை விஞ்சும் ஆச்சரியமாக ஒரு சில நிகழ்வுகள் நடக்கின்றன. வியட்நாமை சேர்ந்த தாய் நகோக் என்ற 80 வயது மனிதர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கவே இல்லை.

அவருக்கு சிறு வயதில் இருக்கும்போது ஒரு முறை காய்ச்சல் வந்ததாகவும், அதன் விளைவாக அவர் தூக்கத்தை இழந்துவிட்டதாகவும் தாய் கூறுகிறார். இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பாதிப்பால், கடந்த 1962 முதல் ஒரு நிமிடம் கூட இவர் கண் அசரவில்லை.

இவரது மனைவி மக்கல், ஒரு முறை கூட இவர் தூங்கி நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர். இதறகாக பல மருத்துவர்களையும் இவர்கள் சந்தித்துள்லனர். ஆனால் பலனில்லை.

பொதுவாக முன்று நாட்களுக்கு மேல் உறங்காமல் இருந்தால், மூளை செயலிழந்துவிடும். அது மரணத்தில் சென்று முடியலாம், அல்லது உடலில் வேறு விதமான தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். மனநல பாதிப்பு ஏற்படலாம்.

எனினும் தாய் இந்த மாதிரியான பிரச்னைகள் எதுவும் இல்லை என்கிறார். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு தான் உயிர்வாழ்ந்து வருகிறார். இவருக்கு க்ரீன் டீ மற்றும் வைன் பிடித்தமான பானங்கள்.

ஆனால், தானும் மற்றவரை போல தூங்கவேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அவருக்கு இருக்கிறது என்று கூறுகிறார். சரியான உறக்கம் இல்லாவிட்டால், இனம்புரியாத தனிமை ஒருவருக்கு வாழ்வில் வந்துவிடும். அந்த தனிமையால் பாதிக்கப்படுவதாக தாய் கூறுகிறார்.

ட்ரூ பின்ஸ்கி என்பவர் தாய் நகோக் பற்றி அறிந்து அவரை தேடிச் சென்றார். நகோக்கை பேட்டிக் கண்டு தனது யூடியூப் பக்கதில் அவரது கதையை பகிர்ந்த அந்த வீடியோ 3.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

நகோக்கால் ஏன் உறங்கமுடியவில்லை என்ற காரணத்தை யாராலும் கண்டறிய முடியவில்லை என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?