Meet Atlas, the 11-month-old globetrotter who has travelled to 23 countries  Twitter
உலகம்

Atlas : 6வது வாரம் முதல் பயணம், 23 நாடுகளை சுற்றிய 11 மாதக் குழந்தை - ஒரு கியூட் ஸ்டோரி

Priyadharshini R

பயணத்தை விருப்பாதவர் யாருமே இல்லை. பயணம் பலருக்கு சந்தோசத்தை, ரிலாக்‌ஷேசனை கொடுக்கிறது. வெறும் 11 மாதங்களில் 23 நாடுகள் சுற்றிவந்த குழந்தையை பற்றிய கதை தான் இது!

பொதுவாக குழந்தை வைத்திருப்பர்வர்கள், வெளிஊருக்கு பயண செய்ய யோசிப்பர். பயணத்தின் போது குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கும் என்று. ஆனால் ஒரு தம்பதி தங்கள் 6 வார குழந்தையுடன் உலகம் சுற்ற புறப்பட்டுள்ளனர். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா?

பிரிட்டனைச் சேர்ந்த பெக்ஸ் லூயிஸ் மற்றும் வில் மாண்ட்கோமெரி ஆகியோரின் குழந்தை தான் அட்லஸ். இந்த குழந்தை தான் 11 மாதத்தில் 23 நாடுகளுக்கு சென்றுள்ளான்.

இதுகுறித்து மாண்ட்கோமெரி கூறுகையில், குழந்தைக்கு ஏதாவது பிரச்னை வரும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. லூயிஸ் மகப்பேறு விடுப்பில் இருந்தபோது நாங்கள் பயணம் செய்ய ஆரம்பித்தோம். அப்போது குழந்தை அட்லஸுக்கு வயது 6 வாரங்கள்தான்.

அட்லஸ் இவ்வளவு சிறிய வயதில் பல நாடுகளுக்குச் சென்றுள்ள உலகின் முதல் குழந்தையாக இருக்க போகிறான். நாங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தபோது அவன் சறுக்க கற்றுக்கொண்டார். நோர்வேயில் அவனுக்கு முதல் பல் வெளிவந்தது. பிரான்சில் உணவு உண்ணத் தொடங்கினான். இதுவரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கு எங்கள் வேன் மூலம் சென்று வருகிறோம் என்றார் வில்.

பேபி அட்லஸ் மற்றும் அவனது குடும்பத்துடன் இத்தாலி, சான் மரினோ, சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், ஸ்லோவேனியா, குரோஷியா, ஆஸ்திரியா, செக்கியா, டென்மார்க் மற்றும் நார்வே உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

நியூயார்க் போஸ்ட் படி, லூயிஸ் அட்லஸ் இதுவரை 23 நாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும், மொத்தம் 25 நாடுகளுக்கு போகத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பயணத்திற்கான பணத்தை முன்பே இருவரும் சேமித்து வைத்துள்ளனர். அவர்கள் தினமும் 4 டாலர்கள் அதாவது 320 ரூபாய் மட்டுமே உணவுக்காக செலவிட்டுள்ளார். பட்ஜெட்டிலேயே பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பயணத்தின் போது குழந்தையும் எப்படி சமாளிப்பது என்று கற்றுக்கொண்டோம் என்றும் உண்மையில் இது ஒரு மகத்தான பயணம், உலகின் அனைத்து நாடுகளுக்கும் குழந்தையை அழைத்து செல்ல விரும்புகிறோம் என்றும் லூயிஸ் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?