Erin Honeycutt: உலகின் மிக நீண்ட தாடி கொண்ட பெண்- சந்தித்த இன்னல்கள் என்ன? நெகிழ்ச்சி கதை Twitter
உலகம்

Erin Honeycutt: உலகின் மிக நீண்ட தாடி கொண்ட பெண்- சந்தித்த இன்னல்கள் என்ன? நெகிழ்ச்சி கதை

எவ்வளவு கடினங்கள் வாழ்வில் இருந்தாலும், தனது தாடி தான் தனக்கு ஊக்கமளிக்கிறது என்றும் நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார் எரின்

Keerthanaa R

உலகின் மிக நீண்ட தாடியை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் எரின் ஹனிகட் என்ற பெண். தன் வாழ்வில் பல சங்கடங்களை கடந்து வந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார் எரின்

அமெரிக்காவை சேர்ந்தவர் எரின் ஹனிகட். இவருக்கு ஆண்களை போல தாடி வளருகிறது. இவருக்கு பி சி ஓ எஸ் என்றழைக்கப்படும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பிரச்னை இருக்கிறது.

இந்த குறைபாடு உள்ள பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுத்துவதுடன், ஹார்மோன்கள் சமநிலையில் இருக்காது. இதனால் அதிகமாக உடலில் முடி வளரும்.

எரினுக்கு இதனால் முகத்தில் தாடி முளைக்க ஆரம்பித்திருக்கிறது. 13 வயது முதலே அவருக்கு இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில், ஒரு நாளைக்கு மூன்று முறை சவரம் செய்வதும், வேக்ஸிங் செய்தும் வந்தார் எரின். ஆனால் காலப்போக்கில் அவருக்கு பக்கவாதம் காரணமாக பகுதி பார்வை குறைபாடு (partial blindness) ஏற்பட்டது. மேலும் உயர் ரத்த அழுத்தமும் உண்டானதால், தாடியை ஷேவ் செய்வதை நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு, தன் உடலை அதன் இயற்கையான போக்கிலேயே கவனித்துக்கொண்டார்.

சமுதாயத்தில் அவரைப் பற்றி யார் என்ன கேலி கிண்டல் செய்தாலும், தனது தாடியை வளர்க்க தொடங்கினார் எரின். கடந்த பிப்ரவரி மாதம் உலகின் மிக நீண்ட தாடி உடைய பெண்மணி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தார்.

தற்போது எரினுக்கு வயது 38.

இவரது தாடியின் நீளம் 11.8 இன்ச் ஆகும். இவருக்கு முன்னர் இந்த சாதனையை விவியன் வீலர் என்ற 75 வயது பெண் செய்திருந்தார். இவரது தாடியின் அளவு 10 இன்ச் ஆக இருந்தது.

எரினுக்கு அவரது வாழ்க்கை எளிதானதாக இல்லை. உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், அதனால் பார்வை இழப்பு ஏற்பட்டது. இதனுடன் இவருக்கு bacterial infection ஏற்பட்டதால் இவரது இடது காலையே அகற்றவேண்டிய நிலையும் உண்டானது.

எனினும் தலைநிமிர்ந்து வலுவோடு நிற்கிறார் எரின். இவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு அளவுக்கு அதிகமான அன்பை வழங்குகின்றனர்.

இவ்வளவு கடினங்கள் வாழ்வில் இருந்தாலும், தனது தாடி தான் தனக்கு ஊக்கமளிக்கிறது என்றும் நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார் எரின்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?