Meta: "உலகம் சுற்றும் வாலிபன்" ரு.2 கோடிக்கு க்ரூஸில் வீடு வாங்கிய இளைஞர்!  ட்விட்டர்
உலகம்

Meta Work from Ship: ரூ.2 கோடிக்கு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்த FB ஊழியர்- வசதிகள் என்ன?

Keerthanaa R

வேலை பார்த்துக்கொண்டே உலகை சுற்றி வர ஆசைப்பட்ட மெட்ட நிறுவன ஊழியர் ஒருவர், சொகுசு கப்பலில் அப்பார்ட்மென்ட் ஒன்றை ரூ.2.4 கோடிக்கு லீஸுக்கு வாங்கியுள்ளார்

மெட்டாவை தாய் நிறுவனமாக கொண்ட ரியாலிட்டி லேப்ஸில் வேலை பார்ப்பவர் ஆஸ்டின் வெல்ஸ் என்ற 28 வயது இளைஞர். அமெரிக்காவின் சான் டியாகோ மாகாணத்தை சேர்ந்த இவருக்கு சுற்றுலா மீது அதீத காதல். அதே சமயம், வேலை மீதும் அதிக ஈடுபாடு.

இதனால் என்ன செய்வதென்று யோசித்த ஆஸ்டின், சொகுசு கப்பலில் வீடு வாங்கியுள்ளார்!

MV Narrative என்ற மெகா க்ரூஸ் கப்பலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு அப்பார்ட்மென்ட்டை இவர் லீஸுக்கு எடுத்துள்ளார். இந்த கப்பலில் மொத்தம் 500 தனியறைகளும், அப்பார்ட்மென்ட்களும் உள்ளன.

மருத்துவம் முதல் மளிகை வரை:

இது குறித்து சிஎன்பிசியிடம் பேசிய ஆஸ்டின், தனது அன்றாட வேலைகளை செய்துகொண்டே, புதுப் புது இடங்களுக்கு டிராவல் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்

"உலகை சுற்றிப்பார்க்கவேண்டும் என்பதற்காக, என் தினசரி வேலைகளை நான் செய்வதை நிறுத்தவேண்டாம்! இது தான் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது"

மேலும் அவர், பொதுவாக நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கொண்டும், விமானத்தில் பயணித்தும், தங்க ஒரு இடம் கண்டுபிடித்துக்கொள்வதும் என எல்லாவற்றையும் நாம் தேடி செல்லவேண்டும்.

ஆனால், இங்கு எனது காண்டோவில் (அப்பார்ட்மென்ட்டில்) மருத்துவர்கள் முதல் மளிகைப் பொருட்கள் வரை, எல்லாம் என்னுடனே பயணிக்கப்போகிறது என்றார்

வசதிகள் என்னென்ன?

ஆஸ்டின் இந்த அப்பார்மென்ட்டை 300,000 டாலர்கள் கொடுத்து லீஸுக்கு வாங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2.4 கோடி ரூபாய்!

இந்த எம் வி நரேட்டிவ் சொகுசு கப்பலில் மொத்தம் 11 விதமான குடியிருப்புகள் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த இந்த குடியிருப்புகள் சுமார் 1970 சதுர அடி கொண்டது. 4 பெட் ரூம்கள், ஒரு டைனிங் ஏரியா, இரண்டு கழிப்பறைகள் ஒரு பால்கனி என, தரையில் இருக்கும் வீடுகள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெல்ஸ் மிகவும் அடிப்படையான "டிஸ்கவர்" என்ற குடியிருப்பை வாங்கியுள்ளார். 237 சதுர அடி கொண்ட இங்கு அவருக்கு ஃபோல்டிங் பெட், பேன்ட்ரி, மற்றும் குளியலறை ஆகிய வசிகள் வழங்கப்படும். இந்த கப்பல் மூன்று ஆண்டுகள் உலகை சுற்றிவரவுள்ளது.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

ஆஸ்டின் இங்கு குறைந்தது 3 ஆண்டுகளாவது தங்க விரும்புகிறார் என பிசினஸ் டுடே செய்தி தளம் கூறுகிறது

ஆஸ்டினுக்கு இங்கு co-working space, ஜிம், ஸ்பா, அவசர சேவைகள் மற்றும் 24 மணி நேர அறை சேவை அனைத்தும் அவரது குத்தகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

Storylines என்ற நிறுவனம் இந்த கப்பலை உருவாக்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டு இந்த கப்பல் செயல்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?