பொம்மைகள் விளையாட்டு பொருள் என்பதை தாண்டி பல திரைப்படங்களில் திகிலூட்டும் பொருளாக நமக்கும் காண்பித்திருக்கிறார்கள்.
ஆளே இல்லாத ஒரு தீவில் 1500க்கும் அதிகமான பொம்மைகள் இருக்கிறது. அதுவும் பார்வையாளர்களை பயமுறுத்தும் வகையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எங்கே இருக்கிறது இந்த தீவு? விரிவாக படிக்கலாம்
அமெரிக்காவின் மெக்ஸிக்கோ மாகாணத்தில் இருக்கிறது இந்த பொம்மை தீவு. சுற்றிலும் ஏரி இருக்கும் இந்த தீவிலிருந்து சுமார் 1.5 மணி நேரப் படகு பயணத்திற்குப் பிறகு ஒரு சிறிய கிராமம் உள்ளது.
புராணக்கதைகள் சொல்வதை வைத்துப் பார்த்தால், சிறுமி ஒருவர் அந்த ஏரியில் கையில் பொம்மையுடன் முழ்கி இறந்துவிட்டதாகவும், சிறுமியின் உடல் கூட கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
20ம் நூற்றாண்டின் மத்தியில் அப்பகுதிக்கு டான் ஜூலியன் என்பவர் சென்றுள்ளார். அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து ஒரு சிறிய படகு மூலம் அந்த ஏரியில் சுற்றியுள்ளார்.
அப்பொழுது கிராமத்திலிருந்து சில மைல் தூரத்தில் ஒரு அழகான தீவு ஒன்று இருந்துள்ளது. உடனடியாக படகை அந்த தீவை நோக்கிச் செலுத்தி தீவில் இறங்கினார்.
தீவில் அவர் இறங்கிய சில நிமிடங்களில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
டான் ஜூலியன் முதலில் அங்கு சென்றபோது, "எனக்கு என் பொம்மை வேண்டும்" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகக் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து, அவர் அலறல் சத்தம் கேட்ட இடத்திற்கு அருகில் ஒரு பொம்மையைக் கண்டார்.
அதன் பின்னர் டான் ஒவ்வொரு நாளும் தீவைச் சுற்றி நிறைய பொம்மைகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்.
டான் ஜூலியன் பொம்மைகளை மரங்களில் தொங்கவிடத் தொடங்கினார். அது தீய ஆவியிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் என்று நம்பினார்.
அவருக்கு மனைவி குழந்தைகள் இருந்த போதிலும் தீவிலேயே தங்க முடிவு செய்தார். அந்த தீவிலேயே தனக்கு கிடைத்த பொருட்களை வைத்து சிறு வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டிலேயே வாழ்ந்தார்.
அங்கு விவசாயம் செய்ய துவங்கினார். அங்கு விளையும் பொருட்களை எடுத்து தனது படகில் அந்த கிராமத்திற்கு வந்து அங்குள்ள மக்களிடம் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து ஒரு பொம்மையை வாங்கிவிட்டு மீண்டும் அந்த தீவிற்கே சென்றுவிடுவார்.
இதையே அவர் 50 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்துள்ளார். இதனால் அந்த தீவே பொம்மைகளால் நிறைந்துள்ளது.
பெரும்பாலான பொம்மைகளின் உடல் உறுப்புகள் காணாமல் போயிருந்ததாகவும், சில கைகால்களை இழந்ததாகவும், மற்றவைக்கு தலை கூட இல்லை என்றும் அவர் கூறினார்.
டான் 2001 இல் இறப்பதற்கு முன் 50 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். சிறுமி இறந்துவிட்டதாக அவர் நம்பிய அதே பகுதியில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust