யுஎஃப்ஓ என்பது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (unidentified flying object ). இவற்றை வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுக்கள் என்று சிலர் நம்புகின்றனர். இது குறித்து அமெரிக்க இராணுவம் தனிப்பிரிவு நியமித்து விசாரிக்கிறது.
தற்போது வேற்றுக்கிரகவாசிகள் குறித்து இராணுவத்திடம் இருக்கும் புதிய வீடியோக்கள் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் காட்டப்படுகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் குறித்து தற்போது அமெரிக்கப் பாராளுமன்றம் ஒரு பகிரங்க விசாரணையை நடத்தி வருகிறது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தன்னிடம் இருக்கும் புதிய யுஎஃப்ஓ வீடியோக்களை கடந்த செவ்வாயன்று அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இந்த விசாரணை நிமித்தம் போட்டு காண்பித்தது.
அமெரிக்க கடற்படை உளவுத் துறையின் துணை இயக்குநர் ஸ்காட் ப்ரோ இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி இராணுவ விமானிகள் தமது காக்பிட் எனப்படும் விமானிகளின் அறையிலிருந்து அடையாளம் தெரியாதப் பறக்கும் பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்துக் கண்காணிக்கவும், அது குறித்துப் புகாரளிக்கவும் முடியும் என்று அவர் கூறுகிறார். மேலும் யுஃஎப்ஓ க்களைப் புரிந்து கொள்ள அரசாங்கம் அனைத்து முயற்சிகளும் எடுக்கின்றன, அதில் ஒன்றுதான் விமானிகள் நேரடியாக யுஎஃப்ஓக்களை பதிவு செய்யும் முயற்சி என்று அவர் தெரிவித்தார்.
"எங்களிடம் இயற்பியல், ஒளியியல், உலோகவியல், வானிலையியல் உள்ளிட்ட பல அறிவியல் துறை வல்லுநர்கள் உள்ளனர்," என்று பிரே கூறினார். இவர்களை வைத்துக் கொண்டு இந்த யூஎஃப்ஓ நிகழ்வுகள் குறித்து ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்வதற்காக, அனைத்து துறைகள் மூலமும் நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க இராணுவத்திடம் தற்போது 400க்கும் மேற்பட்ட யுஎஃப்ஓக்கள் பற்றிய தகவல் அறிக்கைகள் உள்ளதாக பிரே கூறினார். தற்போது இப்படி யுஎஃப்ஓ குறித்து புகாரளிக்கும் தகவல்கள் உடனுக்குடன் ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் புதிய யூஎஃப்ஓ வீடியோக்களையும் காட்டினார்.
அதில் 2019 இல் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் "ஒளிரும் நிலையில் முக்கோணங்களாகத் தோற்றமளிக்கும் காட்சிகள்", உள்ளன.
இதே போன்றதொரு நிகழ்வு பிற்காலத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். “இந்த முக்கோணங்கள் அப்பகுதியில் உள்ள ஆளில்லா வான்வழி அமைப்புகளுடன் தொடர்புள்ளவை என்பதை இராணுவத்தால் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் ப்ரே கூறினார். முக்கோணத் தோற்றம் என்பது இரவு-பார்வை கண்ணாடிகள் வழியாக ஒளி கடந்து பின்னர் ஒரு எஸ்எல்ஆர் - SLR கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதன் விளைவாகத் தோன்றும் ஒன்று என ப்ரோ விரிவாக விளக்கமளித்தார். எனவே இது வேற்றுகிரகவாசிகளோடு தொடர்புடைய ஒன்று அல்ல.
இருப்பினும், மற்றொரு வீடியோவில், அவர் ஒரு விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே ஒரு உருண்டை போன்றதொரு பொருளைக் காட்டினார். அது என்ன என்பதற்கு இன்னும் விளக்கம் இல்லை என்றார் அவர்.
இப்படி சில புகார்கள் என்ன காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், யூஎஃப்ஓ குறித்த அறிக்கைகளுக்கான புதிய நடைமுறைகளை இராணுவம் உருவாக்கியுள்ளதால், கடந்த சில மாதங்களாக அதிகமான அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
கப்பற்படை மற்றும் விமானப்படைக் குழுக்கள் தற்போது யூஎஃப்ஓ குறித்துப் புகாரளிப்பதற்கான படிப்படியான நடைமுறைகளை உருவாக்கியிருக்கின்றன. மேலும் ஒரு விமானம் பறந்து முடிந்து தரையிறங்கிய பிறகு அதை ஓட்டிய விமானி தனது பறக்கும் அனுபவத்தைப் பதிவு செய்யும் போதும் இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று ப்ரோ, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளித்தார்.
இந்த புதிய நடைமுறைகளால் யுஎஃப்ஓ குறித்து நேரடியாகப் பதிவு செய்யும் தகவல்கள் அதிகரித்துள்ளன என்று அவர் கூறினார்.
"இப்போது எல்லாம் தெளிவாகி விட்டது. நீங்கள் ஏதாவது ஒன்றைப் பார்த்தால், அதை உடனுக்குடன் புகாரளிக்க வேண்டும். மற்றும் அந்த புகார் ஒரு செய்தியாக உடனுக்குடன் பதிவு செய்யப்படும். சமீபத்தில் எனக்கு 2,000க்கும் மேற்பட்ட விமான நேரங்களைக் (flight hours ) அனுபவமாகக் கொண்ட ஒரு மூத்த கடற்படை ஏவியேட்டரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் விமானம் தரையிறங்கிய பிறகு அவர் சந்தித்த ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசுவதற்காக விமான ஓடு பாதையிலிருந்து தனிப்பட்ட முறையில் என்னை அழைத்தார்.” என்று ப்ரோ கூறினார்.
இப்படியாக யூஎஃப்ஓ குறித்து விசாரணை அமெரிக்க பாரளுமன்றத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust