எமிலி அடோனா  ட்விட்டர்
உலகம்

அழகாய் இருக்க அலுப்பா இருக்கு; ‘அசிங்கமாக’ மாற டாட்டூ போட்டுகொள்ளும் இளம் பெண்!

இந்த அழகு தனக்கு வேண்டாம் என நினைத்த எமிலி, 'கலாச்சார ரீதியாக அழகை குலைக்கும்’ என நம்பப்படும் சில விஷயங்களை செய்ய முடிவு செய்தார். அதற்கேற்ப, மூக்குத்தி போட்டுகொள்வது, உடலில் பச்சைக்குத்திக்கொள்வது போன்ற மாற்றங்களை அவர் செய்துகொண்டுள்ளார்.

Keerthanaa R

அழகாய் இருக்க அலுத்துப் போனதால் ’அசிங்கமாய் மாற’, உடலில் மாற்றங்களை செய்து வருகிறார் எமிலி அடோனா என்ற பெண்.

அழகாய் இருந்ததால் தனக்கு மாடலிங் வேலை கிடைத்ததாக கூறிய எமிலி, அழகாய் இருந்தால் மட்டுமே தனக்கு மரியாதையும் கிடைப்பதாக கூறியுள்ளார்.

எப்போதாவது சாதாரண உடையில், மாஸ்க் அணிந்து சென்றால், தன்னை சுற்றியிருப்பவர்கள் வேறு விதமாக நடத்துவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

”அழகாய் இருப்பதனால் வரவேற்பு கிடைக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் தீமைகளும் அதிகமாகவே இருக்கிறது”

மேலும், அவர் இதுவரை எங்கு வேலைக்கு சென்றாலும் பிரச்னைகள், தொந்தரவுகள், பாலியல் ரீதியான சீண்டல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களுக்கு சென்றாலும் இது மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்வதாக எமிலி தெரிவித்திருக்கிறார்.

”நான் மாடல் என்பதால் கிடைக்கும் கவனம் எனக்கு பழகியிருக்கும் என்றோ, அல்லது இந்த கவனத்தை நான் வேண்டுமென்றே பெறுவதாகவும் கூட சிலர் விமர்சித்திருக்கின்றனர்.” என்கிறார் எமிலி

இதனால், தனது இந்த அழகை வேண்டாம் என நினைத்த எமிலி, ‘கலாச்சார ரீதியாக அழகை குலைக்கும்’ என நம்பப்படும் சில விஷயங்களை செய்ய முடிவு செய்தார். அதற்கேற்ப, மூக்குத்தி போட்டுகொள்வது, உடலில் பச்சைக்குத்திக்கொள்வது போன்ற மாற்றங்களை அவர் செய்துகொண்டுள்ளார்.

எமிலி தனது வருத்ததை தெரிவித்திருந்தாலும், அவரது இந்த பேச்சுக்கு எதிர்மறையான கருத்துகளையே நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

அழகாய் இருக்கும் பெண்களுக்கு மட்டும் தான் பாலியல் தொல்லைகள் இருக்கிறது என நீங்கள் நம்புவது தவறு எனவும், எல்லோருக்கும் இந்த பிரச்னை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒருவர், “முக்கியமாக, சமூகம் அழகு என்று வரையறுக்கும் விதிமுறைகளுக்கு கீழ் வராத பெண்கள் தான் இன்னும் அதிகமாக பொது இடங்களில் மற்றும் அலுவலகங்களில் விமர்சிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?