Man Without Money: பணம், தொழில்நுட்பம் இல்லாமல் வாழும் மனிதர் - உலகுக்கு சொல்வதென்ன? Twitter
உலகம்

The Moneyless Man: பணம், தொழில்நுட்பம் இல்லாமல் வாழும் மனிதர் - உலகுக்கு சொல்வதென்ன?

2007ம் ஆண்டு ஒரு இரவில் இவரது வாழ்க்கைத் திரும்பியது. படகு வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து தத்துவம் பேசிக்கொண்டிருந்தவருக்கு, பணம் தான் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது எனப் புரியவந்திருக்கிறது.

Antony Ajay R

நாம் இருப்பதை விட இன்னும் வசதியான வாழ்க்கை, இன்னும் அதிக பணம் என்பதை நோக்கியதாகவே நம் வாழ்வு இருந்துவருகிறது. ஆடம்பரத்துக்கான தேடலிலே பலரது வாழ்க்கையும் ஓடிவிடும் சூழலில் 2008ம் ஆண்டு பணமின்றி வாழ்ந்துவரும் ஒருவரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மார்க் பாயில் (Mark Boyle) என்ற நபர் பணமில்லா மனிதர் என்று அறியப்படுகிறார். இவர் ஒரு ஐரிஷ் எழுத்தாளர்.

2008 முதல் பணமில்லாமல் வாழ்ந்த அனுபவங்களையும் 2016 முதல் நவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழும் அனுபவங்களையும் எழுதுகிறார்.

இவரது எழுத்துக்களை இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டியன் பத்திரிகையில் வாசிக்க முடியும். 8 புத்தகங்களும் வெளியாகியிருக்கின்றன.

மார்க் 1979ம் ஆண்டு பிறந்த ஒரு 80'ஸ் கிட். அயர்லாந்தில் பிறந்த இவர், Galway-Mayo என்ற தொழில்நுட்ப கல்லூரியில் வணிகம் படித்தார்.

2002ம் ஆண்டு பிரிட்டன் வந்த இவர் ப்ரிஸ்டோலில் நன்றாக சம்பாதிக்கக் கூடிய வேலையில் இருந்துவந்தார். 5 ஆண்டுகள் வரை சராசரி மனிதனாக அந்த வேலையைப் பார்த்தார்.

2007ம் ஆண்டு ஒரு இரவில் இவரது வாழ்க்கைத் திரும்பியது. படகு வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து தத்துவம் பேசிக்கொண்டிருந்தவருக்கு, பணம் தான் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது எனப் புரியவந்திருக்கிறது.

அப்போது இனி பணம் சம்பாதிக்கவோ, செலவு செய்யவோ கூடாது என்று தனக்குத் தானே தீர்மானம் செய்துகொண்டார்.

தனது படகு வீட்டை விற்றுவிட்டு ஒரு பழைய கேரவனில் குடியேறினார். ஆரம்பத்தில் பல பிரச்னைகள் இருந்தன, ஆனால் அவர் டீ, காபி குடிப்பது உள்ளிட்ட பழக்கங்களைக் கூட விட்டு எளிமையாக வாழத் தொடங்கினார்.

இயற்கையாக தனக்கு கிடைப்பதை மட்டுமே பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார் மார்க். அன்று முதல் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதே இல்லை என்கிறார். அவருக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.

பணம் இல்லாமல் வாழும்போது மொபைல், லேப்டாப் அனைத்தையும் சார்ஜ் செய்ய சோலார் பேனலை வைத்திருந்தார்.

2016ம் ஆண்டு பணம் இல்லாமல் வாழ்வது மட்டுமில்லாமல் நவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழவும் முடிவு செய்து ஒரு மரவீட்டில் குடியேறினார்.

சாப்பாட்டுக்கு என்ன செய்தார் என்பது உங்களின் பிரதான கேள்வியாக இருக்கும். அவரே அவருக்குத் தேவையான அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்துகொண்டார்.

தனது கல்லூரியின் இறுதிக்காலத்தில் 'காந்தி' திரைப்படத்தைப் பார்த்துள்ளார் மார்க். இது அவரது வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கூறுகிறார்.

மார்க் பாய்லின் வாழ்க்கைமுறையை மிகவும் எளிமையானது என மக்கள் கூறுகின்றனர். ஆனால் அதனை அவர் மறுக்கிறார். ஆடம்பரமான வாழ்க்கையை விட மிகவும் மகிழ்ச்சியாக தான் வாழ்வதாக கூறிக்கொள்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?