<div class="paragraphs"><p>அஜித் குமார்</p></div>

அஜித் குமார்

 

Twitter

உலகம்

Morning News Tamil : அரசியலுக்கு வர நடிகர் அஜித்குமார் முடிவா? - முக்கிய செய்திகள்

Antony Ajay R

அரசியலுக்கு வர முடிவா? நடிகர் அஜித்குமார் விளக்கம்


அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராவதாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. ஜெயலலிதாவும் அஜித்குமாரும் ஒன்றாக இருப்பது போன்ற பழைய புகைப்படமும் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரசியலுக்கு வருவதாக வெளியான தகவலை அஜித்குமார் சார்பில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’நடிகர் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. எனவே ஊடகத்தினர் இதுபோன்ற தவறான தகவல்களை உக்குவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன் - விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.

இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.


இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார். தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:

உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்.அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

வெளியேறும்  இந்தியர்கள்

கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றம்

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் சிரிங்காலா கூறியது, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அடுத்த மூன்று நாட்களில் சுமார் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளனன . புடா பெஸ்ட் புகாரெஸ்ட் நகரங்களை தவிர சுலோவாகியா போலந்து நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுவர். கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இப்போது இல்லை, இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள், மீட்பு பொருட்கள் விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்க உள்ளது.மேலும் மற்றொரு விமானம் மூலம் உதவிப்பொருளும் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவ்வாறுவெளியுறவுத்துறை செயலர் தெரிவித்து உள்ளார்.

Vladimir Putin

'இரட்டை வேடம் போடும் அமெரிக்கா'

ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 49-வது அமர்வு நடைபெற்றது. அதில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் பேசியதாவது:-


“அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவை. யூகோஸ்லோவியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அப்பாவி மக்களை கொன்ற நாடுகள்.


அப்படிப்பட்ட நாடுகள் உக்ரைன் பிரச்சினையில் ரஷிய நடவடிக்கையை விமர்சிப்பதன் மூலம் இரட்டை வேடம் போடுகின்றன. இப்போது கூட ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளன.

ஆனால் ரஷியாவை பொறுத்தவரை, ரஷியர்கள் அல்லது உக்ரைன் மக்களின் உயிர், அமெரிக்கர் அல்லது ஐரோப்பியரின் உயிருக்கு சற்றும் குறைந்தது அல்ல.” இவ்வாறு அவர் பேசினார்.

ஜக்கி வாசுதேவ்

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா

கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆதி யோகி முன்னிலையில் நேற்று நடந்தது. விழாவில் 170 நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணையதளம் வாயிலாக பங்கேற்றனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்தியாவுக்கான கொலம்பியா நாட்டு தூதர் மரியானா பெசேகோ மோன்டஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் நடிகர் அருண் விஜய், நடிகை கங்கணா ரணாவத் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்றனர்.

விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் உள்ளன. இவை அனைத்தும் மனிதனுக்குள் இருக்கும் குற்றம் செய்யும் உணர்வால் நடக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் இவ்வளவு பாதிப்புகளை சந்திக்கிறோம். ஆகவே, உங்களுக்குள் இருக்கும் ஞான ஒளியை இந்த மகாசிவராத்திரி நாளில் ஏற்றி விழிப்புணர்வான வாழ்வு நோக்கி நகர வேண்டும். உங்கள் உயிர் சக்தியை தெம்பாக்கி வாழ்வை ஆனந்தமயமானதாக மாற்றி காட்டுங்கள். கொரோனா பெருந்தொற்றால் இழந்த உற்சாகத்தை மீண்டும் மீட்டெடுப்போம். இவ்வாறு ஜக்கி வாசுதேவ் பேசினார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?