சர்வதேச நீதிமன்றம்

 

Twitter

உலகம்

Morning News Tamil : சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்த ரஷ்யா - இன்றைய முக்கிய செய்திகள்

இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Antony Ajay R

உக்ரைன் போரை நிறுத்துமாறு ஐ.நா. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிராகரித்தது ரஷ்யா


உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரஷ்யா நிராகரித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்த உக்ரைனுக்கு, அம்முடிவு தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. குண்டுகள், ஏவுகணைகளை வீசி உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் இறந்துள்ளனர். சுமார் 30 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போரை நிறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தனதுதாக்குதலை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிடும்படி நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் சார்பில் முறையிடப்பட்டது. குடிமக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் உயிரைக் காத்துக் கொள்ள மக்கள் அகதிகளாக தப்பிச் செல்வதாகவும் விசாரணையின்போது உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தங்களது நாட்டின் தற்காப்புக்காகவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக ரஷ்யா தெரிவித்தது.

விசாரணை முடிந்த நிலையில், உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா..

தீர்ப்பை உறுதி செய்யும் ஜூரிகள் எனப்படும் 15 நீதிபதிகளில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி உட்பட 13 பேர் ரஷ்யாவுக்கு எதிராக போரை நிறுத்த வேண்டும் என்று வாக்களித்தனர். ரஷ்யா, சீனா தரப்பிலான நீதிபதிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

"என் தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்" - வைரலாகும் தனுஷ் ட்வீட்


தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'பயணி' ஆல்பம் பாடலை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அங்கித் திவாரியும் பாடியுள்ளனர்.

இதனை பகிர்ந்து திரைப்பிரபலங்கள் பலர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'பயணி' பாடலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், "என்னுடைய தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து பெறுப்போகும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழும் நிலையில் தோழி என்று தனுஷ் செய்த ட்வீட் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "Thank you Dhanush...Godspeed" என ரீட்விட் செய்திருக்கிறார்.

கெஜ்ரிவாலுடன் பக்வந்த் மான்

ஊழலை ஒழிக்க உதவி எண்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாபில் ஊழலுக்கு எதிரான உதவி எண், வரும் 23ல் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி தொடங்கியிருக்கிறது. சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான காட்கர் கலன் என்ற இடத்தில், பகவந்த் சிங் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்நிலையில் 16வது பஞ்சாப் சட்டசபை கூடியது. அப்போது, முதல்வர் பகவந்த் மான் உட்பட அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு, தற்காலிக சபாநாயகர் இந்தர்பிர் சிங் நிஜ்ஜார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, பகவந்த் மான் வெளியிட்டுள்ள 'வீடியோ' செய்தியில் கூறியிருப்பதாவது: டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததும், ஊழலை ஒழிப்பதற்கான உதவி எண் அறிமுகப் படுத்தப்பட்டது. அதன் பின் டில்லியில் ஊழல் ஒழிக்கப்பட்டது. அதுபோலவே, ஊழல் ஒழிப்புக்கான உதவி எண், வரும் 23ல் பஞ்சாபில் அறிமுப்படுத்தப்பட உள்ளது.

இது என் தனிப்பட்ட 'வாட்ஸ் ஆப்' எண். உங்களிடம் லஞ்சம் கேட்பவர்களை படம் பிடித்து அல்லது குரல் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். உண்மை தன்மை ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை

இலங்கைக்கு உதவ இந்தியா முடிவு

கொரோனா கால நெருக்கடியால் இலங்கை கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்தது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் வெகுவாக குறைந்தது. பிற நாட்டு கரன்சிக்கு இணையான இலங்கை கரன்சியின் மதிப்பு பெருமளவு சரிந்துள்ளது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. மின் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை நிதி அமைச்சர் பாசில் ராஜபக்ச, 2 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி குறித்து மோடியிடம் பாசில் ராஜபக்ச விளக்கினார். மேலும், இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு இலங்கை அரசு சார்பில் நன்றி தெரிவித்தார். அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக் கடியை சமாளிக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ரூ.7,500 கோடி (100 கோடி அமெரிக்க டாலர்) கடன் உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. உணவு, மருந்து மற்றும் சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இந்த கடன் உதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்ணாமலை

இதுவரை 20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன் - மதுரையில் அண்ணாமலை பேச்சு

மதுரை சௌராஷ்டிரா மகளிர் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அந்நிகழ்ச்சியில் பேசிய விஷயங்கள் பல வைரல் ஆகி வருகிறது. "அதிக நேரம் பேசினால் நானே தூங்கிவிடுவேன்” என்று ஆரம்பித்த அண்ணாமலை, "மகாபாரதத்தில் ஒவ்வொருவரின் வாழ்கையும் நேரில் பார்ப்பதுபோல் இருக்கும். பிரச்னையும் அதை தீர்க்க முடிவெடுப்பது போன்றவை மகாபாரதத்தில் உள்ளது. மகாபாரதத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும்.

ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விட ஒரு புத்தகத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும். மொழி பெயர்ப்பு புத்தகங்களை படிக்க வேண்டும்.

வாட்ஸ் ஆப்பில் கிசு கிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டுமென்றால் அதிகமாக புத்தகங்கள் வாசித்து வரலாறு, அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதுவரை 20,000 புத்தகங்களை படித்திருக்குறேன். அதில் சில புத்தகங்களை திரும்பத்திரும்ப படித்திருக்கிறேன். அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் 2 புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் முதல் உள்ளூர் வரை அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும்.


சென்னை புத்தக திருவிழாவில் இளைஞர்களை பார்க்க முடியவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. சாதனை பெண்கள் எல்லாரும் ரிஸ்க் எடுத்தவர்கள்தான். கிரண் பேடிக்கு காவல்துறையின் உயர் பதவி முதலில் வழங்கப்பட்டது.

காவல்துறையில் ஆண்கள் எடுக்கும் அனைத்து ரிஸ்கையும் கிரண் பேடி எடுத்தார். அதனால்தான் அவர் நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகரியாக கொண்டாடப்படுகிறார். வாழ்க்கையில் முன்னேற இளைஞர்கள் ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும்" எனப் பேசினார்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?