சொந்த மக்களால் வெறுக்கப்பட்ட 5 உலக தலைவர்கள் யார் யார்? உலக வரலாற்றின் கொடூர பக்கங்கள்! Twitter
உலகம்

சொந்த மக்களால் வெறுக்கப்பட்ட 5 உலக தலைவர்கள் யார் யார்? உலக வரலாற்றின் கொடூர பக்கங்கள்!

Antony Ajay R

உலக வரலாற்றில் மனிதர்கள் பல குழுக்களாக, நாடுகளாக வாழ்ந்திருக்கின்றனர். இந்த ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு தலைவர் இருப்பார்.

சில தலைவர்கள், அரசர்கள் உண்மையாகவே தங்களது மக்களின் நலனில் நம்பிக்கைக்கொண்டிருந்தனர். ஆனால் எல்லாருமே இப்படி இருந்தார்காளா என்றால் "இல்லை" என்பது தான் பதில்.

சில தலைவர்களுக்கு மக்களை விட அவர்களின் நலன், நம்பிக்கைகள் தான் முக்கியமாக இருந்தன. மனித உயிரை விட மதத்தையும், பந்த பாசத்தை விட பகையையும் முக்கியமான நினைத்த தலைவர்கள் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டனர்.

அப்படி வரலாற்றில் கறுப்பு முத்திரை குத்தப்பட்ட 5 தலைவர்களைத் தான் பார்க்கப்போகிறோம்.

சதாம் உசேன்

சதாம் உசேன் ஈராக்கை ஆட்சி செய்த சர்வாதிகாரியாவார். இவரது ஆட்சியில் அங்கு லட்சக்கணகான மக்கள் இறப்பதற்கு காரணமாக இருந்தார்.

ஈரான் மற்றும் குவைத்து எதிராக போர் தொடுத்தார். இவரது கொடூரமான சித்திரவதைகள் மற்றும் மரணதண்டனைகளுக்காக சொந்த மக்களாலேயே வெறுக்கப்பட்டார்.

சதாம் உசேன்

பில் போட்

கெமர் ரூஜ் ஆட்சியின் போது கம்போடியாவின் தலைவராக இருந்தவர். இவரது ஆட்சியில் கம்போடியாவில் மிகப் பெரிய இனப் படுகொலையை நிகழ்த்தினார். 1975 முதல் 1979ம் ஆண்டுக்குள் இவரால் 15 முதல் 20 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

உலக வரலாற்றில் மிகவும் கொடூரமான நிகழ்வுகளில் கம்போடிய இனப் படுகொலையும் ஒன்று. இவர் மக்களை கட்டாய வேலை முகாம்களில் தள்ளி சித்திரவதை செய்தார்.

மக்கள் செய்த சிறிய தவறுகளுக்கு கூட மரண தண்டனை வழங்கப்பட்டது. உதாரணமாக முகத்தில் கண்ணாடி அணிவது, பொருட்களை சொந்தமாக வைத்திருப்பது குற்றமாக கருதப்பட்டது.

மக்களை பசியில் வாட்டி, மருந்துகள் கொடுக்காமல் கொலை செய்தார். குழந்தைகளும் விதிவிலக்கு இல்லை. இனப்படுகொலைக் காலத்தில் பெண்களும் பெண்குழந்தைகளும் அனுபவித்த பாலியல் கொடூரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

மாவோ சே துங்

சீன ஆட்சியாளரான மாவோ சே துங் பெரும்பாலும் நம்மால் அறியப்பட்டவர். 1950 மற்றும் 60களில் சீனாவை ஆட்சி செய்த இவர் சீன சமூகத்தை விவசாயமைய பொருளாதாரத்தில் இருந்து மாற்றி கம்யூனிச சமூகமாக உருவாக்க செய்த முயற்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கு வழிவகுத்தது.

Mao

சீனாவில் இவர் செய்த கலாச்சார புரட்சி, நூறு பூக்கள் பிரச்சாரம் முதலிய செயல்பாடுகள் பெரிய அளவில் மக்கள் மரணத்துக்கு வழிவகுத்தது. இவரது முறையாக திட்டமிடப்படாத கொள்கைகள் மற்றும் மோசமான செயல்பாடுகளால் உலகவரலாற்றில் மிகப் பெரிய பஞ்சத்தை சீனா சந்திக்க நேர்ந்தது.

இவரது தவறுகளைச் சுட்டிக்காட்டும், இவருக்கு எதிராக எழும் குரல்களை முற்றிலுமாக அடக்கினார் மாவோ. அரசியல் கைதிகளை மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜோசப் ஸ்டாலின்

ஹிட்லரை இரண்டாம் உலகப்போரில் வென்ற ஜோசப் ஸ்டாலின் மறுபக்கம் தனது சொந்த மக்கள் பல லட்சம் பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளார்.

அரசியலில் தனக்கு எதிராக செயல்படுவார்களா என அவர் சந்தேகிக்கும் எவரையும் கைது செய்தார். சிறையில் சித்தரவதை செய்தார். மரணதண்டனை வழங்கினார். குறிப்பாக 1936 முதல் 1938 வரை அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த பலரை அவர் தண்டித்தார்.

உக்ரைன் மக்களுக்கு எதிராக 1932-33 ஆண்டுகளில் பஞ்சத்தை உருவாக்கினார். உக்ரைன் மக்களின் செல்வத்தை குறைக்கும் நோக்கில் உணவுப்பொருட்களைக் கைப்பற்றினார். இதனால் லட்சக்கணக்கில் மக்கள் இறந்தனர்.

ஜோசப் ஸ்டாலின்

ஸ்டாலின் அவரது ஆட்சிக்காலத்தில் சென்சென்கள், இங்குஷ்கள், கிரிமியன் டாடர்ஸ் போன்ற இனக்குழுவைச் சேர்ந்த மக்களை மொத்தமாக நாடுகடத்தினார். சைபீரியாவிலும் மத்திய ஆசியாவிலும் விடப்பட்ட இந்த மக்களில் பலர் விரைவாக இறந்துபோயினர்.

குலாக்ஸ் என்ற பெயரில் கட்டாய வேலை முகாம்களை உருவாக்கினார். அங்கு மிகவும் கொடுமையாக மக்கள் வேலை வாங்கப்பட்டனர். குலாக்ஸின் விளைவாகவும் பலர் மாண்டனர்.

ஹிட்லர் (1889-1945)

இந்த பட்டியலில் இவரில் பெயர் இடம் பெறவில்லை என்றால் தான் அதிசயம். இரண்டாம் உலகப்போரில் பல லட்சம் மக்கள் மரணத்துக்கு இவர் காரணமாக இருந்தார்.

யூதர்களுக்கு எதிரான இவரது நடவடிக்கைகள் மிகக் கொடூரமானவை. இன்றளவும் இவரது கொடூரத்தன்மையை தெரிந்துகொள்ளும் போது நமக்கும் அவர் மீது வெறுப்பு வரத்தான் செய்யும்.

உலகவரலாற்றில் மிகவும் கொடூரமான மனிதராக இவர் பார்க்கப்படுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?