கூகுள்: புதிய நிறுவனம் தொடங்கும் லே ஆஃப் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர்கள் Twitter
உலகம்

கூகுள்: லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர்களின் புதிய நிறுவனம் - எப்போது தொடங்குகிறது?

தற்போது தன் புதிய நிறுவனம் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு வணிக வடிவமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி கருவிகளை வழங்க திட்டமிட்டிருக்கிறார்

Keerthanaa R

பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் முன்னாள் ஊழியர்கள் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் மைக்ரோசாப்ட், மெட்டா போன்ற நிறுவனங்கள் பெருவாரியாக தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இவற்றுடன் கூகுளும் இணைந்துகொண்டது.

சுமார் 12,000 ஊழியர்களை லே ஆஃப் செய்தது கூகுள்.

கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சை இந்த பணிநீக்கத்திற்கு தானே பொறுப்பேற்பதாக கூறியிருந்தார்.

வேலை இழந்த கூகுள் ஊழியர்களின் சோகக்கதைகள் பலவும் இணையத்தில் பேசப்பட்டன.

இந்நிலையில், வேலையிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஊழியர்கள் இணைந்து தற்போது புதியதொரு நிறுவனத்தை உருவாக்கும் முனைப்பில் உள்ளனர்.

கூகுளில் பணியாற்றிய முன்னாள் சீனியர் மேனேஜர் ஒருவர் புதிய கம்பனியை தொடங்கவிருக்கிறார்.

அவருக்கு உதவ பணிநீக்கம் செய்யப்பட்ட இன்னும் சில ஊழியர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார்.

google

ஹென்ரி கர்க் என்ற அந்த நபர், மாஸ் லே ஆஃப் நடந்த பிறகு, வாட்ஸ் அப் குரூப் சாட்டில் தனது சக பணியாளர்களுடன் இந்த ஐடியா குறித்து பகிர்ந்தார்.

ஹென்ரி கூகுள் நிறுவனத்தின் செயலிகள் பராமரிப்புக் குழுவில் இருந்தவர்.

பயனர்களுக்கு கூகுளின் ஆப்கள் பயன்படுத்தும் போது சீரான தடையற்ற அனுபவம் இருப்பதை உறுதி செய்வது இவரது பணி.

தற்போது தன் புதிய நிறுவனம் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு வணிக வடிவமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி கருவிகளை வழங்க திட்டமிட்டிருக்கிறார்

”நாங்கள் அனைவரும் பல வருடங்களாக சேர்ந்து பணியாற்றியிருப்பதால், அவரவர் திறன் பற்றி நன்கு அறிவோம்.

அதனால், இந்நிறுவனம் நிச்சயம் வெற்றியடையும்” என இன்சைடர் செய்தி தளத்திடம் தெரிவிக்கிறார் ஹென்ரி.

எனினும், புதிய நிறுவனத்தை தொடங்குவதில் சிக்கல்கள் இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.

தன்னுடன் இந்த திட்டத்தில் கைக்கோர்ப்பவர்கள் எல்லோருக்கும் சமமான நிதி கையிருப்பு இருக்கிறதா என்ற அச்சம் அவருக்கு இருப்பதாக ஹென்ரி கூறினார்.

தவிர, லே ஆஃப் செய்யப்பட்ட ஹென்ரிக்கும் நேரம் குறைவாக இருக்கிறது. அவரது நோட்டீஸ் பீரியட் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதையும் அவர் விரைவாக முடிவு செய்யவேண்டும்.

கூகுள் கடந்த வாரம் சுமார் 400 இந்தியர்களையும் லே ஆஃப் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?