எலான் மஸ்க்குடன் இணைத்து வைத்து பேசப்படும் நிகோல் சனஹன் - யார் இவர்? Newssense
உலகம்

Elon Musk : எலான் மஸ்க்குடன் இணைத்து வைத்து பேசப்படும் நிகோல் சனஹன் - யார் இவர்?

எலான் மஸ்க் பலமுறை திருமணம் செய்து கொண்டது, தான் விவாகரத்து செய்த பெண்ணையே திரும்ப திருமணம் செய்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது நிகோல் சனஹன் சர்ச்சையும் எழுந்துள்ளது.

Gautham

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர் மற்றும் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்குக்கும், உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் நிறுவனர் செர்ஜி பிரின்னின் மனைவி நிகோல் சனஹனுக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே எலான் மஸ்க் பலமுறை திருமணம் செய்து கொண்டது, தான் விவாகரத்து செய்த பெண்ணையே திரும்ப திருமணம் செய்து கொண்டது, அவரது மகன் சேவியர் அலெக்சாண்டர் மாற்றுப் பாலினத்தவர் என்பதால் தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக் கொண்டதோடு, எலான் மஸ்கோடு தன்னைத் தொடர்புப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது எனப் பல சர்ச்சைகள் அவரைச் சூழ்ந்துள்ளன.

Elon Musk

எலான் மஸ்க் மட்டுமின்றி அவரது தந்தை முதுமையில் தன் வளர்ப்பு மகளோடு வாழ்ந்து இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தது வரை மஸ்க் குடும்ப சர்ச்சைகள் நீள்கின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது நிகோல் சனஹன் சர்ச்சையும் எழுந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் நிகோல் சனஹன் மற்றும் செர்ஜி பிரின் இருவருக்கு மிடையில் தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து கொள்ளவிருப்பதாக அத்தம்பதியினர் அறிவித்தனர்.

சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில், நிகோல் சனஹனுக்கு எலான் மஸ்கோடு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார் எலான் மஸ்க்.

"இது முற்றிலும் தவறான செய்தி. நானும் செர்ஜி பிரின்னும் நண்பர்கள் நேற்று இரவு கூட ஒன்றாக ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில், நான் நிகோலை மக்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் இருமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். மற்றபடி காதல் எல்லாம் எதுவும் இல்லை" என டிவிட்டரில் ஒரு பதிவுக்கு விடைகொடுக்கும் விதத்தில் பதிவிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.

"வரும் மாதங்களில் என்மீது அரசியல் ரீதியிலான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கலாம்" என எலான் மஸ்க் கடந்த 2022 மே 18ஆம் தேதி டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். அவரது ஆதரவாளர்கள் அப்பதிவை மேற்கோள்காட்டி நிகோல் சனஹன் விவகாரத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

யார் இந்த நிகோல் சனஹன்?

புகெட் சவுண்ட் பல்கலைக்கழகத்தில் ஏஷியன் ஸ்டடீஸ், பொருளாதாரம் மண்டரின் சைனீஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின் ஜெனீவா கிராஜுவேட் இன்ஸ்டிட்டியூட்டில் உலக வர்த்தக அமைப்பு ஆராய்ச்சியில் பட்டம் பெற்றார்.

2013ஆம் ஆண்டு நேஷ்னல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் குளோபல் ஐபி டிரேட் மற்றும் சீன சட்டங்களைப் படித்தார். அதன் பின் சான்டா கிளாரா சட்டப் பல்கலைக்கழகத்தில் ஹை டெக்னாலஜி லா மற்றும் அறிவுசார் சொத்து தொடர்பாகவும் படித்திருப்பதாக அவரது LinkedIn சமூக வலைத்தள பக்கம் சொல்கிறது.

பயா எகோ பவுண்டேஷன் தலைவராக நிகோல்

எயான் சட்ட நிறுமம், லாங்கன் சட்ட நிறுமம், டவுன்செண்ட் அண்ட் டவுன்செண்ட் அண்ட் க்ரூ எல் எல் பி நிறுவனம், ருடன் & டக்கர் எல் எல் பி நிறுவனம் எனப் பல சட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அதோடு காப்புரிமை (Patent) நிபுணராகவும் பணியாற்றியவர், கடந்த 2013ஆம் ஆண்டு க்ளியர் ஆக்சிஸ் ஐபி என்கிற நிறுவனத்தைத் தொடங்கி அதன் முதன்மைச் செயல் அதிகாரியாக பதவியேற்று வழிநடத்தினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு காப்புரிமைகளை நிர்வகிப்பது தான் க்ளியர் ஆக்சிஸ் நிறுவனத்தின் பணி. இந்நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது பயா எகோ பவுண்டேஷன் (Bia Echo Foundation) என்கிற சேவை அமைப்பின் தலைவராக இருக்கிறார் நிகோல் சனஹன்.

நிகோல் குடும்பம்

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறிய சீன பெண்ணை தாயாகக் கொண்டவர் நிகோல் சனஹன். இவர் அமெரிக்காவிலுள்ள ஆக்லேண்டில் வளர்ந்தார்.

செர்ஜி பிரின்னைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் நிதித் துறையில் வேலைபார்த்து வந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகுதான் சனஹன் செர்ஜியை மணந்து கொண்டார். பிரின் மற்றும் சனஹன் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் செர்ஜி பிரின் மற்றும் நிகோல் சனஹனுக்கு இடையில் பிரச்சனை சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது, விவாகரத்துக்கு வரை வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?