டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் 50 வயதாகும் பில்லியனர். உலகின் மிகப் பெரிய பணக்காரரான அவர் பல்வேறு நிறுவனங்களுடன் டெஸ்லா கார் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்களில் விமானங்களில் இருப்பது போன்ற ஆட்டோ பைலட் வசதியும் இருக்கும்.
எலான் மஸ்க் அமெரிக்காவின் டெக்ஸாசில் 1.1 பில்லியன் மதிப்பில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் டெஸ்லா தொழிற்சாலை திறப்பதற்காகச் சென்றிருந்தார். அங்குப் பேசிய அவர், “ஆட்கள் இல்லாமல் தன்னிச்சையாக ஓடக்கூடிய ரோபோ டாக்சி விரைவில் அறிமுகமாகும் என்று அறிவித்தார்.”
2019ம் ஆண்டு முதலே தன்னிச்சையாகச் செயல்படும் கார்களை உருவாக்க வேண்டும் என்ற கனவில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் மஸ்க். ஆனால் அதனை 100 விழுக்காடு செயல்படுத்துவது இன்றுவரை அவரால் முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
டெஸ்லாவின் ஆட்டோ பைலட் கார்கள் அதிக வசதியுடன் 12000 டாலர் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் அமெரிக்கத் தெருக்களில் சிறப்பாகச் செயல்படுவதற்கான தொழில்நுட்பம் 2020ம் ஆண்டின் இறுதியில் பொருத்தப்பட்டது. எனினும் அதனைத் தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியவில்லை. அதை இயக்க ஓட்டுநரின் மேற்பார்வையும் தேவைப்பட்டது.
டெஸ்லா தொழிற்சாலைகளில் கார்களின் பேட்டரி வரை அனைத்து பாகங்களும் தயாரிக்கப்படுகிறது. இதனால் தயாரிப்பு எளிதாவதாக மஸ்க் கூறுகிறார். தற்போது சீனாவில் கோவிட் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் ஷாங்காயில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் டிவிட்டர் நிறுவனப் பங்குகளில் 9% வாங்கியதன் மூலம் சமூக வலைத்தள சந்தையிலும் கால் பதித்துள்ளார் மஸ்க். ட்விட்டரின் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் குழுவிலும் இணைத்திருக்கிறார்.
எலான் மஸ்கின் கனவு நிறைவேறினால் விரைவில் நாம் மொபைலை தட்டியது தானாக முன் வந்து நிற்கும் ரோபோடிக் கார்கள் தெருக்களில் உலாவுவதைக் காணலாம்.