பிலிப்பைன்ஸ் : 12 மரணங்களுக்கு காரணமாக இருந்த பாடல் - My Way Killings பற்றி தெரியுமா? Song / representation
உலகம்

பிலிப்பைன்ஸ் : 12 மரணங்களுக்கு காரணமாக இருந்த பாடல் - My Way Killings பற்றி தெரியுமா?

Antony Ajay R

ஒரு பாடலை பாடலாக அல்லாமல் வெறும் இசையாக ஒலிக்கவிட்டு, அதனுடன் இணைந்துப் பாடுவது கரோக்கி ஆகும். இது மிகவும் மகிழ்ச்சியான பொழுதுபோக்காகும்.

இரவு நேர விருந்துகளில் கரோக்கி ஒலிக்கவிட்டுப் பாடுவது வழக்கம். சவுண்ட் ப்ரூஃப் செய்யப்பட்ட அறையில் இதயத்திலிருந்து சத்தமாக பாடும்போது நம் மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் சிலருக்கு இப்படி பாடுவது வாழ்க்கையை பறிக்கும் செயலாக மாறியிருக்கிறது.

ஃபிராங்க் சினாட்ரா ஒரு புகழ்பெற்ற அமெரிக்க ஜாஸ் கலைஞர். இவரது மை வே என்ற பாடல் தான் 12 பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த பாடலுக்கு Song of Death என்ற பட்டப்பெயரும் உள்ளது.

ஃபிராங்க் சினாட்ரா

கடந்த சில தசாப்தங்களாக பிலிப்பைன்ஸில் நடந்த இந்த கொலைகளுக்கும் சினாட்ராவின் பாடலுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுவதுடன், இந்த சம்பவங்களை மை வே கில்லிங்ஸ் என்றும் அழைக்கின்றனர்.

உதாரணமாக 2007ல் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

சான் மாடோ என்ற இடத்தில் ரோமி பலிகுலா என்ற 29 வயது இளைஞர் ரோபிலிடோ ஓர்டேகா என்ற 43 வயது காவலாளியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அப்போது ரோமி மை வே பாடலின் கரோக்கியை ஒலிக்கவிட்டு பாடிக்கொண்டிருந்தார். இடைமறித்த காவலாளி அதனை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் ரோமி தொடர்ந்து சத்தமாக பாடிக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் காவலாளி தனது துப்பாக்கியை எடுத்து ரோமியின் நெஞ்சில் சுட்டார்.

இது மாதிரி மோசமான சம்பவங்கள் அதிகரித்தன. சண்டைகளைத் தவிர்ப்பதற்காக பல பார்கள் தங்கள் கரோக்கியில் இருந்து மை வே பாடலை நீக்கின.

இந்த சம்பவத்துக்கு பலவிதமான காரணங்களை நியூ யார்க் டைம்ஸ் பரிந்துரைக்கிறது. இந்த பாடலை மோசமாக பாடுவது பிலிப்பைன்ஸில் அவமரியாதையாக கருதப்படுவதால் கேட்பவர்கள் எரிச்சலைடைவதாக கருதப்படுவதாக கூறுகின்றனர்.

அல்லது இந்த பாடலில் எதிர்மறை செயல்களைத் தூண்டகூடிய செய்திகள் மறைந்திருக்கலாமென்கின்றனர். ஆனாலும் பாடலுக்கு கொலைகளுக்கும் இடையிலானத் தொடர்பு அமானுஷ்யமானதாகவே உள்ளது.

சிலருக்கு இந்தப் பாடலின் கருத்தின் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. ஒரு ஆண் ஆணைப் போல இருக்க வேண்டும். ஆணின் வழியில் காரியங்களை செய்ய வேண்டும் எனக் கூறும் அந்தப் பாடலைக் கேட்கும்போது அதிகரிக்கும் ஆண் பாலுணர்ச்சி வன்முறையைத் தூண்டுவதாகக் கூறுகின்றனர்.

கடைசியாக 2018ம் ஆண்டும் இதேப் போல ஒரு முதியவர் மை வே பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் போது மற்றொருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மைவ் வே கில்லிங்க்ஸ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?