Mysterious holy places full of mausoleums! Twitter
உலகம்

ஹரித்துவார் முதல் ஹெக்ரா வரை - சமாதிகளால் நிறைந்த மர்மமான புனித இடங்கள்!

இந்தியா என எடுத்துக்கொண்டால் கங்கை, ஹரித்துவார், கேதார்நாத் போன்றவை புனித இடங்களாக கருதப்படுகிறது. இது போல உலகைச் சுற்றி இருக்கும் சில மர்மமான இடங்களும், அந்த இடத்திற்கான புனிதத் தன்மையையும் குறித்து பார்ப்போம்.

NewsSense Editorial Team

என்னதான் இந்த உலகம் மாடர்ன் கலாச்சாரத்துக்கு மாறி இருந்தாலும் மக்கள் தங்களது வழிபாடுகளை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. தங்களது சொந்த நாட்டில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயர்ந்திருந்தாலும் தங்களுடைய கலாச்சாரத்தை இன்னும் முறையாகப் பின்பற்றும் நபர்களை நம்மால் பார்க்க முடிகிறது.

மக்களின் இந்த வழிபாடுகள் மற்றும் கலாச்சாரத்திற்கு சிறந்த சான்றாக திகழ்வது அவர்கள் புனிதமாக கருதும் சில இடங்கள் தான்.

இந்தியா என எடுத்துக்கொண்டால் கங்கை, ஹரித்துவார், கேதார்நாத் போன்றவை புனித இடங்களாக கருதப்படுகிறது. இது போல உலகைச் சுற்றி இருக்கும் சில மர்மமான இடங்களும், அந்த இடத்திற்கான புனிதத் தன்மையையும் குறித்து பார்ப்போம்.

ஹெக்ரா, சவுதி அரேபியா

சவூதி அரேபியாவில் உள்ள ஹெக்ரா பகுதி தற்போதைய ஜோர்தானுக்கு வடக்கே அமைந்துள்ளது. இந்த பகுதி சவூதி அரேபியாவின் கல்நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

கிமு 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லறைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம்.

குறிப்பாக, அரசர்கள், அரசியர்கள், தேசத்தில் பிரபலமானவர்களின் உடல் இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதால் அது புனிதமாக கருதப்படுகிறது. தவிர, இந்த இடம் சர்வதேச யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் போற்றப்படுகிறது.

திமிங்கல எலும்பு பகுதி

சைபீரியாவில் உள்ள பெரிங்கடல் பகுதியில் அமைந்துள்ளது யிட்டிகிரான் தீவு. சுமார் 550 மீட்டர் வரை நீண்டு செல்லும் இந்தத் தீவின் கடற்கரையில் திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடுகள் 2000 ஆண்டுகள் பழமையானதாகவும், அவை பேலியோ-எஸ்கிமோ இனத்தைச் சேர்ந்த மக்களால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது, எலும்புகளால் நிறைந்த இந்தப் பகுதியில், முன் காலத்தில் புனிதமான கூட்டங்கள் நடைபெற்றதாக தொல்லியல் கோட்பாடு கூறுகிறது. இந்த பகுதி தற்போது முற்றிலுமாக அழிந்து விட்ட நிலையில் வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே மீதம் இருக்கிறது.

அனசாசி கை பதிவுகள்

அமெரிக்காவில் உள்ள ”அனசாசி கை பதிவுகள்” நியூ மெக்ஸிகோவின் உட்டா, அரிசோனா மற்றும் கொலராடோ பகுதிகளில் காணப்படுகிறது.

சுமார் 4000 ஆண்டுகள் பழமையான இந்த இடத்தில் பண்டைய காலத்தைச் சேர்ந்த பாறைகள், மனிதர்களின் உருவம், விலங்குகள், கை பதிவுகள், ஆயுதங்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் தங்களது கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்கும் புனித இடமாக இதை கருதுகின்றனர்.

மான் கற்கள் பகுதி

மங்கோலியா பகுதியில் உள்ள பண்டையகால மான் கற்கள் பகுதி சமாதிகளால் நிறைந்து இருக்கிறது.

பாறைகளால் நிறைந்து இருக்கும் இந்த பகுதி வீரர்களின் சமாதி, வாள்கள், நகைகள் ஆகியவற்றின் குவியலாக பார்க்கப்படுகிறது. இந்த கற்கள் அனைத்தும் கிமு 13 முதல் 9 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அங்கோர் வாட்

கம்போடியா பகுதியைச் சேர்ந்த அங்கோர் வாட் கோவில் உலகின் பெரிய ஆன்மீக சின்னமாக கருதப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் கட்டப்பட்ட இந்த அங்கோர் வாட் கோயில் 400 சதுர கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டது. ஆரம்பத்தில் இந்துக்களின் கோவிலாக கட்டப்பட்ட அங்கோர் வாட் காலப்போக்கில் புத்த கோவிலாக மாறியது.

சுமார் 70 கோவில்கள் அமைந்துள்ள இந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இந்த புத்த ஸ்தலத்தில் பெண் துறவிகள், கம்போடியார்கள் என நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் வருகை தருவது வழக்கம். சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழியாக பார்க்கப்படும் இந்த இடம் கொஞ்சம் மர்மங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?