Solomon Sea Twitter
உலகம்

கடலுக்கு அடியில் வெடிக்கும் எரிமலை; அதிலும் உயிர் வாழும் சுறாக்கள் - என்ன நடக்கிறது?

எரிமலை வெடித்த பகுதியில் வெளிப்பட்ட அதிக வெப்பமான நீரில் அமில துகள்கள், எரிமலை பாறைத் துண்டுகள் மற்றும் கந்தகம் ஆகியவை கலந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

NewsSense Editorial Team

சாலமன் தீவுகளில் உள்ள கவாச்சி எரிமலை பசிபிக் பெருங்கடலில் இருக்கிற பெரிய எரிமலைகளில் ஒன்று. அது மட்டுமல்லாமல் பசிபிக் கடல் பகுதி பெரும்பாலும் சுறா மீன்கள் வாழும் பகுதி என்பது மக்கள் அறிந்தது தான். 2015 ஆம் ஆண்டு ஒரு பயணத்தில் பசிபிக் பள்ளத்தில் வாழும் இரண்டு வகையான சுறாக்களை நாசா கண்டுபிடித்தது. பிறகு அந்த எரிமலைக்கு “ஷார்க்கானோ” எனப் பெயரிட்டது.

தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) கடலுக்கு அடியில் எரிமலை வெடிக்கும் செயற்கைக்கோள் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மே 14 அன்று வாங்குனு தீவிலிருந்து தெற்கே 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவாச்சி எரிமலை இருக்குமிடத்தின் மேலே நிறமாற்றம் செய்யப்பட்ட நீர் வெளியேற்றப்படுவதைப் படங்கள் காட்டுகின்றன. லேண்ட்சாட் 9 செயற்கைக்கோளில் உள்ள ஆப்பரேஷனல் லேண்ட் இமேஜர் 2 மூலம் அந்த படங்கள் எடுக்கப்பட்டன.

நாசாவின் புவி கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, கவாச்சி தட்டு டெக்டோனிக்ஸ் மூலம் உருவானது என்றும், அது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெடிக்கத் தொடங்கியது என்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே 2022 இல் கிடைக்கப்பெற்ற புதிய செயற்கைக்கோள் தரவுகளின் மூலம், இந்த எரிமலை வெடிப்பு பல நாட்களாக நடந்து வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகான ஆராய்ச்சியில், அங்கு வெளிப்பட்ட அதிக வெப்பமான நீரில் அமில துகள்கள், எரிமலை பாறைத் துண்டுகள் மற்றும் கந்தகம் ஆகியவை கலந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

இருப்பினும், அங்கு வாழும் சுறாக்களுக்கு இது ஒரு பிரச்சனையல்ல. ஏனெனில் பெரிய கடல் விலங்குகள் சூடான மற்றும் அமில நீரைத் தாங்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, அன்கே வாழும் பல மீன் இனங்களில் ஒரு வகை சுறாவும் இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. அந்த மாதிரியான பகுதிகளில் சூடான மற்றும் அமில நீரில் வாழ சுறாக்கள் பழகியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஷார்க்கானோ எரிமலை பற்றிப் பார்த்தோமானால், 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கவாச்சியில் பெரிய எரிமலை வெடிப்புகள் காணப்பட்டதாக நாசா கூறியது. ஆனால் விண்வெளி நிறுவனம் அது கிட்டத்தட்டத் தொடர்ச்சியாக வெடிக்கிறது என்றும், அருகிலுள்ள மக்கள் வசிக்கும் தீவுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி கடல் மேற்பரப்பில் தெரியும் நீராவி மற்றும் சாம்பல் பற்றிப் புகாரளிப்பதாகவும் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?