Nataliya Kuznetsova ட்விட்டர்
உலகம்

Nataliya Kuznetsova: ஆண்களே பார்த்து பொறாமைப்படும் உலகின் மிக வலுவான பெண்மணி - யார் இவர்?

ஆஜானுபாகுவான தோற்றம், வலிமையான கை கால்களுடன், மிரட்டலாக போஸ் கொடுக்கிறார் நடாலியா குஸ்னெட்சோவா. இவர் யார்? ஆண்களே பார்த்து பொறாமைக்கொள்ளும் இவர், உலகின் மிக வலுவான பெண்மணியாக எப்படி ஆனார்?

Keerthanaa R

உடற்பயிற்சி, பாடி பில்டிங் என்பது தற்காலத்தில் பெண்களும் மும்முரமாக எடுத்துக்கொள்ளும் ஒரு முயற்சி. ஒரு சிலர் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வார்கள். ஒரு சிலர் இதையே பேஷனாக எடுத்துக்கொண்டு பாடி பிலிடிங் செய்வார்கள்.

அப்படி ஆஜானுபாகுவான தோற்றம், வலிமையான கை கால்களுடன், மிரட்டலாக போஸ் கொடுக்கிறார் நடாலியா குஸ்னெட்சோவா.

இவர் யார்? ஆண்களே பார்த்து பொறாமைக்கொள்ளும் இவர், உலகின் மிக வலுவான பெண்மணியாக எப்படி ஆனார்?

1991ல் பிறந்த நடாலியா ரஷ்யாவை சேர்ந்த ஒரு பாடி பில்டர். மாஸ்கோ அகாடமி ஆஃப் ஃபிசிக்கல் கல்ச்சரில் பட்டம் பெற்றார்.

ஆனால், தன் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் அவர் இப்படி இல்லை. இவர் மிகவும் ஒல்லியான, எடை குறைவான பெண்மணியாக இருந்தார். இதனால் பலரது கேலிக்கும் ஆளானார் நடாலியா.

இதனை தொடர்ந்து, தன் தோற்றத்தை மாற்ற உடற்பயிற்சி மேற்கொள்ள தொடங்கினார் நடாலியா. 14 வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியபோது அவருடைய எடை 40 கிலோ மட்டுமே.

பயிற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கிய முதல் வருடத்திலேயே நல்ல மாற்றத்தை கண்டுள்ளார் நடாலியா. தான் விரும்பியவாறு தோற்றம் மாறியதால், தன்னால் எவ்வளவு தூரம் போகமுடிகிறது என தெரிந்துகொள்ள விரும்பினார் நடாலியா.

முதலில் பவர் லிஃப்ட்டர் ஆக வேண்டும் என்று விரும்பியவர், உடற்பயிற்சியின் மேல் ஏற்பட்ட அதீத காதலால் பாடி பில்டிங் மேல் கவனம் செலுத்த தொடங்கினார்.

தன் ஃபிட்னஸ் மீது அதிகமாகவே கவனமாக இருக்கும் நடாலியா, ஒரு நாளைக்கு 7 வேளைகள் சாப்பிடுகிறார். பாடிபில்டிங், ஃபிட்னஸ் போட்டிகளில் கலந்துகொண்டு பல முறை பட்டம் வென்றுள்ளார்.

நடாலியாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். 2018,19 ஆம் ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கிய எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து, தற்போது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களையும், ஃபேஸ்புக்கில் 50 ஆயிரம் ஃபாலோவர்களையும் கொண்டுள்ளார் நடாலியா

சமூக வலைத்தளங்களில் இவரை பின் தொடரும் பலரும், நடாலியா தங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் எனக் கூறியுள்ளனர். எனினும், வழக்கமாகவே இருக்கும் எதிர்மறை விமர்சனங்களும் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத நடாலியா, பாடி பில்டிங் மீது கவனம் செலுத்தி வருகிறார், மேலும் பலருக்கும் உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?