நாட்டின் ஒவ்வொரு இடத்தில் பல வித்தியாசமான கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அவற்றின் காரணங்களும் புதுமையாக இருந்து நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
அப்படி நாய்களுக்கென ஒரு திருவிழா கொண்டாடப்படுவது குறித்து உங்களுக்கு தெரியுமா? எங்கே கொண்டாடப்படுகிறது, எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
நேபாளம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஐந்து நாள் திகார் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். நேபாளத்தின் 30 மில்லியன் மக்கள் தொகையில் 80% இந்துக்களாக உள்ளனர். அங்குள்ள இந்துக்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக குகுர் திகார் கருதப்படுகிறது.
குகுர் திகார் பண்டிகைகளின் இரண்டாவது நாளை, நாய் திருவிழாவாக அந்த மக்கள் கொண்டாடி வருகின்றனர். நேபாளத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இந்த நாய் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மனிதர்களை போன்று நம்மில் ஒருவராக, நண்பனாக இருக்கும் நாய்களை மக்கள் வணங்கி வருகின்றனர். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே உள்ள பாசத்தை இந்த பண்டிகை இன்னும் வலுப்படுத்துகிறது.
தங்கள் நாய்களை குளிப்பாட்டி, சிவப்பு திலகமிட்டு, மாலைகள் அணிவித்து சிறப்பு உபசரிப்புகளை செய்கின்றனர்.
இது இந்து பாரம்பரியத்தில் உள்ள திலக சடங்குகளுடன் ஒத்துப்போகிறது. பூஜை முடிந்ததும் நாய்களுக்கு சிறப்பு உபசரிப்பும், நிறைய உணவுகள் விருந்தாக அளிக்கப்படுகிறது.
நாய்களுக்கு பால், முட்டை, இறைச்சி என எல்லாமே வழங்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டுமல்லாது, தெருநாய்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
மரணத்தின் கடவுளான எமதர்ம ராஜா தனது தூதராக நாய்களையே வைத்திருப்பதாக நேபாள மக்கள் கருதுகின்றனர்.
இதனால் நாய்களுக்கு பூஜை செய்து வழிபடுவது, அவர்களின் வேண்டுதலை அவை கடவுளிடம் கொண்டு சேர்ப்பதாகவும் நாய்களை வழிபட்டால் மரணத்துக்குப் பின்னும் நல் வாழ்வு அமையும் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.
மேலும் விலங்குகளை வணங்குவது மகிழ்ச்சியைத் தரக்கூடிய,ஆன்மிக நம்பிக்கையாக இருக்கிறது.
நாய்கள் இந்தப் பண்டிகையில் பிரதான இடம் பிடித்தாலும் பூனை, மாடு, காகம் என மற்ற உயிர்களையும் இந்த பண்டிகையின் போது வழிபடுகிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust