New York முதல் Mumbai வரை : உலகின் பணக்கார நகரங்கள் எவைத் தெரியுமா? Twitter
உலகம்

New York முதல் Mumbai வரை : உலகின் பணக்கார நகரங்கள் எவைத் தெரியுமா?

Antony Ajay R

உலகிலேயே பணக்கார நகரம் எது என்பதைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறது. முதலீட்டு இடம்பெயர்வு நிறுவனம் ஹென்லி & பார்ட்னர்ஸ் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

நாம் எதிர்பார்ப்பது போலவே அமெரிக்காவில் பிக் ஆப்பிள் சிட்டி என அழைக்கப்படும் நியூயார்க் நகரம் தான் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நகரம் எனத் தெரியவந்துள்ளது.

நியூ யார்கில் 3,40,000 பெரும்பணக்காரர்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் அங்குள்ள மில்லியனர்களின் எண்ணிக்கை 40% உயர்ந்திருக்கிறது. இதனால் தொடர்ந்து பணக்கார நகரமாக திகழ்கிறது நியூயார்க்.

நியூ யார்க் மட்டுமல்ல பிற அமெரிக்க நகரங்களும் இதில் இடம் பிடித்திருக்கின்றன.

இரண்டாம் இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் இருக்கிறது. அடுத்தபடியாக சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி இருக்கிறது. இந்த நகரங்களில் முறையே 2,90,300 மற்றும் 2,85,000 மில்லியனர்கள் இருக்கின்றனர்.

Tokyo

உலகம் முழுவதும் உள்ள 97 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள 4 நகரங்கள் முன்னணி இடம் பெற்றிருக்கின்றன. நியூ யார்க், வளைகுடா பகுதி, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ.

சீனாவின் இரண்டு நகரங்கள் முன்னணி இடம் பெற்றிருக்கின்றன. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்.

உலகின் முதல் 50 பணக்கார நகரங்களில் 10 நகரங்களில் அமெரிக்காவைச் சேர்ந்தவை. சீனா மாற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து முறையே 5 மற்றும் 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

சான் பிரான்சிஸ்கோவுக்கு அடுத்தபடியாக லண்டன் அதிக பணக்காரர்கள் வாழும் இடமாக இருக்கிறது. 5வது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.

London

எப்போதும் இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும் ரஷ்ய நகரங்கள் உக்ரைன் போர் காரணமாக பின்தங்கியுள்ளன. ரஷ்யவின் பணக்காரர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ்கோ நகரம் மட்டும் இதனால் 38% மில்லியனர்களை இழந்துள்ளது.

இந்தியா

இந்தியாவிலேயே பணக்கார நகரமாக இருப்பது மும்பை. இங்கு 59,400 மில்லியனர்களும் 29 பில்லியனர்களும் இருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மும்பையில் 65 சதவீதம் பணக்காரர்கள் அதிகரித்துள்ளனர்

Mumbai

அடுத்தபடியாக டெல்லியில் 30,200 மில்லியனர்கள் இருக்கின்றனர். 16 பில்லியனர்கள் வசிக்கின்றனர். அடுத்த இடத்தில் 12,400 மில்லியனர்களுடன் பெங்களூரு இருக்கிறது. இங்கு 8 பில்லியனர்கள் வசிக்கின்றனர்.

கொல்கத்தாவில் 12,100 மில்லியனர்களும் 7 பில்லியனர்களும் இருக்கின்றனர். ஹைத்ராபாத்தில் 11,100 மில்லியனர்களும் 5 பில்லியனர்களும் இருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?